உங்க குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா? இந்த காய்கறிகளில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!

நம் உடலில் பெருங்குடல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாகும். பெருங்குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும, அதனை சுத்திகரிப்பதும் பெருங்குடலில் இருந்து நச்சுகள், கழிவுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றுவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் அவசியம்.

குடலை சுத்தப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஆனால் வழக்கமான உணவுமுறையில் குறிப்பிட்ட உணவுகளைச் சேர்ப்பது இயற்கையாகவே பெருங்குடலைச் சுத்தப்படுத்த உதவும், மேலும் இது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பெருங்குடலை சுத்தம் செய்ய உதவும் அந்த உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Vegetables That Clean the Intestines Naturally

காய்கறிகள் பெருங்குடலை சுத்தம் செய்யுமா?

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் பொதுவாக பெருங்குடலை சுத்தம் செய்ய உதவுகின்றன மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன. காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் போதுமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த உணவுகள் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவு போன்ற பெருங்குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை மலத்தின் மூலம் நீக்க உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலின் இயற்கையான நச்சு நீக்கும் செயல்முறையை ஆதரிக்கும். சில காய்கறிகளில் இந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன, அவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதில் சல்ஃபோராபேன் உள்ளது, இது குடலின் புறணியைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் பெருங்குடலின் நச்சு நீக்கத்தை துரிதமாக்குகிறது.

கீரை

கீரையில் நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அவை செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இதிலுள்ள அதிக நார்ச்சத்து மலத்தை மொத்தமாக அதிகரிக்க உதவுகிறது மற்றும் வழக்கமான குடல் இயக்கத்தை ஆதரிக்கிறது.

கேரட்

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெருங்குடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை மேம்படுத்துவதுடன் அதிலுள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோசில் நார்ச்சத்து அதிகமாக உள்ள, மேலும் கல்லீரலில் உள்ள நச்சு நீக்க செயல்முறைகளை ஆதரிக்கும் சல்பர் சேர்மங்கள் உள்ளன. இது கரையாத நார்ச்சத்தையும் வழங்குகிறது, இது கழிவுகளை அதிகளவில் வெளியேற்றுகிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

பீட்ரூட்

பீட்ரூட்டில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பீட்டாலைன்கள் நிறைந்துள்ளன, இது கல்லீரலின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது மற்றும் நச்சு நீக்கத்தை துரிதப்படுத்துகிறது. பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்து வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் பெருங்குடலை சுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion