Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆரோக்கியத்திற்கு புத்துயிர் அளிக்கும் இந்தியாவின் ஸ்பெஷல் தேனீர் வகைகள்!!!
நமது நாட்டில் ஒரிஜினாலிட்"டி" இருக்கிறதோ இல்லாயோ, பன்க்ச்சுவாலிட்"டி" இருக்கிறதோ இல்லையோ சோர்வின்றி உழைக்கவும் வகை, வகையாக நிறைய "டீ" இருக்கின்றன. நள்ளிரவு எத்தனை மணிக்கு தூக்கம் வரவில்லை என்று வெளிவந்தாலும், ஏதேனும் ஓர் தெரு முனையில் ஓர் ஆள் சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.
நம் நாட்டிற்கும் "டீ"க்கும் இவ்வளவு ஒட்டுறவு இருந்தாலும், "டீ" சீனா கண்டுபிடித்த பானம் என்பது கொசுறு தகவல். ஆயினும் கூட, மூட்டை தூக்கும் தொழிலாளி முதல், ஐ.டி. பணிபுரியும் டீம் லீடர் வரை இந்தியாவில் "டீ"க்கு அடிமை. இனி, ஆரோக்கியத்திற்கு புத்துயிர் அளிக்கும் இந்தியாவின் ஸ்பெஷல் தேனீர் வகைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

ஏலக்காய் டீ
தினமும் காலையில் ஏலக்காய் டீ குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது. இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது. தலை வலி மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

இலவங்கப்பட்டை டீ
இலவங்கப்பட்டையில் அதிகமான ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இது கொழுப்பு அதிகம் கூடாமல் தடுக்க உதவுகிறது. வெயில் அதிகமாக இருக்கும் காலத்தில் இலவங்கப்பட்டை டீ குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது.

குங்குமப்பூ டீ
பொதுவாக குங்குமப்பூவை பாலில் கலந்து தான் பருகுவார்கள். ஆனால், இதை டீ'யாகவும் பருகலாம். இது புற்றுநோய் காரணிகளை அழிக்கும் குணம் கொண்டது. மற்றும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதயக் கோளாறுகளை குறைக்க உதவும்.

சீரக டீ
கோடையில் தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் சீரக டீ பருகலாம். இது நல்ல தூக்கம் தரவல்லது. மற்றும் உடலை இலகுவாக்கும் தன்மையுடையது. தூக்கமின்மைக்கு இது ஒரு சிறந்த தீர்வு என்று கூறப்படுகிறது.

சீமைச்சாமந்தி டீ
செரிமானத்தை சீராக்கும் தன்மையில், சீமைச்சாமந்தி டீ'யைவிட சிறந்த பொருள் வேறொன்று இருக்க முடியாது. மற்றும் இது பதட்டம், மன அழுத்தம் விலக உதவும். கருவளையம் போன்ற சருமம் சார்ந்த கோளாறுகளுக்கும் சீமைச்சாமந்தி டீ சீரிய முறையில் பயனளிக்கும்.



Click it and Unblock the Notifications