Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குளிர்காலத்தில் இந்த உணவுகளை காபி, டீயுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்ல இந்த பிரச்சனை-லாம் சந்திப்பீங்க..
Worst Food Pairings With Coffee, Tea: பொதுவாக மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் காபி, டீயை அதிகம் குடிப்போம். ஏனெனில் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், சற்று மந்தமாக இருக்கும். இந்நிலையில் சூடாக ஏதாவது குடித்தால் சுறுசுறுப்பாக செயல்படலாம். ஆனால் அப்படி காபி, டீ குடிக்கும் போது, சிலர் ஒருசில நொறுக்குதீனிகளையும் சேர்த்து உட்கொள்வார்கள்.
காபி, டீ குடிக்கும் போது ஒருசில உணவுகளை சேர்த்து உட்கொள்ளும் போது, அவை உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனைக் குறைக்கலாம் மற்றும் அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்றவற்றை தூண்டலாம்.

மேலும் குளிர்காலத்தில் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் சற்று மந்தமாக இருக்கும். இந்நிலையில் காபி, டீயுடன் சேர்த்து சில உணவுகளை உட்கொள்வதால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு இன்னும் மோசமாகி, செரிமான பிரச்சனைகளுடன், ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது காபி, டீ குடிக்கும் போது எந்த வகையான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காண்போம்.
1. கடலை மாவால் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ்கள்
பொதுவாக காபி, டீ குடிக்கும் போது பெரும்பாலானோர் உட்கொள்ளும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா, பஜ்ஜி, வடை போன்றவையாகவே இருக்கும். இந்த வகை ஸ்நாக்ஸ்களில் கடலை மாவு தான் முக்கியமான பொருள். கடலை மாவை அதிகம் உட்கொள்ளும் போது அது ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சும் திறனைக் குறைத்து, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே காபி, டீயுடன் இந்த வகையான ஸ்நாக்ஸ்களை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
2. குளிர்ந்த உணவுகள்
சில வடஇந்திய வீடுகளில் காலை உணவாக தயிருடன் பராத்தா, ஊறுகாய் மற்றும் 1 டம்ளர் சூடான டீ இருக்கும். ஆனால் இந்த காம்பினேஷன் செரிமான மண்டலத்தை பலவீனமாக்கும் மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். எனவே எப்போதும் காபி, டீயுடன் எந்த ஒரு குளிர்ச்சியான உணவுகளையும் உட்கொள்ளாதீர்கள், குறைந்தது 30 நிமிடம் இடைவெளி விட்டு பின்னர் உட்கொள்ளுங்கள்.
3. மஞ்சள் சேர்த்த உணவுகள்
மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஒருவர் தினமும் உட்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான மசாலா பொருள். ஆனால் இந்த மஞ்சள் கலந்த உணவுகளை காபி, டீயுடன் சேர்த்து உட்கொண்டால், அது வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே இதை தவிர்த்திடுங்கள்.
4. டீயில் எலுமிச்சை
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இந்த எலுமிச்சையை டீயுடன் சேர்த்து கலந்து குடித்தால், அது சில சமயங்களில் குமட்டல், வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். மேலும் இயற்கையாகவே டீ அசிட்டிக் தன்மையைக் கொண்டது. இந்நிலையில் எலுமிச்சையை சேர்க்கும் போது, இன்னும் அசிட்டிக் தன்மை அதிகரித்து, அதன் விளைவாக வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். எனவே காலையில் வெறும் வயிற்றில் லெமன் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
5. இரும்புச்சத்துள்ள உணவுகள்
டீயில் டானின்கள் மற்றும் ஆக்ஸலேட்டுகள் உள்ளன. இவை உடலானது இரும்புச்சத்து உறிஞ்சுவதைத் தடுக்கும். எனவே எப்போதும் காபி, டீ குடிக்கும் போது, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான நட்ஸ், தானியங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications