Latest Updates
-
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா -
150 ஆண்டுகளுக்கு பின் பௌர்ணமியில் உருவாகும் 2 யோகங்கள்: இன்று இந்த 5 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
கோதுமை ரவா பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 29 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்குமாம் -
ஜூன் 30-ல் நிகழும் ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும்
உடலை சரியான நிலையில் வைத்திருக்க உதவும் வழிகள்!!!
உடல் உயிரின் உறைவிடம் ஆகும். திருமூலரும் உடலே கோவில்' என உடலை போற்றுகின்றார். அத்தகைய உடலின் ஆரோக்கியத்திற்கு முதுகு மற்றும் கழுத்து வலி ஒரு பெரும் சவாலாக விளங்குகிறது. இன்றைய நவீன வாழ்க்கை முறை நம்முடைய ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. ஆகவே உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
யாராக இருந்தாலும் என்ன வேலையில் இருந்தாலும், பின்புறத்தை வலிமையாக்கவும், சரியான முறையில் வைத்திருக்க உதவும் எளிய வழிமுறைகள் உள்ளன. இந்த எளிய வழிகள் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்து வருகின்றன. இந்த நடைமுறைகளை சரியாக பின்பற்றி ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். இப்போது அந்த எளிய நடைமுறைகள் என்னவென்று பார்போம்.

தூக்கம்
தூங்கும் பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட பல தலையணைகளை தலைக்கு ஆதரவாக வைத்துக் கொள்வது அல்லது பெரிய மென்மையான ஒத்து வராத தலையணையை உபயோகிப்பது போன்ற செய்கைகள், கழுத்து மற்றும் முதுகு பிரச்சனைகளை தூண்டி விடும். தூங்கும் பொழுது தலைக்கு ஒரு சிறந்த ஆதாரம் வேண்டும். ஆனால் அது தலையை முதுகெலும்புடன் நேர் கோட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வீட்டு வேலை
வீட்டு வேலை செய்வது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். எனவே, வீட்டை சுத்தப்படுத்தும் பொழுது நிமிர்ந்து நின்று துடைப்பானை முன்னும் பின்னும் நகர்த்தாமல் உடலை வருத்தி சுத்தம் செய்யுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது வயிற்று தசைக்கு வேலை கொடுக்கும். மேலும் முழங்காலை மடக்கி வேலை செய்யுங்கள். இடுப்பை வளைக்க வேண்டாம்.

ஜலதோஷம்
தும்மல் முதுகு வலியை உருவாக்கும் முதல் ஐந்து காரணங்களில் ஒன்று என மருத்துவர்கள் கூறுகிறர்கள். தும்மலின் பொழுது ஏற்படும் ஒரு திடீர் விசை கழுத்து மற்றும் பின்புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தும்மல் வருவதை உணரும் பொழுது, முழங்காலை மடக்கி கால்களுக்கு அழுத்தத்தை கொடுங்கள். இது தும்மலின் பொழுது ஏற்படும் எதிர்பாராத விசையை கணிசமாக குறைக்கும்.

ஸ்டைல்
உயரமான ஹீல்ஸ், குறிப்பாக கூரான முனைச் செருப்புகள், இடுப்பு மற்றும் முதுகு மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய செருப்புகளில் உடலின் எடை முழுவதும் குதிகாலுக்கே செல்கிறது. எனவே ஒரு மென்மையான உட்பகுதியை உடைய செருப்பை உபயோகப்படுத்துவது நல்லது.

டிவி
டிவியின் முன்னால் ஆழ்ந்து போவது, பின்புறத்திற்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கிறது. குறிப்பாக ஒரு மென்மையான ஷோபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது, பின்புறத்தை பாதிக்கும். ஆகவே ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, இடுப்பு முழங்காலை விட சற்று உயரமாக இருக்கும் படி உட்கார்ந்து டிவி பார்பது மிகவும் நல்லது.

மேஜை
உட்கார்ந்த நிலையில் மற்றும் கணினி விசைப்பலகையுடன் வேலை பார்ப்பது போன்றவை பின்புறத்தை அதிகம் பாதிக்கும். இது அதிகப்படியான பாரம் தூக்குவதனால் உண்டாகும் பாதிப்பை விட பின்புறத்திற்கு அதிக பாதிப்பை உருவாக்கும். அடுத்தவர் தயவில் வாழும் மனிதனே நாற்காலியில் வாழ்க்கை நடத்துவான். எனவே அமரும் பொழுது ஒரு மென்மையான அடிப்பாகம் கொண்ட நாற்காலியை உபயோக்கவும். மேலும் முழங்கால் இடுப்பிற்கு கீழே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கணிப்பொறி
தரையில் கால்களை சரி சமமாக வைத்துக் கொள்ள வேண்டும். கணிப்பொறியின் திரையின் மேல் புறம் கண்களுக்கு நேர் கோட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது திடிரென மயங்கி விடாமல் தடுக்கும். மவுஸை பயன்படுத்துவதால் கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரிகட்ட காலை மற்றும் நண்பகல் வேளைகளில் கைகளை மடியில் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். பின் மெதுவாக தோள்பட்டைகளை 10 வினாடிகளுக்கு முன்னும் பின்னுமாக திருப்பவும்.

தொலைபேசி
வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுது தொலைபேசியில் பேச வேண்டியிருந்தால் எழுந்து நின்று பின்புறத்தை சற்றே வளைத்து பேச வேண்டும். தொலைபேசியை காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையில் இடுக்கிக் கொண்டு எப்பொழுதும் பேச வேண்டாம். அவ்வாறு பேசுவதனால் கழுத்து மற்றும் தோள்பட்டைகளை விறைத்து போகச் செய்யும்.

கார் ஓட்டும் பொழுது
காரில் உள்ள ஹெட் ரெஸ்ட்டை சரியான உயரத்தில் வைத்திருக்க வேண்டும். அது விபத்தில் சிக்கும் பொழுது ஏற்படும் திடீர் மற்றும் எதிர்பாராத விசைக்கு எதிராக கழுத்தை பாதுகாக்கும். மேலும் கார் ஓட்டும் பொழுது பின்புறம் பார்க்க உதவும் கண்ணாடியை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அது சரியான நிலையில் இருந்தால் மட்டுமே நேராக அமர்ந்து காரை ஓட்ட முடியும். போக்குவரத்து நெரிசலில் சிக்னலுக்காக வண்டியை நிறுத்தும் பொழுதெல்லாம் ஆழ்ந்து மூச்சை உள்ள இழுத்து விடுங்கள். இந்த பயிற்சி வயிற்று தசைகளை வலுவாக்கும்.

உடற்பயிற்சி
ஒவ்வொரு நாளும் சுமார் 15 முதல் 30 வினாடிகள் வரை தசைகளை நீட்சியடையச் செய்து, நெகிழச் செய்வது பின்புறத்தை பாதுகாக்கும். இதை சீராக கடைப்பிடித்தால் வித்தியாசத்தை உணரலாம். ஆனால், குனிந்து காலை தொட்டு எழுவது என்பது நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதற்கு சாட்சியாகாது. ஆகவே உடலை ஆறு திசைகளிலும் நகர்த்த வேண்டும். அதாவது முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர வேண்டும்; வலது மற்றும் இடது புறங்களில் நகர வேண்டும்; பக்கவாட்டு திசையில் இடது மற்றும் வலது புறமாக சுழல வேண்டும்; இவை அனைத்தையும் உட்கார்ந்து கொண்டு, நின்று கொண்டு மற்றும் படுத்துக் கொண்டு செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications