Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சிக்கனின் இந்த பாகங்களை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க... இல்லனா உங்களுக்குதான் ஆபத்து... ஜாக்கிரதை...!
உலகளவில் அதிகளவு மக்களால் உட்கொள்ளப்படும் அசைவ உணவென்றால் அது சிக்கன்தான். இந்தியாவில் கிட்டத்தட்ட 90% மக்கள் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர். சிக்கனை மக்கள் விரும்பி சாப்பிட அதன் சுவை முக்கிய காரணமாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் ஆரோக்கியமும் முக்கிய காரணமாக இருக்கிறது. சிக்கன் இறைச்சி புரதத்தின் பிரபலமான மூலமாகும், மேலும் இது பெரும்பாலும் சிவப்பு இறைச்சியை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சிக்கன் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சிக்கனின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நல்லதல்ல. ஆய்வுகளின் படி, வெட்டப்படும் சிக்கனில் அதிக அளவு கொழுப்பு இருக்கலாம், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம் அல்லது பறவைகள் வளரும் சூழலில் இருந்து சில நச்சுகள் அவற்றின் உடலில் சேமிக்கப்படலாம்.

இந்த பாகங்களை தொடர்ந்து உட்கொள்வது சில தொற்றுகள், செரிமான பிரச்சினைகள் அல்லது நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நீங்கள் சிக்கனை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் இதனை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் சிக்கனின் எந்தெந்த பாகங்களை சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
சிக்கன் தோல்
சிக்கன் தோலின் சுவை பலருக்குப் பிடித்தமானதாக இருந்தாலும், அதை தொடர்ந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது அல்ல. அதன் தோல் முழுக்க முழுக்க கொழுப்பால் ஆனது, இதை தொடர்ந்து உட்கொண்டால் அது கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சமைத்த பிறகும் கூட, சிக்கனின் தோலில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது, அதிலும் அதை சரியாக சமைக்காவிட்டால் சிக்கனின் தோலை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சிக்கன் நுரையீரல்
பெரும்பாலான உணவுகளில் மட்டனின் நுரையீரல் போல சிக்கனின் நுரையீரல் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் சில பாரம்பரிய உணவுகளில் அவை பயன்படுத்தப்படுகிறது. நுரையீரலில் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவை அதிக வெப்பநிலையை எதிர்க்கும் நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொண்டிருக்கலாம். எனவே அவற்றை சமைத்தாலும் அதில் ஒட்டுண்ணிகள் இருக்கலாம். இது அவற்றை ஆரோக்கியமற்றதாக மாற்றுகிறது.
சிக்கன் தலை
சிலர் கோழியின் தலையை விரும்பி சாப்பிடலாம், ஆனால் அது பாதுகாப்பானது அல்ல. சில நேரங்களில் கோழியின் தலையில், அசுத்தமான தீவனம் அல்லது சுற்றுச்சூழலில் இருந்து உறிஞ்சப்படும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருக்கலாம். காலப்போக்கில், இந்த எச்சங்கள் திசுக்களில் படிந்து, உட்கொள்ளும்போது நீண்டகால ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குடல்
ஆட்டின் குடலை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள், ஆனால் கோழியின் குடல் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல. பெரும்பாலான கடைகளில் கோழியின் குடல் நீக்கப்பட்டே விற்கப்படுகிறது. கோழியின் குடல்களில் பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகள் நிறைந்துள்ளன, அவற்றை முழுமையாக சுத்தம் செய்தாலும் முற்றிலும் நீக்குவது கடினம். இவற்றை சாப்பிடுவது உணவு மூலம் பரவும் நோய்களின் ஆபத்தை அதிகரிக்கலாம், எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
சிக்கனின் கால்
சிலர் கோழியின் கால்களை விரும்பி சாப்பிடுவகார்கள், சரியான பக்குவத்தில் சமைக்கப்படும்போது கோழியின் கால்கள்சுவையாக இருக்கும், ஆனால் அவை அதிகம் மாசுபடுவதற்கான ஆபத்தையும் கொண்டுள்ளன. அவை தொடர்ந்து தரையுடன் தொடர்பில் இருப்பதால், அவற்றின் பிளவுகளில் அழுக்கு, பாக்டீரியா மற்றும் பிற அசுத்தங்கள் படியலாம். இதனால் அவற்றை சாப்பிடும்போது பிற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
சிக்கனின் இதயம்
கோழியின் இதயம் பெரும்பாலும் புரதம் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த சிக்கனின் ஒரு சத்தான உறுப்பாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதில் சில மன அழுத்த ஹார்மோன்களும் இருக்கலாம், அவற்றை அதிக அளவில் உட்கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உங்கள் உணவில் கோழி இதயத்தைச் சேர்க்கும்போது மிதமான அளவில் உட்கொள்ள வேண்டுமென்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கற்குடல்
கற்குடல் பறவையின் வயிறாக செயல்படுகிறது, இது பெரும்பாலும் உணவை அரைக்க உதவும் சிறிய கற்கள் மற்றும் மணல்களைக் கொண்டுள்ளது. அவை முழுமையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையோ அல்லது சில அசுத்தங்களை சுமந்து செல்லும். இது கோழியின் சுவையான மற்றும் சத்தான பகுதியாக இருந்தாலும், அதை நுகர்வுக்கு பாதுகாப்பாக மாற்றவதற்கு சரியான முறையில் சமைக்க வேண்டியது அவசியமாகும்.
சிக்கன் கழுத்து
சிக்கன் கழுத்து பொதுவாக சூப்கள் மற்றும் குழம்புகளில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் முக்கிய இடமாகவும் இருக்கலாம். அனைத்து நோய்க்கிருமிகளையும் அழிக்க கொதிக்க வைப்பது மட்டுமே எப்போதும் போதுமானதாக இருக்காது, எனவே கழுத்தை சரியாக சுத்தம் செய்து போதுமான நேரம் சமைக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம்.
இறக்கை நுனிகள்
இறக்கை நுனிகள் தோல் மற்றும் எலும்பைக் கொண்டிருக்கின்றன, மேலும் குறைவான அளவு இறைச்சி அல்லது ஊட்டச்சத்துக்களையே கொண்டுள்ளன. அவை பெரும்பாலும் சுவைக்காக உணவுகளில் சேர்க்கப்படுகின்றன, ஆனால் அவற்றில் எந்தவிதமான புரதமும் இருப்பதில்லை. மேலும், அவை சரியாகக் சமைக்கப்படாவிட்டால் அதிகப்படியான கொழுப்பு மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
