Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
பசியின்மையின் அபாய அறிகுறிகள்!!
பெரும்பாலானோருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை பசியின்மை (Anorexia) ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு தாம் பசியின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர முடியாது. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் பசியின்மை ஏற்படலாம். இளைஞர்களுக்கு மன அழுத்தம் அல்லது மனத்தளர்ச்சி இருந்தால் பசியின்மை ஏற்படலாம். பெரியவர்களுக்கு, மஞ்சள் காமாலை, அல்சர், புற்றுநோய் போன்ற நோய்களால் பசியின்மை ஏற்படலாம்.
மது அருந்துபவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், கல்லீரல் பாதிக்கப்படும் அளவிற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும் பசியின்மை ஏற்படலாம். இவ்வாறு வரப்போகும் பெரியதொரு நோயின் அறிகுறிதான் பசியின்மை.
நீங்களோ அல்லது உங்கள் நேசத்துக்குரியவர்களோ பசியின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனைக் கண்டுபிடிக்க உதவும், உடல், உணர்வு மற்றும் பழக்கவழக்கம் சார்ந்த அறிகுறிகளை இங்கே பார்ப்போம்.

மறுத்தல்
பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தாம் பசியாக இருப்பதை மறுப்பார்கள். பட்டினி கிடந்தாலும் தாம் பசியாக இருப்பதை மறுப்பார்கள். உண்ண மறுப்பார்கள். உணவினைத் தவிர்க்கத் தொடங்குவார்கள்.

உணவுப் பழக்கத்தில் மாற்றம்
உணவுப் பழக்கத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால், அது அவர் பசியின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உணவுப்பழக்கத்தில் திடீரென மாற்றம் என்பது 'இரகசியமாக உண்பது', 'ஒரு குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டும் உண்ண விரும்புவது', ' உணவுப்பொருள்களை சிறு சிறு துண்டாக்கி உண்பது' ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.

எடை குறைதல்
பசியின்மை காரணமாக சாப்பிடுவது குறைந்து, அதன் காரணமாக உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுப்பொருட்களின் அளவு குறையலாம். திடீரென்று உடல் எடை அதிகமாக குறைவது என்பது பசியின்மையின் வெளிப்படையான அறிகுறியாகும்.

குண்டாகக் காட்டுதல்
பசியின்மையால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள், உடல் தோற்றத்தைக் குண்டாகக் காட்டும் தொளதொளவென்ற ஆடைகளை அணிய விரும்புவார்கள்.

முடி வளர்தல்
அதிகமான எடை குறைவால். உடல் வெப்பநிலையும் குறையும். இதனை ஈடுசெய்யும் விதமாக பசியில்லா நபருக்கு கால்கள், கைகள், மற்றும் முகத்தில் முடி அதிகம் வளரக்கூடும்.

எடை
அடிக்கடி எடை பார்க்கும் இயந்திரத்தில் தமது எடையைப் பார்ப்பதையோ, எடையைப் பார்த்து எடை கூடுகிறதே என்று கவலைப்படுவதையோ கண்டால், அவர் பசியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கொள்ளலாம்.

பொய்யான தோற்றம்
பசியின்மையால் பாதிக்கப்பட்ட நபர்கள், தனது உடல் தோற்றம் மற்றும் எடையில் திருப்தியற்றவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஒல்லியாகவே இருந்தாலும், தாம் குண்டாகவோ அல்லது அதிக எடை கொண்டவர்களாகவோ இருப்பதாக உணர்வார்கள்.

மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்
இளம்பெண்களுக்கும், சமீபத்தில் பருவமடைந்த பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கை. மாதவிலக்குச் சுழற்சியில் தொடர்ந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள், மாதவிடாய் சுழற்சியானது தவறிப்போனால், அது பசியின்மையின் அறிகுறியாக இருக்கலாம்.

பழக்கவழக்கம்
பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் இருப்பதை விரும்பத் தொடங்குவார்கள். நண்பர்கள் கூட்டத்திலிருந்து விலகுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிக நேரம் செலவிடுவதைக் குறைத்து, தனிமையில் அதிக நேரம் செலவிடத் தொடங்குவர்.



Click it and Unblock the Notifications