Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Weight Loss: வேகமா உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இத காலையில காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
Weight Loss Tips In Tamil: உலகில் பெரும்பாலானோருக்கு உடல் எடையைக் குறைப்பது முதன்மையான நோக்கமாக உள்ளது. ஏனெனில் அந்த அளவில் உடல் பருமனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தாலும், அனைவராலுமே டயட்டுகளை பின்பற்ற முடியாது.
சொல்லப்போனால் உடல் பருமனால் அவதிப்படும் 90 சதவீத மக்கள் உடல் எடையை கஷ்டப்படாமல் எளிதில் குறைக்கும் வழிகளைத் தான் தேடிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அப்படி ஈஸியாக உடல் எடையைக் குறைக்கும் வழிகளைத் தேடுபவராயின், இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் இங்கு ஒருவரது உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் சில பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றல் குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது அந்த பானங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. ஓம நீர்
ஓம நீர் ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். அதுவும் ஓம நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் குறையும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஓம விதைகளை சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும்.
2. ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் வழங்கக்கூடியவை. அதுவும் இது ஒருவரது உடல் எடையைக் குறைக்க உதவுதோடு மட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை அளவாக உட்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக குடித்தால், அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். முக்கியமாக ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.
3. இஞ்சி டீ
இஞ்சி ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்ட ஒரு மூலிகை. இந்த இஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயைக் குடித்து வந்தால்,ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்தால், அஜீரண கோளாறுகள் நீங்கும். அதுவும் இந்த இஞ்சி டீயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை குறைய உதவுவதோட, வயிற்று உப்புசமும் குறையும்.
4. எலுமிச்சை நீர்
எலுமிச்சை நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க எளிதில் உதவி புரியும். அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும் மற்றும் உடலினுள் உள்ள அழற்சி குறையும்.
5. மல்லி நீர்
உடல் எடையைக் குறைக்க உதவும் மற்றொரு பானம் தான் மல்லி நீர். இந்த மல்லி நீர் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதற்கு மல்லி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை வடிகட்டி குடிக்க வேண்டும்.
6. சீரக நீர்
தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக சீரக நீரை குடித்து வருவது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும். அதுவும் இந்நீரை தினமும் குடிக்கும் போது உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது, செரிமானம் மேம்படுகிறது மற்றும் கொழுப்பைக் கரைக்கும் செயல்முறை ஊக்குவிக்கப்படுகிறது. முக்கியமாக தொப்பையைக் குறைக்க நினைப்பவர்கள், சீரக நீரைக் குடிப்பது நல்லது. அதற்கு இரவு தூங்கும் முன் சீரகத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் அனைத்துமே உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். அதற்கு இந்த பானத்தை குடிப்பது மட்டுமின்றி, ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications