Latest Updates
-
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்! -
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த 5 உணவுகள் - அடிக்கடி சாப்பிடுங்க -
கோடை வெயிலால் கருப்பாகாமல் இருக்கணுமா? அப்ப ஸ்கின் டாக்டர் சொல்ற இந்த 3 விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!
முதுகு வலி ஏன் வருது தெரியுமா?
இன்றைய காலத்தில் நோயில்லாத மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அந்த அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நோயானது புகுந்து விளையாடுகிறது. சும்மா சொல்லக்கூடாது, உடலில் வரும் நோய்க்கு முதற்காரணமே நாம் தான். ஆனால் அதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், நான் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் எதற்கு இது வருகிறது என்று தெரியவில்லை என்று சொல்வோம். முதலில் நாம் சரியாக இருந்தால், நமக்கு எந்த ஒரு நோயும் வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது அந்த முதுகு வலி ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணம் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

நீண்ட நாள் வலி
முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால், அந்த வலியை சரிசெய்ய நாம் உடலை ஏதேனும் ஒரு வித்தியாசமான நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்போம். மேலும் தற்காலிகமாக அந்த வலியை நீக்க மேற்கொண்ட அந்த நிலையை எப்போது வலி ஏற்பட்டாலும் பின்பற்றுவோம். ஆகவே அவ்வாறு வித்தியாசமான நிலையில் வைப்பது உடலின் பல பகுதியை பாதித்து, வலி அல்லது பிடிப்பு போன்வற்றை உண்டாக்குகிறது.

ஊட்டச்சத்து குறைவு
நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும். அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து, பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.

பரம்பரை
ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம்.

அதிக எடை
நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான். ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு, அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது. இதனால் முதுகு வளைந்து, கூன் உண்டாகி, இறுதியில் வலியை அதிகமாக்குகிறது.

பழக்கம்
சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது. மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும்.

கம்ப்யூட்டர் வேலை
முதுகு வலி பெரும்பாலான கம்ப்யூட்டர் முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது. ஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் போது, கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும். இதனால் முதுகை நேராக வைக்காமல், நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால், அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும்.

ஃபேஷன்
ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும். அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து, அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications











