Latest Updates
-
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா? -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால்… பணமும் அதிர்ஷ்டமும் தானாக தேடி வரும், தெரியுமா? -
கொங்குநாடு கோழி வறுவல் ரெசிபி - சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
சனி-சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே! உங்ககிட்ட இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப உங்க விந்தணு ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்..
Unhealthy Sperm Symptoms In Tamil: நாம் பெரும்பாலும் வேலை, குடும்பம் மற்றும் பிற விஷயங்களுக்கு தான் முதலில் முன்னுரிமை கொடுப்போம். மேலும் இதில் நமது ஆரோக்கியம் கடைசியாகவே வரும். அதுவும் ஆரோக்கியத்தில் பிரச்சனை வந்தால் மட்டுமே, உடல் நலத்தின் மீது அக்கறை காட்ட தொடங்குவோம். ஆனால் நமது உடல் ஆரோக்கியம் தினசரி மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது.
அதுவும் தற்போது பிட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகள், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை, மன அழுத்தம் நிறைந்த வேலை, போதுமான தூக்கமில்லாமை, மது, சிகரெட் போன்ற பழக்கங்களால் உடல் ஆரோக்கியம் மோசமாக சீரழிந்து வருகிறது. குறிப்பாக ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் இவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இதற்கு முதன்மையான காரணம் வாழ்க்கை முறையும், பழக்கங்களும் தான். இதன் விளைவாகவே தற்போது திருமணமான பல தம்பதிகள் குழந்தை பெற்றெடுப்பதில் சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இதில் பெண்கள் பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற பிரச்சனையால் அவதிப்பட, மறுபுறம் ஆண்கள் ஆரோக்கியமற்ற விந்தணு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சரி, ஒரு ஆணின் விந்தணு ஆரோக்கியம் மோசமாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தெரியும் என்று கேட்கலாம். கீழே அந்த எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1. விந்து நிற மாற்றம்
விந்தணுவின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், மஞ்சள் காமாலை இருக்க வாய்ப்புள்ளது அல்லது அதிகப்படியான சல்பர் நிறைந்த உணவுகள் அல்லது அதிக மது அருந்தியிருக்க வாய்ப்புள்ளது. அதுவே விந்து பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் இருந்தால், ஏதோ பாக்டீரியல் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். மேலும்
2. இரத்தம் கலந்த விந்து
விந்துவில் இரத்தம் கலந்து வெளியேறுவதைக் கண்டால், பாக்டீரியா அல்லது க்ளமீடியா போன்றவற்றால் பாலியல் நோய் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் இது புரோஸ்டேட் சுரப்பி தொற்று அல்லது சிறுநீர்க்குழாயில் ஏற்படும் காயத்தையும் சுட்டிக் காட்டலாம். எனவே கவனமாக இருங்கள்.
3. வீங்கிய விதைப்பை அல்லது வலி
ஆண்கள் தங்களின் விதைப்பையில் வழக்கத்திற்கு மாறாக வீக்கத்தைக் கண்டாலோ அல்லது வலியை சந்தித்தாலோ, அதை சாதாரணமாக விடக்கூடாது. அது புரோஸ்டேடிடிஸ், எபிடிடிமிடிஸ், ஆர்க்கிடிஸ் அல்லது ஹைட்ரோசீல் இருப்பதைக் குறிக்கலாம். எனவே இந்த அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. குறைவான அளவில் விந்து வெளியேறுவது
விந்து மிகவும் குறைவான அளவில் வெளியேறினாலோ அல்லது விந்து வெளிவராமல் இருந்தாலோ, விந்து வெளிவரும் குழாயில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், பின் அது நீண்டகால கருவுறுதல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் இயற்கையான கருத்தரிப்பை மிகவும் கடினமாக்கும்.
5. நீர் போன்ற விந்து
விந்து மிகவும் நீர் போன்று இருந்தால், விந்துவில் உள்ள விந்தணுக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே உங்களின் விந்து நீர் போன்று வெளியேறுவதைக் கண்டால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications