Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்..
பெரும்பாலான மக்கள் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் வீட்டு ரசாயன ஆபத்துக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். சில சமையல் பாத்திரங்களும் எவ்வாறு நம் உடலை பாதுகாக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் காட்டுகின்றன. சில "பாரம்பரிய " சமையல் பாத்திரங்கள் எவ்வாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கின்றது என்பதை காண்போம்.
ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்!
இங்கு சமையல் பாத்திரங்களின் வகைகளும், அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (STAINLESS STEEL)
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல தரங்கள் உள்ளன. வழக்கமாக பயன்படுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் ஸ்கிராப் உலோகம் உட்பட பல்வேறு உலோகங்கள் இருக்கும். "கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் சமைக்கு போது, குரோம் மற்றும் நிக்கலை உணவுப் பொருள்களுடன் வேதி வினை புரிய செய்கின்றன" என்கிறார் டாக்டர் ஷெல்டன். எனவே தூய்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உணவானது உயர் தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் சமைக்கப் பட வேண்டும்.

வார்ப்பிரும்பு (CAST IRON)
உலோகங்களிலேயே மிகவும் நுண்ணியது. சில மக்கள் ஒரு வார்ப்பிரும்பு தொட்டியில் இருந்து இரும்பு பெற முடியும் என்று நம்புகின்றனர். உண்மை என்னவென்றால் இரும்பானது பெரசு மற்றும் பெரிக்கு வடிவில் வருகிறது. உங்கள் உடல் வார்பிரும்பு பாத்திரத்தில் இருந்து வரும் இரும்பை உட்கிரகித்துக் கொள்ள இயலாது.

கண்ணாடி/எனாமல் பூசியவை (GLASS / ENAMEL COATED)
தவறான வெப்ப விநியோகம். உணவுகள் அடிப்பிடிக்கும் மற்றும் ஒட்டிக் கொள்ளும். ஈயத்தை கொண்டிருக்கும். ஈயம் இனப்பெருக்க மண்டலத்திற்கு தீங்கு மற்றும் கற்றல் குறைபாடுகளை ஏற்படுத்தும். 65 எரிவாயு காரியமற்றதாக இருந்தால் நமது சமையல் பாத்திரங்கள் அவ்வாறு இருக்கலாம்.

நாண் ஸ்டிக்/டெஃப்லான் (NON-STICK COATED / TEFLON)
டெஃப்லான் ரெசின்களை 393ºF வெப்பநிலைக்கு மேல் காட்டும் போது அது ஃப்ளு காய்ச்சல் அறிகுறிகளான குளிர் காய்ச்சல், உடல் வலி, குமட்டல் மற்றும் அவ்வப்போது வாந்தி போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. நாண் ஸ்டிக் பாத்திரங்கள் தயாரிக்கப் பயன்படும் சி-8, என்ற ரசாயனம் மனிதர்களில் பிறப்பு குறைபாடுகள் மற்றும் ஆய்வக விலங்குகளில் புற்றுநோய் ஆகியவற்றோடு தொடர்புடையதாக உள்ளது. இந்த ரசாயனம் 4 ஆண்டுகள் வரை இரத்தத்தில் இருக்கும், மேலும் இதனை தாய்ப்பாலிலும் காட்ட இயலும்.

அலுமினியம் (ALUMINUM)
cமிகவும் மென்மையான உலோகம். உணவு மற்றும் பாத்திரத்திற்கு இடையே தீவிர வேதி வினை நிகழும். அலுமினியத்தில் சமைக்கப்படும் அனைத்து காய்கறிகளும் ஹைட்ராக்சைடு எனும் விஷத்தை உருவாக்குகின்றன. இவை வயிற்றுப் புண்கள் மற்றும் கோலிடிஸ் போன்ற செரிமான, உற்பத்தி வயிறு மற்றும் இரைப்பை பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. மேலும் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், கிரேட் பிரிட்டன், சுவிச்சர்லாந்து, ஹங்கேரி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அலுமினிய சமையல் பாத்திரங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

316Ti ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (316Ti STAINLESS STEEL)
சமையல் பாத்திரத்தில் சமைக்கும் மேற்பரப்பில் 316Ti ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது சமையல் பாத்திர துறைகளிலேயே மிகவும் உயர் தரம் வாய்ந்ததாகும். இதில் நீங்கள் எண்ணெய் இல்லாமல் சமைக்கலாம். மேலும் வழக்கமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை விட சுத்தம் செய்ய மிகவும் எளிதானது.



Click it and Unblock the Notifications
