Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப சமையலுக்கு இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...
Healthy Cooking Oils In Tamil: தற்போது மக்களிடையே உயர் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் பொதுவாக காணப்படுகின்றன. இந்த பிரச்சனைகளை ஒருவர் தீவிரமாக எடுத்துக் கொண்டு, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்காமல் இருந்தால், அதன் விளைவாக இதய நோய்களின் அபாயம் அதிகரித்துவிடும். முக்கியமாக கொலஸ்ட்ராலைக் குறைக்க கட்டாயம் முயற்சிக்க வேண்டும்.
நமது உடலில் இயற்கையாகவே உடலுக்கு வேண்டிய கொழுப்புக்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், நாம் உண்ணும் உணவுகளிலும் கொலஸ்ட்ரால் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. முக்கியமாக தற்போது எண்ணெயில் பொரித்து உண்ணப்படும் ஜங்க் உணவுகளை மக்கள் அதிகமாக உட்கொள்கின்றனர். பொதுவாக எண்ணெயில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், அதன் விளைவாக உடலில் கொழுப்புக்கள் வேகமாக அதிகரித்துவிடும். எனவே கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கக்கூடாதெனில் சரியான எண்ணெய்களை வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஆனால் கடைகளில் நிறைய எண்ணெய்கள் இருப்பதால், எவற்றை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். எனவே கீழே உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல் தடுக்க உதவும் சில சமையல் எண்ணெய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து உங்கள் சமையலில் பயன்படுத்துங்கள்.
1. ஆலிவ் ஆயில்
ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிரம்பியுள்ளது, இது எல்டிஎல் எனும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் அதே வேளையில், ஒருவரது உடலில் எச்டிஎல் எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். கூடுதலாக இந்த விர்ஜின் ஆலிவ் எண்ணெயில் ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.
2. அவகேடோ எண்ணெய்
அவகேடோ எண்ணெய் உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கும். இதற்கு இதில் இருக்கும் தாவரங்களில் உள்ள பைட்டோஸ்டெரால் தான் காரணம். முக்கியமாக இந்த எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
3. கனோலா எண்ணெய்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றொரு அற்புதமான எண்ணெய் தான் கனோலா எண்ணெய். இதில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக இருந்தாலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் இதில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் வடிவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது வீக்கத்தை எதிர்ப்பு போராடுவதற்கும், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. வால்நட் எண்ணெய்
வால்நட் எண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை சமையலில் சேர்க்கும் போது, அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். இருப்பினும் இந்த எண்ணெயில் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே இவற்றை அளவாக உணவில் சேர்க்க வேண்டும்.
5. ஆளிவிதை எண்ணெய்
ஆளி விதை எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமாக அளவில் நிறைந்துள்ளன. எனவே இந்த எண்ணெயை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவி புரிகிறது. முக்கியமாக இந்த எண்ணெய் சமைத்து முடித்த பின் சுவைக்காக சேர்க்க ஏற்றதாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
