Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
உங்க உதடுகள் இப்படி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது இதய நோயின் எச்சரிக்கை அறிகுறி.. உஷார்...
Heart Disease Symptoms On Lips In Tamil: ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் உதடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் அதை விட உதடுகள் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றியும் வெளிக்காட்டும். ஆனால் இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரிவதில்லை.
பொதுவாக குளிர்காலத்தில் உதடுகள் அதிகமாக வறண்டு, வெடிப்புகள் ஏற்படும். அப்போது அதை தடுக்க உதடுகளுக்கு லிப் பாம்களை பயன்படுத்துவோம். ஆனால் இந்த உதடு வெடிப்புகள் மற்ற காலங்களில், அதுவும் போதுமான பராமரிப்புக்களைக் கொடுத்தும் சரியாகாமல் இருந்தால், அது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரியுமா?

என்ன நம்பமுடியவில்லையா? ஆம், உண்மையில் நமது உதடுகளும் இதயத்தில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டும். எனவே உதடுகளில் சந்திக்கும் பிரச்சனைகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. கீழே ஒருவரது இதயத்தில் பிரச்சனை இருந்தால் அல்லது இதய நோய் இருந்தால் உதடுகளில் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகள் தெரிந்தால், அவற்றைப் புறக்கணிக்காதீர்கள்.
1. நீலம் அல்லது ஊதா நிற உதடுகள்
உதடுகள் நீல நிறத்திலோ அல்லது ஊதா நிறத்திலோ காணப்படுகிறதா? அப்படியானால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்று அர்த்தம். இதயம் சரியாக செயல்படாத போது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். இது இப்படியே நீடிக்கும் போது அது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும். எனவே நன்கு ஓய்வு எடுத்த பின்னரும் தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், மிகுந்த உடல் சோர்வுடன், உதடுகளும் நிறம் மாறி காணப்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. வெளுத்துப் போன உதடுகள்
உங்களின் உதடுகள் வெளுத்து போய் இருக்கிறதா? அப்படியானால் இது இரத்த சோகையால் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் மற்றும் இது உங்கள் இதயம் இரத்தத்தை எவ்வளவு நன்றாகச் சுழற்சி செய்கிறது என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கும். இத்துடன் கை, கால்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
3. தொடர்ச்சியான உதடு வறட்சியும்.. வெடிப்புகளும்..
குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போவதும், வெடிப்புகள் ஏற்படுவதும் பொதுவானது. ஆனால் உடலை நன்கு நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டு, லிப் பாம்களை பயன்படுத்தி வந்தும், தொடர்ந்து வறட்சியையும், வெடிப்பையும் சந்தித்தால், உடலில் இரத்த ஓட்டம் மோசமான உள்ளது என்று அர்த்தம். அத்துடன் கால் வீக்கம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளையும் சந்தித்தால், இதய ஆரோக்கியம் மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
4. உதடு வீக்கம்
ஏதாவது அழற்சி ஏற்பட்டிருந்தால் வீக்கம் ஏற்படலாம். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் வீக்கத்தை சந்தித்தால், அது உடலில் நீர் தேக்கத்தின் அறிகுறியாகும். வழக்கமாக இது இதய செயலிழப்பினால் ஏற்படலாம். எப்போது உதடுகளில் மட்டுமின்றி, உடலின் கணுக்கால், பாதங்கள், வயிறு போன்ற இடங்களில் திரவங்கள் தேங்குகிறதோ, அது இதய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே காரணமின்றி வீக்கத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. மரத்துப் போன உதடுகள்
உதடுகள் மரத்துப் போவது என்பது சாதாரணம் அல்ல, அது மிகவும் தீவிரமான பிரச்சனை. குறிப்பாக இது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருந்தால் நிகழும். எனவே உதடுகளுடன், முகமும் மரத்துப் போவதை கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
6. ஆறாத புண்கள்
உதடுகளைச் சுற்றியுள்ள பகுதியில் புண்கள் வந்து, அது ஆறாமல் நீடித்திருந்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஒரு சாதாரண தோல் பிரச்சனையை விடப் பெரியது. உடலில் இரத்த ஓட்டம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் மோசமாக இருந்தால் தான், இப்படி புண்கள் ஆறுமல் இருக்கும். எனவே 2 வாரங்களுக்கு மேலாகியும் புண்கள் ஆறாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











