Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
90% மக்கள் புறக்கணிக்கும் கொழுப்பு கல்லீரல் நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்! அவசியம் தெரிஞ்சு வெச்சுக்கோங்க..
Fatty Liver Symptoms In Tamil: சமீப காலமாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளம் வயதினர் பலர் கல்லீரல் பிரச்சனைகளால் சிரமப்பட்டு வருகின்றனர். அதுவும் கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவான, அதே சமயம் கவனிக்கப்படாத ஆரோக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாக உள்ளது. சொல்லப்போனால் அமைதியாக ஒருவரை பாதித்து வரும் ஒன்றாக உள்ளது.
கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்புக்கள் சேரும் போது ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இந்த கொழுப்பு கல்லீரல் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தாலும், இதற்கு போதுமான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் அது கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நமது உடலில் கல்லீரல் பல முக்கியமான பணிகளை செய்யக்கூடிய மிகவும் முக்கியமான உறுப்பாகும். கல்லீரலில் ஒரே நாளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. அதேப் போல் ஒரே நாளில் கொழுப்புக்களும் சேர்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சேரும். அதுவும் கல்லீரல் செல்களில் கொழுப்புக்கள் சேரத் தொடங்கினால், அது ஆரம்பத்திலேயே ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை கவனித்தால், எளிதில் சிகிச்சை அளித்து சரிசெய்துவிடலாம்.
ஆனால் இதன் அறிகுறிகள் தினசரி சந்திக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று இருப்பதால், 90 சதவீத மக்கள் சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர். பின் நிலைமை முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுகின்றனர். கீழே ஒருவரது கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தால் வெளிப்படும் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
1. மேல் வலது வயிற்றில் வலி மற்றும் அசௌகரியம்
உங்கள் வயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலியையோ அல்லது ஒருவித அசௌகரியத்தையோ சந்திக்கிறீர்களா? அதுவும் இப்படியான அசளெகரியத்தையும், வலியையும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேல் சந்தித்து வந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் அது கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கி விரிவடைந்து மற்ற உறுப்புக்களில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் ஏற்பட்டிருக்கலாம்.
2. மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனம்
நன்கு ஓய்வு எடுத்த பின்னரும் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அதோடு உடல் மிகவும் பலவீனமாக இருப்பதாக உணர்கிறீர்களா? நமது கல்லீரல் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்புக்கள் தேங்கியிருக்கும் போது, உடல் சகிப்புத்தன்மையை இழக்கத் தொடங்கிவிடுகிறது. இதன் விளைவாக சிறு வேலையை செய்தாலும் மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடுகிறது. எனவே இப்படியான சோர்வை வழக்கத்திற்கு மாறாக அதிகம் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
3. பசியின்மை
உங்களுக்கு வரவர பசிக்கவில்லையா? குமட்டல் வருவது போன்று உள்ளதா? அப்படியானால் கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்புக்கள் தேங்கி ஒருவித அழுத்தம் இருப்பதால் செரிமானம் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதன் விளைவாக அடிக்கடி குமட்டல் அல்லது வயிற்று உப்புசம் மட்டுமின்றி, உணவில் ஆர்வம் குறையக்கூடும். இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்து வந்தால், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
4. திடீர் எடை அதிகரிப்பு
நீங்கள் திடீரென்று உடல் பருமனாகியுள்ளீர்களா அல்லது எவ்வளவு முயற்சித்தும் உடல் எடையைக் குறைக்க முடியாமல் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால் கல்லீரல் கொழுப்பை கரைக்கும் திறனை இழந்து பலவீனமாக இருக்கலாம். ஆகவே நீங்கள் எதிர்பாராதவிதமாக உடல் எடை அதிகரித்திருப்பதை கண்டால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள்.
5. மனக்குழப்பம்
வரவர உங்களால் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லையா? ஞாபக மறதி அதிகமாக இருப்பதை உணர்கிறீர்களா? எப்போதும் மனக்குழப்பத்துடன் ஒரு தெளிவு இல்லாமல் உள்ளீர்களா? முடிவெடுக்க முடியவில்லையா? அப்படியானால் கொழுப்பு கல்லீரலானது உங்களை மனதளவில் பாதிக்க தொடங்கிவிட்டது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
6. கருவளையம்
எப்போது ஒருவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் உள்ளதோ, அப்போது இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் சேரத் தொடங்கிவிடும். இதன் விளைவாக கண்களைச் சுற்றி கருவளையங்கள், சருமத்தில் கடுமையான அரிப்பு, கருமையான திட்டுக்கள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால் ஆரம்ப கட்டத்தில் தெரியக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை கவனித்து சிகிச்சை மேற்கொண்டால், இந்நோயில் இருந்து மீளலாம். அதுவும் இந்த அறிகுறிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை சந்தித்தால், உடனே கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனையை செய்து மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications