Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
நீங்க சிறுநீர் கழிக்கும்போது இந்த அறிகுறிகள் இருக்கா?அப்ப உங்க சிறுநீரகம் ஆபத்தான நிலையில் இருக்காம்...!
Kidney Disease In Tamil: நம் உடலுறுப்புகளில் மிகவும் முக்கியமானது சிறுநீரகம். மேம்பட்ட சிறுநீரக செயல்பாடு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் தண்ணீரை சிறுநீராக அகற்ற உதவுகிறது.
உடலில் உள்ள இரசாயனங்களான சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவவற்றை சமநிலையில் வைக்க சிறுநீரகம் உதவுகிறது. சில காராணங்களால் உங்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம் அல்லது உங்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படலாம். அந்த வகையில், சிறுநீரகங்களின் சரியான செயல்பாட்டை பாதிக்கும் ஒரு தீவிரமான சுகாதார நிலை, நாள்பட்ட சிறுநீரக நோய்.

இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீளமுடியாததாகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மாறலாம். சிறுநீரக நோய் வெவ்வேறு நிலைகளில் முன்னேறுகிறது, ஒவ்வொரு நிலையும் குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. சிறுநீரக பாதிப்பு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரை மோசமடைகிறது.
வகை 2 நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற சுகாதார நிலைகள் நாள்பட்ட சிறுநீரக நோயை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை முன்கூட்டியே கண்டறிவது, அதனால் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும். எனவே, சிறுநீரக நோயின் அறிகுறிகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். இக்கட்டுரையில், சிறுநீரக நோயின் பல்வேறு நிலைகளில் அனுபவிக்கும் அறிகுறிகளை பற்றி காணலாம்.
நிலை 1: லேசான அறிகுறி
ஆரம்ப கட்டத்தில் சிறுநீரக நோய் அறிகுறியற்றதாக இருக்கலாம். ஆனால், சில குறிப்பிடத்தக்க அறிகுறிகளை உங்களுக்கு காட்டலாம். உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது மற்றும் கைகால்களில் லேசான வீக்கம் போன்ற நுட்பமான அறிகுறிகளை நீங்கள் பெறலாம். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் குறிப்பிடப்படாதவை என்பதால், இதை நீங்கள் எளிதில் புறக்கணிக்கலாம்.
நிலை 2: லேசானது முதல் மிதமானது
சிறுநீரக செயல்பாடு மேலும் அதிகரிக்கும்போது, அறிகுறிகள் இன்னும் தெளிவாகத் தெரியத் தொடங்கும். உடல் சோர்வு மற்றும் அதிகரித்த சிறுநீர் கழித்தல் பிரச்சனை உங்களுக்கு தொடரலாம். மேலும் தனிநபர்கள் சிறுநீரின் நிறம் மற்றும் அதிர்வெண்ணில் மாற்றங்களைக் கவனிக்கலாம்.
லேசான வீக்கம் ஏற்படலாம். குறிப்பாக கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்க நிலை மோசமடையலாம். கூடுதலாக, கீழ் முதுகில் அவ்வப்போது வலி அல்லது அசௌகரியமும் ஏற்படுவது நாள்பட்ட சிறுநீரக நோயின் இரண்டாவது நிலையில் இருப்பதை குறிக்கிறது.
நிலை 3: மிதமானது முதல் கடுமையானது
சிறுநீரக நோயின் மூன்றாவது கட்டத்தில், அறிகுறிகள் அதிகமாக வெளிப்படத் தொடங்கும். சோர்வு தீவிரமடைகிறது, மேலும் இரத்தத்தில் கழிவுப்பொருட்களின் குவிப்பு காரணமாக தனிநபர்கள் தொடர்ந்து அரிப்பு உட்பட சில பிரச்சனைகளை அனுபவிக்கலாம்.
இந்த நிலை உயர் இரத்த அழுத்தத்தை மோசமடைய செய்யலாம். சிறுநீரக நோய் கடுமையாக அதிகரிக்க தொடங்கும்போது, கடுமையான தலைவலியை ஏற்படுத்தலாம். எடிமா (வீக்கம்) முகம், கைகள் மற்றும் கால்களில் மிகவும் கவனிக்கப்படுகிறது. சிறுநீர் வெளியேறுவது குறையலாம், மேலும் அது நுரை போல் வெளியேறலாம் மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறலாம்.
நிலை 4: கடுமையானது
சிறுநீரக செயல்பாடு கணிசமாகக் குறைவதால், அறிகுறிகள் கடுமையானதாகவும் உயிருக்கு ஆபத்தானதாகவும் மாறும். சோர்வு மற்றும் பலவீனம் அதிகமாக இருக்கலாம். மேலும் தனிநபர் கவனம் செலுத்துவதில் சிரமங்களை சந்திக்கலாம் மற்றும் நினைவாற்றல் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.
இரத்த சோகை உருவாகலாம், மூச்சுத் திணறல் மற்றும் வெளிர் தோல் ஏற்படலாம். வயிறு உட்பட உடல் முழுவதும் எடிமா பரவுகிறது. சிறுநீரக செயல்பாடு குறைவது இரத்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். இது மார்பு வலி, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும்.
நிலை 5: இறுதி நிலை சிறுநீரக நோய்
இந்த மேம்பட்ட கட்டத்தில், சிறுநீரகங்கள் இனி அவற்றின் முக்கிய செயல்பாடுகளைச் செய்ய முடியாமல், செயலிழக்க தொடங்கும். இதன் அறிகுறிகள் கடுமையான சோர்வு, தொடர்ந்து குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுவது, பசியின்மை மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படுவது ஆகியவை அடங்கும்.
அதிகப்படியான திரவம் கடுமையான வீக்கம் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இரத்தத்தில் கழிவுப் பொருட்கள் சேர்வதால், உங்கள் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்கு கூட நீங்கள் செல்லலாம்.
இறுதிக்குறிப்பு
மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், சரியான மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக உடனே மருத்துவரை அணுகுவது முக்கியம். வழக்கமான பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் உடனடி மருத்துவ தலையீடு ஆகியவை சிறுநீரக நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்கவும் விளைவுகளை மேம்படுத்தவும் உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
