Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
உங்க உடலில் இந்த வைட்டமின் குறைவாக இருந்தால் உங்க நுரையீரல் பெரிய ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்...!
வைட்டமின் கே என்பது காயங்களைக் குணப்படுத்துவதற்கு இரத்தம் உறைவதற்கு உடலுக்குத் தேவையான வைட்டமின்களின் குழுவாகும். வைட்டமின் கே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.
கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் டேனிஷ் ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வின்படி, வைட்டமின் கே குறைபாடு மற்றும் மோசமான நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் இடையே தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
இந்த ஆய்வுக்காக, 24 முதல் 77 வயதுடைய சுமார் 4,000 பங்கேற்பாளர்கள் நுரையீரல் செயல்பாடு பரிசோதனை செய்து இரத்த மாதிரிகளை வழங்கினர். நுரையீரல் செயல்பாட்டு சோதனை - ஸ்பைரோமெட்ரி சோதனை - ஒரு கட்டாய சுவாசத்தில் நீங்கள் எவ்வளவு காற்றை வெளியேற்றலாம் என்பதை அளவிடுவதன் மூலம் சில நுரையீரல் நிலைகளைக் கண்டறிந்து கண்காணிக்க உதவுகிறது.
பங்கேற்பாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
என்னென்ன நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படலாம்?
ஸ்பைரோமெட்ரி பரிசோதனையில் வைட்டமின் கே குறைந்த இரத்த மாதிரிகள் நுரையீரல் திறனைக் குறைவாகக் கொண்டிருந்தது என்று தரவு வெளிப்படுத்தியது.
குறைந்த அளவு வைட்டமின் கே உள்ள பங்கேற்பாளர்கள் தங்களுக்கு நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), ஆஸ்துமா அல்லது மூச்சுத்திணறல் இருப்பதாகக் கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வைட்டமின் கே மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, " இதுதான் ஒரு பெரிய அளவிலான எண்ணிக்கையில் வைட்டமின் கே மற்றும் நுரையீரல் செயல்பாடு பற்றிய முதல் ஆய்வாகும். நமது நுரையீரல்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின் கே ஒரு பங்கை வகிக்க முடியும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன."
நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் வைட்டமின் கே சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடைவார்களா என்பதைப் சோதிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவை.
வைட்டமின் கே அதிகமுள்ள உணவுகள்
கீரை, முட்டைக்கோஸ், கடுகு கீரைகள், கொலார்ட் கீரைகள், பச்சை சுவிஸ் சார்ட், டேன்டேலியன் கீரைகள், டர்னிப் கீரைகள், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் பிரஸ்ஸல் முளைகள் ஆகியவை உங்கள் உணவில் சேர்க்கக் கூடிய சில ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வைட்டமின் கே ஆதாரங்களாகும்.
வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்
புறக்கணிக்கக் கூடாத வைட்டமின் கே குறைபாட்டின் சில அறிகுறிகள் என்னவெனில், வைட்டமின் கே குறைபாடு அதிகப்படியான இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும், இது வெட்டு அல்லது காயம் ஏற்பட்ட இடத்தில் தவிர மற்ற பகுதிகளில் கூட ஏற்படலாம்.
ஒருவருக்கு எளிதில் காயங்கள் ஏற்பட்டாலும், அவர்களின் நகங்களுக்குக் கீழே சிறிய இரத்தக் கட்டிகள் ஏற்பட்டாலும், உடலின் உள்பகுதிகளில் வரிசையாக இருக்கும் சளி சவ்வுகளில் இரத்தம் கசிந்தாலும், மலத்தின் நிறம் கருப்பாக இருக்கும் அல்லது மலத்தில் இரத்தம் இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டால், சரியான நோயறிதல் மற்றும் சரியான சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

