Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
உங்க நகம் இப்படி இருக்கா? அப்ப உங்களுக்கு ஹைப்போதைராய்டு இருக்கு-ன்னு அர்த்தமாம்.. உஷார்..
Hypothyroidism Symptoms In Tamil: நமது உடலில் கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இந்த சுரப்பியின் முக்கியமான வேலை உடலின் மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்தும் டி3 மற்றும் டி4 ஹார்மோன்களை உற்பத்தி செய்வதாகும். இந்த ஹார்மோன்கள் இதயத் துடிப்பு, செரிமானம், தசை கட்டுப்பாடு, மூளை வளர்ச்சி மற்றும் மனநிலை ஆகியவற்றை பாதிக்கிறது.
மேலும் இந்த சுரப்பி இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவுகளை நிர்வகிக்க உதவும் கால்சிடோனின் என்ற ஹார்மோனையும் உற்பத்தி செய்கிறது. மொத்தத்தில் இது உடலின் ஒவ்வொரு உறுப்பு மற்றும் அமைப்பையும் பாதிப்பதால், இந்த சுரப்பியின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த சுரப்பியில் இரண்டு விதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அவை ஹைப்போதைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு. இதில் ஹைப்போ தைராய்டு என்பது உடலில் போதுமான தைராய்டு ஹைர்மோன்களை உற்பத்தி செய்யாத ஒரு நிலையாகும் மற்றும் ஹைப்பர் தைராய்டு என்பது அளவுக்கு அதிகமாக ஹார்மோன்கள் உற்பத்தி செய்யும் நிலையாகும்.
எப்போது ஒருவரது உடலில் போதுமான அளவு ஹார்மோன்கள் உற்பத்தி செய்ய முடியவில்லையோ, அப்போது அதன் அறிகுறிகள் நகங்களிலும் தெரிகின்றன. இப்போது ஒருவருக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால் நகங்களில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பதைக் காண்போம்.
1. உடையும் நகங்கள்
உங்கள் நகங்கள் எளிதில் உடைகிறதா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒருவரது நகங்கள் எளிதில் உடைகிறது என்றால், அது ஹைப்போதைராய்டிசத்தின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் எப்போது ஒருவரது உடலில் தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கிறதோ, அப்போது உடலின் மெட்டபாலிசம் குறைகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதும் குறைகிறது. இதன் விளைவாக நகங்களின் வலிமைக்கு வேண்டிய சத்துக்ள் கிடைக்காமல் எளிதில் உடைகிறது.
2. நகங்களின் வளர்ச்சி குறைவு
உங்களுக்கு நகம் வேகமாக வளர்வதில்லையா? அப்படியானால் உங்களுக்கு ஹைப்போதைராய்டு இருக்க வாய்ப்புள்ளது. எனவே காரணமில்லாமல் நகங்கள் வளர்ச்சி குறைந்து காணப்பட்டால், உங்களுக்கு ஹைப்போதைராய்டு இருக்க வாய்ப்புள்ளது.
3. நகங்களில் கோடுகள்
உங்கள் நகங்களில் கோடுகள் தெரிகிறதா? அதுவும் இந்த கோடுகள், செங்குத்தாக நன்கு தெரிகிறதா? இப்படியான கோடுகள் பொதுகவாக முதுமையின் காரணமாக காலப்போக்கில் உருவானாலும், இளம் வயதில் இப்படியான கோடுகள் நகங்களில் தெரிந்தால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது.
4. நக படுக்கையில் இருந்து நகம் தூக்கியிருப்பது
உங்கள் நக படுக்கையில் இருந்து நகம் வெளியே தூக்கி இருக்கிறதா? அப்படியானால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது என்று அர்த்தம். அதுவும் தைராய்டு பிரச்சனை இருந்தால், இப்படியான பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. வெளிரிய நகங்கள்
உங்கள் விரல் நகங்கள் வித்தியாசமாக உள்ளதா? அதுவும் மற்றவர்களிடமிருந்து உங்கள் நகங்களின் நிறம் மட்டும் வித்தியாசமாகத் தோன்றுவதற்கு ஒரு காரணம் ஹைப்போ தைராய்டிசமாக இருக்கலாம். ஏனெனில் இந்த ஹார்மோன் நிலை மெட்டபாலிசத்தை பாதித்து, உடலில் இரத்த ஓட்டத்தையும் பாதித்து, இதன் விளைவாக உங்கள் விரல் நகங்களின் நிறம் வெளிறியதாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ மாறலாம். எனவே உங்கள் விரல் நகங்கள் விசித்திரமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications