ஆண்களே! படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமா இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் எக்ஸ்ட்ரா சாப்பிடுங்க...

Foods For Erectile Dysfunction: நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருப்பது மட்டுமின்றி, பாலியல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். தற்போது நிறைய ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். விறைப்புத்தன்மை பிரச்சனை என்பது படுக்கையில் துணையை நீண்ட நேரம் சந்தோஷப்படுத்த முடியாமல் போகும் ஒரு பாலியல் பிரச்சனையாகும்.

இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையானது போதுமான இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தினாலும், இதய நோய், உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பல காரணங்களாலும் ஏற்படலாம்.

Top 8 Foods To Fight Erectile Dysfunction And Improve Libido

இருப்பினும், இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படும் ஆண்கள், உணவுமுறையில் மாற்றங்களை செய்வதன் மூலம் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். கீழே ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்ய உதவும் உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

1. பீட்ரூட்

ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்ய பீட்ரூட் பெரிதும் உதவி புரியும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரைட்டுகள் உடலினுள் நைட்ரேட்டுகளாக மாற்றமடைகின்றன. இந்த நைட்ரேட்டுகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. முக்கியமாக உடலின் கீழ் பகுதியான ஆணுறுப்பினும் இரத்த ஓட்டம் அதிகரித்து, விறைப்புத்தன்மை பிரச்சனை தடுக்கப்படலாம். எனவே இதுவரை பீட்ரூட் சாப்பிடாமல் இருந்தால், படுக்கையில் நீண்ட நேரம் சந்தோஷமாக இருக்க விரும்பினால், இனிமேல் பீட்ரூட்டை சாப்பிடுங்கள்.

2. பச்சை இலைக்காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான கீரைகள், செலரி, முட்டைக்கோஸ் போன்றவற்றிலும், பீட்ரூட்டில் இருப்பது போன்றை நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. எனவே இந்த வகையான காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வருவதன் மூலம், விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம்.

3. தர்பூசணி

கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் தர்பூசணி, வெறும் நீர்ச்சத்து நிறைந்த பழம் மட்டுமின்றி, ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிக்கத் தேவையான இரண்டு விதமான எல்-சிட்ருலின் மற்றும் லைகோபீன் என்னும் கூறுகள் அதிகமாக உள்ளன. இவ்விரண்டும் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நீண்ட நேரம் படுக்கையில் சந்தோஷமாக இருக்க உதவி புரியும். எனவே விறைப்புத்தன்மை குறைபாட்டை வெல்ல தர்பூசணி பழத்தை அதிகம் உட்கொள்ளுங்கள்.

4. டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டுகளில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த டார்க் சாக்லேட்டை உட்கொள்ளும் போது, அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே பாலியல் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் அவ்வப்போது டார்க் சாக்லேட் சாப்பிட்டு வர, விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

5. பிஸ்தா

தினமும் ஒரு கைப்பிடி பாஸ்தாவை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அது பாலியல் ஆசைகளையும், ஆண்மைத் திறனையும் மேம்படுத்தும். அதுவும் பிஸ்தாவில் உள்ள அர்ஜினைன், மனநிலையை சரியாக மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது இரத்த நாளங்களை தளர்வடைய செய்யவும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

6. தக்காளி

தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் பைட்ரோநியூட்ரியண்ட்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், பல்வேறு பாலியல் பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் தக்காளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் உறவில் ஈடுபடுவதற்கு முன் தக்காளி சாலட் சாப்பிட்டால், நீண்ட நேரம் படுக்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.

7. முருங்கைக்காய்

முருங்கைக்காய், முருங்கைப்பூ மற்றும் முருங்கைக்கீரை என முருங்கையின் அனைத்து பாகங்களும் பாலுணர்ச்சியைத் தூண்டும் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆண்கள் இவற்றை உட்கொள்வதன் மூலம், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, பாலுணர்ச்சி இருமடங்கு அதிகரிக்கும். அதனால் தான் முருங்கைக்காயை ஒரு நேச்சுரல் வயாகரா என்று அழைக்கின்றனர்.

8. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இது உடலில் சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் வாழைப்பழம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை மேம்படுத்தி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எனவே உறவில் ஈடுபடும் முன் வாழைப்பழத்தை உட்கொண்டு, பேரின்பத்தை அனுபவியுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, February 10, 2025, 19:24 [IST]
Desktop Bottom Promotion