Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப உடம்புல வைட்டமின் சி கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
Vitamin C Deficiency Symptoms In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சரியான அளவில் கிடைக்க வேண்டும். அப்படி உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு வைட்டமின் தான் வைட்டமின் சி.
இந்த வைட்டமின் சி நமது உடலில் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த வைட்டமின் சி-யை உடலில் சேமிக்க முடியாது. இதன் காரணமாக இந்த வைட்டமின் சி குறைபாடு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் இந்த வைட்டமின் சி நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைந்துள்ளதால், தினமும் இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், இந்த குறைபாடு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கலாம்.

சரி, ஒருவருக்கு வைட்டமின் சி குறைபாடு இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று பலரும் கேட்கலாம். கீழே வைட்டமின் சி குறைபாட்டில் சில பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அவர்களுக்கு வைட்டமின் சி குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவது
உங்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறதா? அப்படியானால் உங்கள் உடலில் வைட்டமின் சி குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வைட்டமின் சி-யானது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களை பாதுகாக்கும் மற்றும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவும் ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இந்த வைட்டமின் சி உடலில் போதுமான அளவில் இருந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெற்று, அடிக்கடி நோய்வாய்ப்படுவது தடுக்கப்படும்.
காயங்கள் மெதுவாக குணமாவது
காயங்கள் ஏற்பட்டு, அந்த காயங்கள் குணமடைவதில் சிக்கல் இருந்தால், வைட்டமின் சி உடம்பில் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஆய்வுகளின் படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிக அளவு வைட்டமின் சி பெற்ற நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், சப்ளிமெண்ட் எடுக்காதவர்களை விட வேகமாக குணமடைவது தெரிய வந்துள்ளது. ஏனெனில் வைட்டமின் சி ஆரோக்கியமான கொலாஜெனை ஆதரிக்கிறது. இது சருமத்தை மென்மையாகவும் மீள்தன்மையுடனும் பராமரிக்கும் ஒரு புரோட்டீன் ஆகும். எனவே காயங்கள் குணமாக வேண்டுமானால் மற்றும் இளமையான சருமத்தைப் பெற விரும்பினால், வைட்டமின் சி நிறைந்த கிவி, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை போதுமான அளவில் உட்கொண்டு வாருங்கள்.
மிகுந்த உடல் சோர்வு
எப்போதும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உடலில் வைட்டமின் சி குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் எந்த ஒரு கடினமான வேலையையும் செய்யாமல் காரணமின்றி மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், வைட்டமின் சி குறைவாக இருக்கலாம். இருப்பினும் உடல் சோர்வுக்கு வேறு பல காரணங்களும் இருப்பதால், உடல் சோர்வை சந்தித்தால் அசால்ட்டாக இருக்காமல், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
சரும பிரச்சனைகள்
ஒருவரது உடலில் போதுமான அளவு வைட்டமின் சி இல்லாவிட்டால், சருமத்தில் பல மாற்றங்களைக் காணக்கூடும். அதில் சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள், சிராய்ப்புகள் போன்றவற்றைக் காணக்கூடும். அதோடு வாயின் மூலைகளில் வறட்சி மற்றும் விரிசலை சந்திக்க நேரிடும்.
எளிதில் காயமடைவது
வழக்கத்தை விட அதிகமாக காயங்களை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உடம்பில் வைட்டமின் சி குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த வைட்டமின் இரத்த உறைதலை ஊக்குவிக்கிறது மற்றும் உடலின் திசுக்களை வலுவாக பராமரிக்கிறது. உங்கள் உடலில் போதுமான அளவு வைட்டமின் சி இல்லையென்றால், அது விரைவாக காயங்கள் ஏற்பட வழிவகுக்கும்.
ஈறுகளில் இரத்தக்கசிவு
வைட்டமின் சி என்பது ஈறு நோயைத் தடுக்க உதவும் ஒரு பயனுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஈறுகளில் இரத்தப்போக்கு இருந்தால் , வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். அதே நேரத்தில் விரைவில் மருத்துவரையும் அணுகுங்கள்.
மூட்டு வலி
மூட்டு வலி என்பது வைட்டமின் சி பற்றாக்குறையின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் இந்த பற்றாக்குறை இருந்தால், உடலின் எந்த மூட்டு பகுதி வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். இருப்பினும் முழங்கால் மற்றும் இடுப்புகளில் அதிகமாக வலியை சந்திக்க நேரிடும். ஏனெனில் வைட்டமின் சி ஆரோக்கியமான கொலாஜன் உருவாவதை ஊக்குவிக்கிறது, இது மூட்டுகளை வலுப்படுத்த உதவுகிறது. நீங்கள் போதுமான அளவு உட்கொள்ளவில்லை என்றால், உங்கள் மூட்டுகள் பாதிக்கப்படலாம். எனவே திடீரென்று மூட்டு வலியை சந்தித்தால், விரைவில் மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications