Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
காபி குடிப்பது குறித்து பலரது மனதில் உள்ள 12 கேள்விகளுக்கு பதிலளித்த அமெரிக்க டாக்டர்...!
Coffee: உடலை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உலகளவில் பெரும்பாலானார் குடிக்கும் ஒரு பானம் தான் காபி. சொல்லப்போனால், உலகில் காபி பிரியர்கள் தான் ஏராளம். காபியை விரும்பி குடிப்பவர்கள் பலரும் காலையில் எழுந்ததும் ஒரு கப் காபியுடன் தான் அன்றைய தினத்தை தொடங்குவார்கள். ஒருவேளை காபி குடிக்காவிட்டால், அந்த நாளே ஓடாது, அப்படியே சோர்ந்து உட்கார்ந்துவிடுவார்கள்.
நீங்களும் அப்படி காபி பிரியரா? ஆனால் காபி உடலுக்கு நல்ல என்று ஒருபுறம் கூறினாலும், அது கெடுதலையும் விளைவிக்கக்கூடியது என்ற ஒரு கருத்தும் உள்ளது. உங்களுக்கு காபி குடிப்பது குறித்து பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கலாம்.

இப்படி நிறைய பேரின் மனதில் உள்ள காபி குடிப்பது குறித்த 12 கேள்விகளுக்கு எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற, கலிபோர்னியாவைச் சேர்ந்த இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. காபி ஒரு நல்ல காலை உணவு பானமா?
காலை உணவின் போது காபி குடிக்க ஏற்ற ஒரு நல்ல பானம் தான். அதுவும் இதை வெறும் வயிற்றில் குடிக்காமல், புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்த்து குடிக்கும் போது மிகவும் சிறந்தது.
2. கொழுப்பு கல்லீரலுக்கு காபி நல்லதா?
காபியை மிதமான அளவில் குடித்தால், அது கொழுப்பு கல்லீரல் மற்றும் ஃபைப்ரோஸிஸ் அபாயத்தைக் குறைக்க உதவி புரியும்.
3. காபி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா?
ப்ளைன் காபி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
4. தொப்பை அல்லது எடை இழப்புக்கு காலி நல்லதா?
காபியானது மறைமுகமாக உடல் பருமன் அல்லது தொப்பையைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் இது குறுகிய காலத்தில் பசியுணர்வைக் குறைக்கிறது மற்றும் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டியை மேம்படுத்துகிறது.
5. காபி கொழுப்பை அதிகரிக்கும்?
ஃபில்டர் செய்யப்படாத காபி உடலில் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவை சிறிது அதிகரிக்கும் என்று டாக்டர் சேத்தி கூறியிருந்தார்.
6. எந்த காபி சிறந்தது? பிரஸ்டு அல்லது ஃபில்டர் காபி?
காபியில் ஃபில்டர் காபி தான் மிகவும் சிறந்தது மற்றும் ஆரோக்கியமானது என்று டாக்டர் சேத்தி கூறினார். ஏனெனில் பிரஸ்டு காபி கொழுப்பை அதிகரிக்கும் சேர்மங்களை நீக்கும்.
7. எந்த வகையான காபி பிரஸ்டு காபிகள்?
பிரெஞ்சு பிரஸ், எஸ்பிரெசோ, துருக்கிய காபி மற்றும் தென்னிந்தியாவின் ஃபில்டர் காபி ஆகியவை பிரஸ்டு காபி வகைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
8. காபி வயிறு உப்புசம் அல்லது அசிடிட்டியை ஏற்படுத்துமா?
வயிறு உப்புசம் அல்லது அசிடிட்டியைப் பொறுத்தவரை, காபியின் விளைவானது தனிநபர்களைப் பொறுத்தது. காபியை வெறும் வயிற்றில் குடித்தாலோ அல்லது சென்சிடிவ் உள்ளவர்களோ குடித்தால், நிலைமை மோசமாகும்.
9. காபிக்கும் குறைந்த புற்றுநோய் அபாயத்திற்கும் தொடர்பு உள்ளதா?
காபிக்கும் குறைந்த புற்றுநோய் அபாயத்திற்கும் தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இது கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
10. காபியைக் குடிக்க சிறந்த வழி எது?
காபியை பேப்பர் ஃபில்டர் செய்து, சர்க்கரை சேர்க்காமல் அல்லது சிறிதளவு பால் சேர்த்து குடிப்பதே சிறந்த வழியாகும். முக்கியமாக சர்க்கரை சிரப்பை தவிர்ப்பது நல்லது என்று டாக்டர் சேத்தி கூறினார்.
11. ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிப்பது நல்லது?
பெரும்பாலானோருக்கு ஒரு நாளைக்கு 1 முதல் 3 கப் காபியை குடிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று டாக்டர் சேத்தி கூறினார்.
12.எப்போது காபியை குடிக்க வேண்டும்?
காபியை தூங்குவதற்கு குறைந்தது 6 முதல் 8 மணிநேரத்திற்கு முன் குடிப்பது சிறந்தது என்று டாக்டர் சேத்தி கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications