Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
ரெட் ஓயின் குடித்தால் மூளை ஆரோக்கியமாக இருக்குமாம்!!!
குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். இன்று நம் நாட்டில் பெருகிவரும் மதுபானக்கடைகள் மக்களை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்க செய்கின்றது. என்றாவது ஒரு நாள் நிகழும் வீட்டு நிகழ்ச்சிகள் அல்லது வேலை நிமித்தமான சந்திப்புகள் போன்றவற்றில் மதுபானங்கள் அருந்துவதில் தவறு கிடையாது. ஆனால், அதையே பழக்கமாக கொண்டு தினமும் அருந்துவது உடல்நலத்தை கெடுத்துவிடும்.
நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். ரெட் ஒயினை மிதமாக அருந்துவது சில நேரங்களில் உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கும். ரெட் ஒயினின் சுகாதார பலன்களை பற்றி நாளடைவில் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்துள்ள கண்டுபிடிப்பில் ரெட் ஒயின் உங்கள் மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என தெரியவந்துள்ளளது. அதனால், உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளிலும் உங்கள் விருந்தினர்களுக்கு ரெட் ஒயினை கொடுக்க மறந்துவிடாதீர்கள்.
சமீபத்தில் வெளிவந்த ஆய்வின்படி, ரெட் ஒயின் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு உங்கள் மூளையையும் வலிமையாக்கச் செய்யும். ஜார்ஜ்டவுன் பல்கலைகழக மருத்துவ தலைமையகம் நடத்திய ரெட் ஒயின் ஆய்வின்படி, ரெட் ஒயின் ஆல்சைமர் நோய் வளர்ச்சியை தடுக்க உதவும். ரெட் ஒயினின் உள்ள ரிசர்வேராட்டல் என்னும் பொருள் நமது மூளையின் வளர்ச்சிக்கு சிறந்த பலனை அளிக்கும். ரெட் ஒயின் ஏராளமான சுகாதார பலனை பெற்றுள்ளது. உங்கள் இடைகுறைப்பிற்கும் உதவி புரியும். இதில் நிறைந்துள்ள ஆரோக்கிய நலன்கள் நாளுக்கு நாள் நம்மிடையே இந்த பானத்தை பற்றிய குறிப்பிடத்தக்க கவனத்தை ஏற்படுத்தி வருகின்றது. ரெட் ஒயினை அருந்துவதால் உங்கள் மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, உங்கள் இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவுக்கின்றது. இங்கு மூளை ஆரோக்கியத்திற்காக ரெட் ஒயின் தரும் பலன்களை பார்க்கலாம்.

1. ஸ்ட்ரோக் வராமல் தடுக்கும்:
ரெட் ஒயினின் சுகாதார பலன்களில் சிறந்த ஒன்றாக இருப்பது ஸ்ட்ரோக் நோயை தடுப்பது தான். சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகளின்படி, ரெட் ஒயின் உங்கள் மூளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனத் தெரிவிக்கின்றது. இதில் உள்ள ரிசர்வேராட்டல் என்னும் கூட்டுப்பொருள் ஸ்ட்ரோக் நோயை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது. இந்த கூட்டுப்பொருள் விலங்குகளின் உடம்பில் செலுத்தப்பட்டது. இதன் முடிவாக இந்த கூட்டுப்பொருளை செலுத்திய விலங்குகள் மற்ற விலங்குகளை காட்டிலும் மூளை அணுக்களில் குறைந்த சேதத்தையே தெரிவித்தது.
இந்த கூட்டுப்பொருள் மூளையின் ஏற்படும் இரத்த உறைவுகளை குறைத்து வேகமாக குணமடைய உதவுகின்றது. இது ரெட் ஒயினின் சுகாதார பலன்களில் ஒன்றாகும். மேலும், மூளையில் ஏற்படும் சேதத்தை நெடுநாட்கள் வரை குறைக்க செய்யும். ஆராய்ச்சிகளின்படி ரெட் ஒயின் நமது மூளையில் ஏற்படும் சேதத்தை 40 சதவிகிதம் வரைத் தடுக்கும். எனினும், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளபடவில்லை. அதனால், ஆராய்ச்சிகள் ரெட் ஒயினை மிதமான அளவில் அருந்துமாறு அறிவுரைக்கின்றது. அதிகமாக அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். ரெட் ஒயின் அருந்துவது ஆரோக்கியத்தை அளித்தாலும் மிதமாக அருந்துவதே நல்லதாகும்.
2. அல்சைமர் நோயை தடுக்கும்:
ரெட் ஒயினின் சுகாதார பலன்களில் மற்றொன்று அல்சைமர் நோயின் முன்னேற்றத்தை குறைப்பதே ஆகும். மதுவே அருந்தாத சிலரும் இந்த ரெட் ஒயினை அருந்துவது அல்சைமர் நோயை தடுக்க உதவும் என்று நம்புகின்றனர். ரெட் ஒயினின் சுகாதார பலன்கள் மக்களிடையே நம்பிக்கையை வளர்த்துள்ளது. பிரான்ஸ் உள்ள மக்கள் அதிக கலோரிகள் நிறைந்த உணவையே உட்கொள்ளுகின்றனர். ஆனால், அவர்களிடம் இதய நோய்கள் குறைவாகவே காணப்படுகின்றது. ஏன்னெனில், அவர்கள் ரெட் ஒயினை அருந்தி வருக்கின்றனர்.
அல்சைமர் நோயை பொருத்தவரையில் இந்த ரெட் ஒயினின் சுகாதார பலன்கள் மிக அதிகமானவை. இதில் உள்ள ரிசர்விராட்டல் என்னும் பொருளை பற்றிய ஆராச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த கூட்டுப்பொருளின் தன்மை மற்றும் செயல்பாடு பற்றிய உண்மைகள் வெளிவரவில்லை. எனினும், ஆராய்ச்சியாளர்கள் இந்த கூட்டுப்பொருள் நமது மூளையை மூப்படையச் செய்யும் மரபணுவின் செயல்பாட்டை தடுக்கின்றது என நம்புகின்றனர். இந்த ரெட் ஒயினின் ஆரோக்கிய பலன்கள் அளவுக்கும் அப்பாற்பட்டது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











