Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வயிற்றில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பை கரைக்கணுமா? அப்ப தினமும் இஞ்சி சாறுடன் 'இத' சேர்த்து குடிங்க..
Weight Loss Tips In Tamil: தொப்பையால் இன்று நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். ஒருவருக்கு தொப்பையானது வயிற்றுப் பகுதியில் கொழுப்புக்கள் தேங்கும் போது ஏற்படுகிறது. உடலிலேயே வயிற்றுப் பகுதியில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினம்.
இப்பகுதியில் தேங்கும் கொழுப்புக்கள் விடாப்பிடியான கொழுப்புக்களாக மாறுகின்றன. இப்படி வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களால் தான் இதய நோய், பிசிஓடி, பிசிஓஎஸ், உடல் பருமன், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பல நாள்பட்ட பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கிறது.

எனவே தொப்பையைக் கொண்டவர்கள் அந்த தொப்பையைக் குறைக்க கட்டாயம் முயற்சிக்க வேண்டும். வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை சட்டென்று குறைத்துவிட முடியாது. முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து முயற்சிக்கும் போது மட்டுமே இப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க முடியும். அதற்கு நல்ல ஆரோக்கியமான மற்றும் கலோரி குறைவான உணவுகளை உண்பதோடு, கார்டியோ, வெயிட் ட்ரெயினிங் போன்றவற்றுடன் ஒருசில இயற்கை பானங்களையும் குடித்து வர வேண்டும்.
அப்படி வயிற்றில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்பை கரைக்க உதவும் ஒரு அற்புத பானம் தான் இஞ்சி மற்றும் சியா விதை நீர். இந்த நீர் உடலில் உள்ள விடாப்பிடியான கொழுப்பைக் கரைப்பதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
இஞ்சியின் நன்மைகள்
நமது தினசரி உணவில் சேர்க்கும் ஒரு பொதுவான பொருள் தான் இஞ்சி. இஞ்சி ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது என்பதை அனைவருமே அறிவோம். இஞ்சியில் ஜிஞ்சரோன் மற்றும் ஷோகோல்ஸ் எனப்படும் கலவைகள் உள்ளன. இந்த கலவைகள் தெர்மோஜெனிக் பண்புகளை கொண்டவை. அதாவது, இவை உடலில் தேங்கியுள்ள கொழுப்பை எரிக்கும் செயல்முறையை ஊக்குவித்து எடை இழப்புக்கு உதவுகின்றன.
மேலும் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் உள்ள கொழுப்புக்களை உருக்கி வெளியேற்றுவதோடு, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது தவிர இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் சேதமடைந்த செல்களை சரிசெய்ய உதவுகிறது மற்றும் பல வகையான புற்றுநோய்களை வராமல் தடுக்கிறது.
இஞ்சி சியா விதை நீர் எப்படி எடை இழப்புக்கு உதவுகிறது?
இஞ்சி சியா நீர் எடை இழப்பை ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான பானம். இது உடலினுள் உள்ள வீக்கத்தையும், அசௌகரியத்தையும் குறைக்கும். அதுவும் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறு மற்றும் சியா விதைகளை சேர்த்து குடிக்கும் போது, அது வயிற்றில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதோடு, உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரையும் வெளியேற்ற உதவுகிறது.
இருப்பினும் இந்த நீரைக் குடிக்கும் போது, தவறாமல் உடற்பயிற்சியையும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ள வேண்டும். இப்படி மேற்கொள்ளும் போது உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, வேகமாக கொழுப்புக்கள் கரைந்து, எடை இழப்பை ஊக்குவிக்கும். இப்போது இஞ்சி சியா விதை நீரைக் குடிப்பது எப்படியெல்லாம் உடலினுள் செயல்பட்டு எடை இழப்புக்கு உதவுகிறது என்பதைக் காண்போம்.
செரிமானம் மேம்படும்
இஞ்சி செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, உண்ணும் உணவுகளை விரைவில் உடைத்தெரித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஒருவரது செரிமானம் சிறப்பாக நடைபெற்றாலே, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
மெட்டபாலிசம் அதிகரிக்கும்
இஞ்சியில் தெர்மோஜெனிக் பண்புகள் உள்ளன. அதாவது இவை உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, நாள் முழுவதும் அதிகப்படியான கலோரிகளை எரிக்க வழிவகை செய்கிறது. அதற்காக உடற்பயிற்சியையும், ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதைத் தவிர்க்கக்கூடாது.
பசி கட்டுப்படும்
இஞ்சி, சியா விதைகள் ஆகிய இரண்டுமே பசியைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவரது வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருந்தால், அது தேவையில்லாத கலோரி உட்கொள்ளலைக் குறைத்து, எடை இழப்புக்கு உதவி புரியும். எனவே எடையைக் குறைக்க நினைத்தால், இந்த இஞ்சி சியா விதை நீரை டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
நார்ச்சத்து அதிகம்
சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளன. அதுவும் சியா விதைகளை ஊற வைக்கும் போது, அது ஜெல் போன்ற ஒரு நிலையில் இருக்கும். இந்த ஜெல் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்து, கலோரிகளை அதிகம் எடுப்பதைக் குறைக்கிறது.
இரத்த சர்க்கரை சீராகும்
எப்போது ஒருவரது இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறதோ, அப்போது தான் கண்டதை சாப்பிட வேண்டுமென்ற உணர்வு எழும். இதன் விளைவாக உடல் பருமன், தொப்பை போன்றவை வரக்கூடும். ஆனால் இஞ்சி, சியா விதைகள் இரண்டுமே இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுகின்றன.
இஞ்சி சியா விதை நீரை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
* சியா விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
செய்முறை:
* முதலில் ஒரு கப் நீரில் சியா விதைகளைப் போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, சூடேற்றி இறக்கி, அந்நீரில் துருவிய இஞ்சியை சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அந்நீரை வடிகட்டிவிட்டு, ஊற வைத்துள்ள சியா விதைகளை சேர்த்து, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
இஞ்சி சியா விதை நீர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், ஏன் உடல் எடையைக் குறைக்கவும் உதவலாம். ஆனால் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த நீரை தினசரி குடிப்பதாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications