Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு குடல் அழற்சி நோய் இருக்கலாம்!
Inflammatory Bowel Disease Symptoms In Tamil: தற்போது மக்களிடையே வயிற்று வலி, குமட்டல், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் தலைத்தூக்கிக் கொண்டிருக்கின்றன. எப்போதும் செரிமான பிரச்சனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவை பல தீவிரமான நோய்களின் எச்சரிக்கை அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
நமது குடல்களை பாதிக்கும் ஒரு வகையான மற்றும் வாழ்நாள் முழுவதும் சந்திக்கக்கூடிய ஒரு மருத்துவ நிலை தான் குடல் அழற்சி நோய் (IBD). இந்நிலையில் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பு குடல் செல்களை தாக்கும். இதன் மூலம் வீக்கம் மற்றும் பிற சேதங்கள் நீங்காமல் இருக்கும்.

இந்த குடல் அழற்சி நோய் இரண்டு வகைப்படும். அவை அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் கிரோன் நோய். அமெரிக்காவின் சிடிசி-யின் படி, குடல் அழற்சி நோயானது இரைப்பை குடல் பாதை மற்றும் அதற்கு வெளியே கடுமையாக பாதித்து, கடுமையான மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே குடல் அழற்சி நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக இதன் அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சரி, குடல் அழற்சி நோய் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று கேட்கலாம். கீழே குடல் அழற்சி நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இரத்தம் கலந்த மலம்
இரத்தக்கசிவுடன் மலம் வெளியேறினால், பலரும் அதை பைல்ஸ் அல்லது மூல நோயாக நினைக்கலாம். ஆனால் அது குடல் அழற்சி நோயின் மிகவும் பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளுள் ஒன்றும் கூட. அதுவும் இது உங்கள் நோய் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கலாம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் இரத்தம் கலந்த மலம் குடல் புற்றுநோய் போன்ற பிற நோய்களின் அறிகுறியும் கூட. எனவே இந்த அறிகுறி தெரிந்தால், சாதாரணமாக இருக்காமல், உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
2. குமட்டல்
உணவு உண்ட பின் குமட்டல் வருகிறதா? அப்படியானால் அது குடல் அழற்சி நோயின் அபாயகரமான அறிகுறியாகும். இந்த நோயானது சிறுகுடலைச் சுருக்கி, மல அடைப்புக்கு வழிவகுப்பதால் இந்த அறிகுறி ஏற்படுகிறது. ஆகவே சமீப காலமாக இப்படியான அறிகுறியை சந்தித்தால், சீக்கிரம் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொள்ள தொடங்குங்கள்.
3. மூட்டு வலி
உங்களுக்கு மூட்டு வலி அதிகமாக வருகிறதா? அப்படியானால் குடல் அழற்சி நோய் இருக்க வாய்ப்புள்ளது. குடல் அழற்சி நோய் இருந்தால் மிகவும் அரிதாக முழங்கால், மணிக்கட்டு அல்லது கீழே முதுகு பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். அதுவும் இந்த பிரச்சனைகளானது அவ்வளவு எளிதில் நீங்காது. மேலும் சருமத்தில் சிவப்பு நிற திட்டுக்கள் வந்து, பின் தானாகவே வந்து மறைந்துவிடும்.
4. வயிற்று வலி
வயிற்று வலி பல பிரச்சனைகளின் அறிகுறிகளுள் ஒன்றாக இருப்பதால், வயிற்று வலி வந்தால், நிறைய பேர் செரிமான பிரச்சனையாக நினைத்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். ஆனால் குடல் அழற்சி நோயின் ஒரு முக்கியமான அறிகுறி தான் வயிற்று வலி. ஏனெனில் குடலில் அடைப்பு அல்லது தீவிர தொற்று ஏற்பட்டிருந்தால், இப்படியான வயிற்று வலியை சந்திக்க நேரிடும். அதுவும் வயிற்று வலியை ஒருவர் தொடர்ச்சியாக சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
5. மலம் கழிக்கும் உணர்வு
அடிக்கடி அவசரமாக மலம் கழிக்க வேண்டுமென்ற உணர்வு எழுகிறதா? அப்படியானால் அது குடல் அழற்சி நோயின் முதன்மையான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் இப்படியான உணர்வு இரவு தூக்கத்தை கெடுக்கும் வகையில் நள்ளிரவில் தான் ஏற்படும். இதனால் தூக்கம் பாதிக்கப்படும். எனவே சமீப காலமாக நீங்கள் இப்படியான உணர்வை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications