Latest Updates
-
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.! -
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த 5 வகையான மீன்களை சாப்பிட்டா.. மாரடைப்பை தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காதாம்..
Cholesterol: தற்போது மாரடைப்பால் நிறைய பேர் உயிரிழந்து வருகின்றனர். இப்படி மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், முதன்மையான முக்கிய காரணியாக இருப்பது கொலஸ்ட்ரால் தான். கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களிகூம் காணப்படும் ஒரு கொழுப்பு பொருளாகும்.
இந்த கொலஸ்ட்ரால் வைட்டமின் டி-யை செயலாக்கவும், உணவுகளை உடைக்கவும், ஹார்மோன்களை உருவாக்கவும் உதவுகிறது. கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால்.

எப்போது ஒருவர் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கத்தை கொண்டுள்ளார்களோ, அவர்களின் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றன. கொலஸ்ட்ரால் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொண்டால், பின் அந்த கொலஸ்ட்ரால் இரத்தக்குழாய்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு அல்லது பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, கொலஸ்ட்ரால் குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
அதுவும் நீங்கள் அசைவ பிரியர் என்றால், மட்டன் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உடலில் கொலஸ்ட்ரால் அளவு வேகமாக அதிகரிக்கும். ஆனால் சிக்கன், மீன் போன்றவற்றை சாப்பிடலாம். மீனில் பல வகைகள் உள்ளன. அனைத்து மீன்களுமே உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தாது. சில வகையான மீன்கள் தான் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். இப்போது மாரடைப்பைத் தடுக்க உதவும் அந்த மீன்கள் எவையென்பதைக் காண்போம்.
1. சூரை மீன் (Tuna Fish)
சூரை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள் இரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவி புரிந்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
2. கானாங்கெளுத்தி மீன் (Mackerel Fish)
மீன்களில் கானாங்கெளுத்தி மீன் மிகவும் சுவையாக இருப்பதோடு, இந்த மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. இப்படிப்பட்ட கானாங்கெளுத்தி மீன் உலகளவில் உட்கொள்ளப்படும் ஒரு முக்கியமான மீனாகும். எனவே மாரடைப்பு வரக்கூடாதெனில் நீங்களும் இந்த மீனை வாங்கி சாப்பிடுங்கள்.
3. கெண்ணொன்/ட்ரௌட் மீன் (Trout Fish)
கெண்ணொன் அல்லது ட்ரௌட் மீனிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடாதெனில், இந்த ட்ரௌட் மீனை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
4. ஹெர்ரிங் மீன் (Herring Fish)
மற்ற மீன்களை விட ஹெர்ரிங் மீனில் EPA மற்றும் DHA என்னும் இரண்டு வகையான அத்தியாவசிய கொபப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலினுள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. முக்கியமாக இந்த மீனில் வைட்டமின் டி-யும் அதிகளவில் நிறைந்துள்ளன.
5. மத்தி மீன் (Sardines)
மீன்களில் மத்தி மீன் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. அதுவும் இந்த மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்றவையும், இரும்புச்சத்து, செலினியம் போன்ற தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. எனவே இந்த மத்தி மீனை அடிக்கடி வாங்கி சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும் மற்றும் ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications