Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மறதி பார்ட்டியா நீங்கள்?

பொருட்களை மறக்காமல் எடுத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
பயணத்தின்போது:
மனித வாழ்க்கையில் பயணங்களை தவிர்க்க முடியாது. இதனால் எங்கும் புறப்படும் முன்பு முதலில் தெளிவாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். கடைசி நேரத்தில் மூட்டை கட்டும் பழக்கத்தை தவிர்க்கலாம். போகும் இடத்திற்கு தேவையான பொருட்கள், முக்கிய ஆவணங்கள், உடைகள் ஆகியவற்றை பேக்கில் முதலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பயணம் எவ்வளவு நாட்கள் என்பதை பொறுத்து உள்ளாடைகள், மேலாடைகள் ஆகியவை சரியான எண்ணிக்கையில் பேக்கில் அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிரஷ், பேஸ்ட், குளியல் சோப்பு ஆகியவற்றை பேக்கின் பக்க பகுதியில் உள்ள அறைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்திற்கு இடையே உண்ணும் உணவுகள், படிக்க புத்தகங்கள் ஆகியவற்றை சிறிய பையில் எடுத்துக் கொள்ளுங்கள். எடுக்க வேண்டிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றை தயாரித்து புறப்படும் முன் எல்லாவற்றையும் எடுத்து வைத்துள்ளோமா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
வழக்கமான நேரங்களில்:
வாழ்க்கையில் சில வேலைகள் வழக்கமாக செய்வது உண்டு. இதிலும் சிலருக்கு மறதி ஏற்படும். இதனால் பணிகளில் காலதாமதமும், தேவையில்லாத டென்ஷனும் ஏற்படுகின்றது.
அலுவலகம் செல்பவராக இருந்தால் ஐடி கார்டு, பர்ஸ், தினமும் பயன்படுத்தும் ஆவணங்கள், அட்டைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் அலுவலகம் செல்லும் நேரத்தில் பொருட்களை தேடும் வேலையும், எடுக்க மறப்பதையும் தவிர்க்கலாம்.
பாஸ்போர்ட், அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு உள்ளிட்டவை வாழ்ககையில் முக்கியமானவை. இவற்றை ஒரே இடத்தில் பத்திரமாக வைப்பது நல்லது. அவை புதுப்பிக்கும் நேரத்தை ஒரு பேப்பரில் எழுதி அதனை ஒரு அட்டையில் ஒட்டி சுவரில் தொங்கவிடலாம்.
நினைவு பயிற்சி:
மறதியைப் போக்க நினைவு பயி்ற்சி ஒன்றை செய்யலாம். நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களை திரும்பப் திரும்ப பலமுறை கூறுவதால் அது மனதில் பதிந்துவிடுகின்றது. வீட்டில் இருக்கும்போது நினைவு விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலமும் மறதியைப் போக்கி நினைவு ஆற்றலை பெருக்கலாம்.
மேற்கண்ட வழிவகைகளைச் செய்தால் பொருட்களை மறந்துவிட்டு தேடி அலையாமல் இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications