வாழ்க்கைய என்ஜாய் பண்ண நினைக்கிறீங்களா? அப்ப இத பண்ண மறந்திடாதிங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

பிறப்பை போலவே இறப்பும் இயற்கையானது தான். ஆனால், யாருக்கு தான் இறக்கப் பிடிக்கும். முடிந்த வரை அனைவரும் அவர்களது வாழ்நாட்கள் அதிகரிக்க தான் இறைவனிடம் வேண்டுவார்கள். வேண்டினால் மட்டும் போதுமா என்ன? பிறப்பை கொடுத்தவன் தான் இறப்பையும் தீர்மானிக்கிறான். ஆனால், அந்த தீர்மானம் நமது ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்படுகிறது. ஆம்! நமது ஆரோக்கியம், உடல்நலத்தின் மேல், நாம் எவ்வாறு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ, அவ்வாறு தான் நமது வாழ்நாளும் நீட்டிக்கப்படும்.

ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவதற்கான மிகச்சிறந்த 20 உணவு பழக்கங்கள்!!!

ஆரோக்கியமானப் பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், உடல்திறனுடன் அதிக நாள் உயிர் வாழ்கின்றனர். அதே சமயம் புகை, மது, மாது, போதை பழக்கங்கள் போன்றவற்றை கையாள்பவர்கள் அதற்கான காலநேரப் பயன்படி உயிர் வாழ்கின்றனர். உங்களது வாழ்நாள் அதிகரிக்க வேண்டும் எனில், அது கடவுளின் கைகளில் இல்லை. உங்களது கைகளில் தான் இருக்கிறது. பழரசம் அருந்துவதற்கு பதிலாக சாராயம் குடித்துக் கொண்டிருந்தால் கடவுளா வந்து மருத்துவம் செய்வார். இல்லை, உங்களது வாழ்நாள் கணக்கு உங்கள் கையில் தான் இருக்கிறது. சில உணவு பழக்கங்கள் மற்றும் உடல்நல பழக்கங்களை நீங்கள் பின்பற்றினால் நீண்ட நாள் உயிர் வாழலாம். அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்....

நோயின்றி வாழ்வதற்கான சில இரகசியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

காலை வேளைகளில் நாம் உண்ணும் உணவு தான், அன்றைய நாளைக்கான ஊட்டச்சத்துகளை அளிக்கவல்லது. எனவே காலை உணவுகளை முடிந்த வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம். நல்ல உணவு பழக்கம் தான், நல்ல ஆரோக்கியம் தரும். நல்ல ஆரோக்கியம் தான் உங்களது வாழ்நாளை அதிகரிக்க உதவும்.

தேவாமிர்தம்

தேவாமிர்தம்

இதை எல்லாம் தாண்டி தேவாமிர்தம் என கருதப்படும் நீராகாரம் பழைய சோறு. காலை வேளையில் பழைய சோறு சாப்பிடுவதனால் நன்கு உடல்திறன் அதிகரிக்கும். ஆனால், குளிர் காலங்களில் பழைய சோறு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இது குளிர்ந்த உணவென்பதால் குளிர் காலத்தில், சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவுகள் தரலாம்.

நிம்மதியாக இருங்கள்

நிம்மதியாக இருங்கள்

இன்பம், துன்பம் இரண்டுமே மேகங்களை போல, வருவதை தடுக்க முடியாது, வந்தவை நிலையென கருத முடியாது. இதையறிந்து, இன்பமானாலும், துன்பமானாலும் அதை மனதளவில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் நிம்மதியாக இருங்கள்.

நட்ஸ்

நட்ஸ்

நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை நிறைவாக தரும் உணவுகள் தான் நட்ஸ். பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவை தினமும் அளவாக நமது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலனுக்கு நல்லது. இது, இதயம், நிறையீரல், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க பெருமளவில் உதவுகிறது.

புகையை கை விடுங்கள்

புகையை கை விடுங்கள்

நமது உடல் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பது புகைப்பழக்கம். புகைப்பழக்கம் நமது வாழ்நாளை 10% - 30% வரை குறைக்கிறது என மருத்துவ நிபுணர்கள் உலக அளவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். எனவே, வாழ்நாள் அதிகரிக்க வேண்டுமெனில் புகை பழக்கத்தை கை விடுங்கள்.

ஓய்வு

ஓய்வு

பெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு நிறைய உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. எனவே, மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்யாமல். அவ்வப்போது கொஞ்சம் உங்களது உடலுக்கு ஓய்வு கொடுங்கள். இது, உங்கள் மனதையும் உடலையும் அழுத்தம் அடைவதில் இருந்து பாதுகாக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்ய நீங்கள் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. காலை மற்றும் மாலை வேளைகளில் வாக்கிங், ஜாகிங் மற்றும் ரன்னிங் பயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது வீட்டில் இருந்தவாறே ஸ்கிப்பிங் செய்யலாம், புஷ்ஷப், ஸ்ட்ரெச்சிங் போன்ற எளிதான உடற்பயிற்சிகள் செய்து உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

 யோகா

யோகா

யோகா நமது முன்னோர் கண்டறிந்ததில் மகத்தான ஒன்று. மனதை ஒருமுகப்படுத்துதலின் மூலமாக நாம் எதை வேண்டுமானாலும் சரி செய்ய இயலும் என்பதற்கான நல்ல உதாரணம். யோகா செய்வதன் மூலம், நமது உடல்நிலை, மனநிலை போன்றவற்றை சிறந்த வகையில் முன்னேற்றம் அடைய செய்யலாம். இதனால் உங்களது வாழ்நாளும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Healthy Habits That Helps You To Live Longer

Do you want to increase your life span. Make these all a part of your life and get bebefits to live longer.
Subscribe Newsletter