மேலோகத்தில் எமனை சந்திக்க ஆசையா? அப்ப பர்கர் சாப்பிடுங்க...

Posted By: viswa
Subscribe to Boldsky

உலகின் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து நாமும் ஓடிக்கொண்டிருகின்ற இந்த காலக்கட்டத்தில், அனைத்திலும் நமக்கு அவசரம் தான். காலை எழுவதில் இருந்து மறுநாள் விடியும் வரை அனைத்தும் நினைத்தவுடன் நடக்க வேண்டும். அதற்கு வேகம் தேவை. பொறுமையாக குடும்பத்தோடு அமர்ந்து பேசவே நம்மில் நிறைய பேருக்கு நேரமில்லை. இதில், அமர்ந்து உணவு உண்ண எங்கே நேரம். அதனால் தான் நாமும் பின்பற்ற ஆரம்பித்தோம் மேற்கத்திய கலாச்சார உணவுகளான பிட்சா, பர்கர், நூடுல்ஸ் எல்லாம். இவை அனைத்தும் மைக்ரோ-ஓவனுக்கு ஏற்ற உணவு மட்டுமல்ல, மேலோக எமனுக்கும் ஏற்ற உணவு. ஏனெனில், அவ்வளவு சீக்கிரம் அங்கே சென்றடைந்துவிடலாம்.

அதிலும் முக்கியமாக பர்கர் பற்றி நாம் நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனெனில், இது பெரியவர், சிறியவர் என பேதமின்றி நம் நாட்டில் இப்போது அனைவரும் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவாக மாறியுள்ளது. அப்படி என்ன இதில் இருக்கிறது என நாம் எல்லாம் இதை ருசித்து சாப்பிடுகிறோம் என்று கேள்வி கேட்டால் நம்மில் பலரிடம் இதற்கு பதில் இருக்காது. ஏனெனில், நமது கௌரவ பிரச்சனை, அவன் சாப்பிடுகிறான், நானும் சாப்பிடுகிறேன் என்று தான் இன்று பலர் அதன் நன்மை, கெடுதல் பற்றி எதுவும் தெரியாது சாப்பிட்டுக் கொண்டிருகின்றனர். உங்களுக்கு பர்கர் உண்ணும் பழக்கம் இல்லை எனிலும், உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இருக்கும். நீங்கள் கட்டாயம் படிக்கச் வேண்டிய கட்டுரை இது. பர்கர் சாப்பிடுவதனால் ஏற்படும் தீங்குகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய பாதிப்புகள்

இதய பாதிப்புகள்

பர்கரில் அதிக அளவில் கொழுப்பு இருக்கிறது. அதுவும் பலவகை கொழுப்புகளின் கலப்பு உள்ள கொழுப்பு. இது, ஒவ்வொரு வகை பர்கரை பொறுத்து கொழுப்பின் அளவு மாறுபடும். இந்த கொழுப்பு நேரடியாக நமது இரத்தத்தில் உள்ள கொழுப்பை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதய பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இரத்தக்கொதிப்பு

இரத்தக்கொதிப்பு

பர்கரில் சோடியத்தின் அளவு அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. நம் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும் போது, இரத்தக்கொதிப்பும் இதய பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

உடல் எடை கூடும்

உடல் எடை கூடும்

கொழுப்பு மட்டுமின்றி கலோரிகளும் அதிகம் உள்ள பர்கர், நமது உடல் எடையை தாறுமாறாக அதிகரிக்க உதவும். பீப்பி போல உள்ளவர்கள் கூட பர்கரை தினமும் சாப்பிட்டு வந்தால் ஒரு சில மாதங்களில் பீப்பா ஆகிவிடலாம். உடல் எடை கூடும் போது இதய பாதிப்புகளுக்கான வாய்ப்பும் கூடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

இரத்தத்தில் சேரும் கொழுப்பினால், இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைகிறது. மற்றும் இதனால் உடல் சோர்வடைவதனால் இதயத்துடிப்பும் குறைகிறது.

ஊட்டச்சத்து குறைப்பாடு

ஊட்டச்சத்து குறைப்பாடு

தினம்தோறும் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என புரதம், வைட்டமின், நார்ச்சத்து, இரும்புச்சத்து என பல இருக்கின்றன. வெறும் சுவைக்காக மட்டும் அன்றாட தேவைக்கான ஊட்டச்சத்துகள் இல்லாத பர்கரை உட்கொண்டு வந்தால், உடலில் சுமைகளும் நிறைய சேர்ந்துவிடும்.

வயிற்று புண்

வயிற்று புண்

இதில் சுவைக்காகக் கலக்கப்படும் பல இரசயான பொருட்களால் வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்றுப்புண் போன்றவை ஏற்பட காரணங்கள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, உங்கள் வீட்டில் இருக்கும் ககுழந்தைகள் அதிகம் பர்கர் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

டைப் 2 நீரிழிவு நோய்

டைப் 2 நீரிழிவு நோய்

அதிக அளவில் துரித உணவுகள் உட்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோயும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சரியான நேரத்திற்கு உணவு

சரியான நேரத்திற்கு உணவு

வீட்டு சாப்பாடு என்ற போது தவறாமல் சரியான நேரத்திற்கு உணவு உட்கொண்டு வந்த நமது பழக்கம். துரித உணவை உட்கொள்ள ஆரம்பித்த பின் மாறிவிட்டது. முக்கியமாக பிட்சா, பர்கர் போன்ற உணவுகளை நாம் நினைத்த நேரத்திற்கு கிடைப்பதால் கண்ட நேரங்களில் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது, இதனால் அஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன.

வீண் செலவு

வீண் செலவு

நமது கௌரவத்தை வெளிக்காட்டுகிறோம் என நம் உடலுக்கு ஊட்டச்சத்துகள் ஏதும் தராத உணவுகளுக்கு நாம் வீண் செலவுகள் செய்து வருகிறோம். இதனால் நன்மை தவிர்த்து நிறைய தீமைகள் மட்டுமே இருக்கின்றன. இதற்கு ஏன் நாம் வீணாக செலவு செய்ய வேண்டும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

துரித உணவுகள் உட்கொள்வதினால் உடல் எடை, இரத்தக்கொழுப்பு, இரத்தக்கொதிப்பு மற்றும் இதய பாதிப்புகள் என பல கோளாறுகள் அதிகரிக்கும் காரணத்தால், காலப்போக்கில் மன அழுத்தமும் அதிகரிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறிகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Bad Effects Of Burgers

Are you madly enjoying to have burgers. Then you should know about, 10 bad effects of burgers.