கோடையில் தினமும் காலையில் 1 கப் பழைய கஞ்சி சாப்பிட்டா இவ்வளவு நன்மை கிடைக்குமா? அப்ப மிஸ் பண்ணாதீங்க..

Kanji Benefits In Tamil: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெளியே வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து, அதன் விளைவாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் உடல் வெப்பநிலை கட்டுக்கடங்காமல் அதிகரித்தால், அதன் விளைவாக வெப்பவாதம் வந்து உயிரை இழக்கும் அபாயம் ஏற்படும்.

எனவே கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதைத் தவிர உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

Top 6 Reasons Why Should We Eat Kanji During Summer

முக்கியமாக நம் முன்னோர்கள் பாரம்பரியமாக உட்கொண்டு வந்த பழைய சோறு, நாம் நினைத்திராத அளவில் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. இந்த கஞ்சியானது முந்தைய நாள் சமைத்த சாதத்தில் நீரை ஊற்றி, மறுநாள் காலையில் அந்த சாதத்துடன் தயிர், வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இந்த பழைய சாதத்தில் பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, கனிமச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இந்த கஞ்சி உடலுக்கு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதோடு, உடலுக்கு வேறு பல நன்மைகளையும் வழங்கும். இப்போது பழைய சாதத்தை காலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

1. செரிமானம் மேம்படும்

பழைய சாதத்தில் நார்ச்சத்து மற்றும் புரோபயோடிக் அதிகமாக உள்ளன. இவை ஃபுட் பாய்சனிங், வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கும். அதுவும் கஞ்சியில் உள்ள ஸ்டார்ச் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, ஆரோக்கியமான குடலியக்கத்தை ஊக்குவிக்கும். மேலும் இது அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்றவற்றைத் தடுக்கும்.

2. ஆற்றல் மேம்படும்

பழைய கஞ்சியின் நீர் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இது உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிதமான அளவில் இருப்பதால், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து, நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும்.

3. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பழைய கஞ்சியில் பி வைட்டமின்கள், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இவை ஆற்றல் உற்பத்திக்கு இன்றியமையாதவை மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளவும் அவசியமானவை. அதுவும் கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கஞ்சியை தினமும் குடித்து வாருங்கள்.

4. நீரிழப்பைத் தடுக்கும்

கோடைக்காலத்தில் கஞ்சியை தினமும் குடித்து வரும் போது, அது உடலை நீண்ட நேரம் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும், வெப்ப வாதத்தில் இருந்து தடுக்கவும் உதவுகிறது. கோடையில் கஞ்சியைக் குடிக்கும் போது, அது வியர்வையினால் உடல் வறண்டு போவதைத் தடுக்கும்.

5. முடி வளர்ச்சி அதிகரிக்கும்

பழைய சாதத்தில் அமினோ அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை தலைமுடியை மென்மையாகவும், வலுவாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ள உதவும் மற்றும் முடியை வேகமாகவும் வளர உதவும். கஞ்சியில் உள்ள சத்துக்கள், மயிர்கால்கள் முதல் முடியின் முனை வரை வலுப்படுத்தி, முடி உடைவது, முடி உதிர்வது மற்றும் முடிப்பிளவு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இப்படி இந்த கஞ்சியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

6. சரும ஆரோக்கியம் மேம்படும்

பழைய சோற்றில் வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் பெருலிக் அமிலம் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன. இவை பொலிவிழந்த சருமத்தை பொலிவாக்குவதோடு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதுவும் கோடையில் பழைய சாதத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். முக்கியமாக இது சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. எனவே நீங்கள் அழகாக ஜொலிக்க விரும்பினால், கஞ்சியை தினமும் குடித்து வாருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, April 17, 2025, 12:55 [IST]
Desktop Bottom Promotion