Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
இந்த 3 அறிகுறிகள் தெரிஞ்சா.. இதயம் பலவீனமா இருக்கு-ன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் அமெரிக்க இதய நிபுணர்!
Weak Heart Symptoms In Tamil: உலகம் முழுவதும் இதயம் தொடர்பான நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக இதயத்தில் பிரச்சனை இருந்தால், நெஞ்சு பகுதியில் இறுக்கம், வலி மற்றும் நெஞ்சு பகுதியில் அதிகப்படியான அழுத்தம் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்பதை அனைவருமே அறிவோம்.
ஆனால் இதைத் தவிர இன்னும் நிறைய பேர் கவனிக்க தவறும் வேறு சில முக்கியமான அறிகுறிகளும் உள்ளன என அமெரிக்க இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். ஜெர்மி லண்டன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். இந்த அறிகுறிகள் சாதாரணமானதாகவே இருக்கும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை வரவழைத்து, நிலைமையை மோசமாக்கிவிடுவதாகவும் கூறியுள்ளார்.

கீழே டாக்டர். ஜெர்மி லண்டன் தனது இன்ஸ்டாவில் கூறிய இதயம் பலவீனமாக இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் எனவும் டாக்டர் கூறியுள்ளார்.
நடக்கும் போது மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறல் இதய செயலிழப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். டாக்டர் லண்டனின் கூற்றுப்படி, இதயத்தில் பிரச்சனை இருந்தால், லேசான உடலுழைப்பின் போது மூச்சுத்திணறல் ஏற்படத் தொடங்கும். பின் படிப்படியாக நடந்தாலே மூச்சு வாங்கத் தொடங்கி, அதன் பின் ஓய்வு நேரத்திலும் மூச்சு வாங்கலாம்.
இப்படி மூச்சு வாங்கும் போது, சுவாசிப்பது மிகவும் கடினமாகவோ, வேகமாகவோ இருக்கலாம். அதுவும் இப்படி மூச்சு திணறல் ஏற்படும் போது, அத்துடன் கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம், குளிர், இருமல், உயர் காய்ச்சல் அல்லது வீசிங் போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருந்தால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என டாக்டர் லண்டன் கூறுகிறார்.
கால்களில் வீக்கம்
கால்களில் திரவங்கள் தேங்கும் போது, கால்களில் வீக்கம் ஏற்படும். இதை எடிமா என்று அழைப்பர். டாக்டர் லண்டனின் கூற்றுப்படி, கால்களில் இருந்து இரத்தமானது மேல் நோக்கி செல்லாமல் கால்களில் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தினால், இதயம் சரியாக செயல்படாமல் இருக்கலாம். இப்படியான திடீர் கால் வீக்கம் இதய செயலிழப்பின் முக்கியமான அறிகுறியாகும்.
எப்போது ஒருவரது இதயம் சரியாக செயல்படாமல் போகிறதோ, அப்போது உடலில் இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் விளைவாக கால்களில் இரத்தம் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தலாம் அல்லது உடல் எடையை அதிகரிக்கலாம். அதுவும் ஒருவர் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மயக்கம், தலைச்சுற்றல் அல்லது இரத்தம் கலந்த சளியுடன், கால்களில் திடீரென்று வீக்கம் ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர் லண்டன் கூறுகிறார்.
இருமல்
இதயம் சரியாக செயல்கடாமல் இருந்தால் வெளிப்படும் மற்றொரு முக்கிய அறிகுறி இருமல் ஆகும். இருமல் வந்தால் நுரையீரலில் தான் பிரச்சனை என்று பலரும் நினைக்கலாம். ஆனால் இதயம் சரியாக செயல்படாமல் இருந்தாலும், அதன் விளைவாக இருமலை சந்திக்க நேரிடும். அதுவும் இதயத்தில் பிரச்சனை இருந்தால், இருமலின் போது இரத்தம் கலந்த சளி வெளியேறும். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications