Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
காலில் இந்த பிரச்சனையை அதிகமா சந்திக்குறீங்களா? அப்ப அது இதய நோயின் எச்சரிக்கை அறிகுறியா இருக்கலாம்.. உஷார்...
Heart Attack Symptoms: நாம் ஒவ்வொருவருமே கால் வலியை சந்திப்போம். சொல்லப்போனால் தற்போது கால் வலி பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு நீண்ட தூரம் நின்று கொண்டே பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்வது, நின்று கொண்டே வேலை செய்வது போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கலாம்.
ஆனால் கால் வலியை ஒருவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவும் தொடர்ச்சியான மற்றும் நாள்பட்ட கால் வலி உடலில் உள்ள தீவிரமான ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். முக்கியமாக அடிக்கடி சந்திக்கும் தீவிரமான கால் வலி, உடலில் உள்ள மோசமான இரத்த ஓட்டம் அல்லது மாரடைப்பின் அபாயம் போன்றவைக் குறிக்கலாம்.

எனவே ஆரம்பத்திலேயே கால் வலிக்கு சிகிச்சை மேற்கொண்டு, அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டியது அவசியம். இப்போது மாரடைப்பின் அபாயத்தைக் குறிக்கும் சில கால்களில் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. தொடர்ச்சியான கால் வலி
உடலின் எவ்வித செயல்பாடுகளுடனும் தொடர்பில்லாமல் கால்களில் தொடர்ச்சியாக வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது உடலில் உள்ள தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். குறிப்பாக இது மோசமான இரத்த ஓட்டத்துடன் தொடர்டையதாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. உடல் செயல்பாடுகளின் போது வலி
உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அல்லது நடக்கும் போது கால்களில் வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது உடலில் உள்ள மோசமான இரத்த ஓட்டத்தின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இது பெரும்பாலும் அடைபட்ட தமனிகளால் ஏற்படும் இதய பிரச்சனைகளிலிருந்து வருகிறது.
3. கால் வலி மற்றும் மார்பு பகுதியில் அசௌகரியம்
ஒருவர் கால்களில் வலியுடன், நெஞ்சு பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை சந்தித்து வந்தால், அப்போது அசால்ட்டாக இருக்காதீர்கள். இது கரோனரி தமனி நோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இந்த கரோனரி தமனி நோய் மாரடைப்பு வரும் அபாயத்தை ஏற்படுத்தும்.
கால் வலி மாரடைப்பின் அறிகுறியா?
கால்களில் ஏற்படும் வலி மாரடைப்பின் அறிகுறி அல்ல. ஆனால் இது இதய நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் இது புற தமனி நோயின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சுமார் புற தமனி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 5 சதவீதம் பேர் 30 மாதங்களுக்குள் மாரடைப்பை அனுபவித்துள்ளனர்.
இதய நோய்கள் எப்படி கால் வலியை உண்டாக்குகின்றன?
நமது உடலின் சுற்றோட்ட அமைப்பு உடலின் முக்கிய பகுதிகளுக்கு அதிகளவிலான இரத்தத்தை அனுப்புகின்றன. அதில் மூளை, இதயம், சிறுநீரகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நமது உடலானது கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை திரும்ப பெற ஈர்ப்பு விசைக்கு எதிராக வேலை செய்ய வேண்டும். இதனால் கால்கள் மற்றும் பாதங்களில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.
இதய நோய்கள் கால் வலியை எவ்வாறு ஏற்படுத்துகின்றன?
* இதய செயலிழப்பு - இதயத்தில் சரியாக இரத்தத்தை அழுத்த முடியாவில்லை என்றால், உடலில் மோசமான இரத்த ஓட்டம் காரணமாக கால்களில் கணிசமான வீக்கத்தை சந்திக்க நேரிடும்.
* வீனோமஸ் த்ரோம்போம்போலிசம் (VTE) - இந்நிலையில் கால்களில் இரத்தம் உறைந்து போயிருக்கும். இந்த வீனோமஸ் த்ரோம்போம்போலிசம் பிரச்சனையானது இதய நோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
* புற தமனி நோய் - இரத்த நாளங்கள் குறுகியோ அல்லது இரத்த நாளங்களில் பிளேக்குகள் படிந்திருந்தால், இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படும். இந்நிலையில் திசுக்கல் ஆக்ஸிஜனை இழந்து கால்களில் வலியை உண்டாக்கும்.
எனவே கால்களில் நீண்ட காலமாக வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி, என்னவென்று பரிசோதனை செய்து உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications