Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. அது வயிற்று புற்றுநோயா இருக்கலாம்!
Stomach Cancer Symptoms In Tamil: உலகளவில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ஒரு கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவை பாதிக்கப்படும் இடத்தைப் பொறுத்தது. அதில் ஒன்று தான் வயிற்று புற்றுநோய். புற்றுநோய்களிலேயே வயிற்று புற்றுநோய் அமைதியாக இருந்து ஆளை கொல்லக்கூடியது.
ஏனெனில் இதன் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானது மற்றும் தினமும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் போன்று இருப்பதால், பலரும் புறக்கணிப்பார்கள். இதனால் தான் வயிற்று புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது என்பது கடினம். பெரும்பாலும் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிய நிலையில் தான் மருத்துவரை அணுகி கண்டுபிடிக்கிறார்கள்.

தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் வயிற்று புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. எனவே இந்த புற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், ஆரம்ப கட்டத்தில் தெரியக்கூடிய அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கீழே வயிற்று புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
1. வயிறு நிரம்பிய உணர்வு
உங்களுக்கு வரவர பசி எடுக்கவில்லையா? சிறிதளவு சாப்பிட்டாலும், வயிற்று நிரம்பிவிடும் உணர்வு எழுகிறதா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் சிறிது உட்கொண்டும் வயிறு நிரம்பிய உணர்வு எழுந்தால், வயிற்றில் கட்டிகள் வளர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இப்படி சரியாக சாப்பிடாமல் இருந்தால், பின் அது விவரிக்க முடியாத எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
2. தொடர்ச்சியான நெஞ்செரிச்சல்
சமீப நாட்களாக நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றை அதிகம் சந்திக்கிறீர்களா? இந்த பிரச்சனைக்கு நீங்களே கை வைத்தியம் செய்து சரிசெய்ய நினைத்தும், எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். முக்கியமாக வாரக்கணக்கில் இது தொடர்ந்தால், அது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
3. குமட்டல் அல்லது வயிற்று அசௌகரியம்
எந்த காரணமும் இல்லாமல் குமட்டலை சந்திக்கிறீர்களா? மேலும் அவ்வப்போது வயிறு மிகுந்த அசௌகரியத்துடன் இருப்பதை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது இரைப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இப்படியான சௌகரியம் நீண்ட காலம் தொடர்ந்தாலோ அல்லது மீண்டும் ஏற்பட்டாலோ, அவற்றை சற்றும் புறக்கணிக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. பசியின்மை
உங்களுக்கு வரவர பசி ஏதும் எடுக்கவில்லையா? நன்றாக உணரும் போது கூட பசி எடுக்காமல் இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் அது வயிற்று புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் கூற்றுப்படி , "புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பசியை முற்றிலுமாக இழக்கும் போது, இது எடை மற்றும் தசை இழப்பு இரண்டிற்கும் வழிவகுக்கிறது. எனவே நீங்கள் நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற அறிகுறிகளுடன் இந்த அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. தொடர்ச்சியான உடல் பலவீனம்
நீங்கள் தொடர்ந்து உடல் பலவீனம் அல்லது உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் இப்படி மிகுந்த சோர்வை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உடலினுள் ஏற்பட்டுள்ள மெதுவான உட்புற இரத்தப்போக்கு அல்லது குறைவான இரத்த சிவப்பணு எண்ணிக்கை (இரத்த சோகை) இதற்குப் பின்னால் உள்ள அமைதியான காரணமாக இருக்கலாம். எனவே வழக்கத்தை விட கூடுதல் பலவீனத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications