Latest Updates
-
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
அப்பெண்டிக்ஸ் என்னும் குடல்வால் அழற்சி இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
குடல்வால் அழற்சி என்பது நமது பெருங்குடலில் ஒட்டியிருக்கும் புழு போன்ற பையில் ஏற்படும் அழற்சி ஆகும். குடல்வால் அழற்சி நோயில் அதிகப்படியான வலி காணப்படும். மேலும் இதற்கு அறுவை சிகிச்சை தேவையான ஒன்றாகும்.
இந்த நோயில் குடல் வாலானது வெடித்து உயிருக்கே ஆபத்தான நிலை கூட ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும் அதற்கு முன்னரே அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர் இதை நீக்கிவிடுவார்.
ஆரம்ப கட்டத்தில் இந்நோயில் அடிவயிற்றில் வலி காணப்படும். மேலும் இத்துடன் பல்வேறு அறிகுறிகளும் காணப்படும். எனவே கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது.

தொப்புளைச் சுற்றி வலி
முதலில் தொப்புள் பகுதியில் தான் வலி இருக்கும். பின்பு இந்த வலியானது படிப்படியாக அடிவயிறு வரை பரவும்.

அதிகரிக்கும் தாங்க முடியாத வலி
வலியானது முதலில் தாங்கக்கூடிய வலியாக இருந்து பொறுக்க முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே போகும். இவை சில மணிநேரங்களுக்குள் ஏற்படும். இந்த வலியால், நம்மால் எந்த வேலையிலும் ஈடுபடமுடியாது.

காய்ச்சல்
வயிற்று வலியுடன் சாதாரண காய்ச்சலும், காணப்படும். அழற்சி மிக அதிகமாகும் போது காய்ச்சலின் வேகமும் அதிகமாகும்.

குமட்டல், வாந்தி
இந்நோயில், அடுத்த முக்கியமான அறிகுறி, குமட்டலும் அதனைத் தொடர்ந்து வாந்தியும், காணப்படும். இது சாதாரண இரைப்பை மற்றும் குடல் தாபிதத்தில் காணப்படும் குமட்டல், வாந்தி போன்றே இருக்கும். ஆனால், 12 மணிநேரத்திற்கு மேல் இந்த நிலை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வயிற்றுப்போக்கு
பலருக்கு வயிற்று வலியுடன் கூடவே வயிற்றுப்போக்கும் காணப்படும். சிலருக்கு சீழ் கலந்த கழிச்சல் ஏற்படும். இந்த நிலையில் உங்கள் மருத்துவரை உடனே அணுகி மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியாக காற்றுப் பிரிதல்
ஏப்பம் மற்றும் ஆசன வாய் வழியாக காற்றுப் பிரிவது அசாதாரண அறிகுறிகள் இல்லை என்றாலும் வயிற்று வலியுடனே இவை இருந்தால், மருத்துவரை உடனே ஆலோசிப்பது நன்று.

வயிற்றுப்பகுதியில் காணப்படும் தொடுவலி
உங்களுக்கு குடல் வால் அழற்சி ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள உங்களது அடிவயிற்றை நன்கு அமுக்கிப் பார்க்கவும். அப்போது பொறுக்க முடியாத வலி இருந்தால், இது குடல்வால் அழற்சியினால் ஏற்படுகிறது என்று அறிந்து கொள்ளவும்.

சிறுநீர் வலியுடன் இறங்குதல்
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது வயிற்று உறுப்புகளில் அழுத்தம் ஏற்படுவதால் இந்த வலி காணப்படுகிறது.

உடல் வலி
லேசான அல்லது அதிக வலியானது, மேல் மற்றும் அடிவயிறு, முதுகு மற்றும் குடலில் காணப்படும்.

மலச்சிக்கல்
இது பொதுவான அறிகுறி அல்ல. இருப்பினும் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications
