Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாரடைப்பைத் தூண்டும் கொலஸ்ட்ராலை குறைக்க எந்த உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?
Cholesterol-Lowering Veggies And Fruits In Tamil: உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா? உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அப்படியானால் உடனே கொலஸ்ட்ராலைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் சமீப காலமாக மாரடைப்பினால் நிறைய பேர் மரணமடைந்து வருகிறார்கள். மாரடைப்பிற்கு முதன்மையான காரணம் உயர் கொலஸ்ட்ரால் தான்.
எப்படியெனில் கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கும் போது, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அப்படியே படிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்து, ஒரு கட்டத்தில் உயிரையே பறித்துவிடுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்கள் மாத்திரைகளை வழங்கியிருந்தாலும், உண்ணும் உணவுகளிலும் கவனத்தை செலுத்த வேண்டும். அப்படி உணவுகளில் கவனம் செலுத்தி, கொலஸ்ட்லைக் குறைக்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
அதுவும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க எந்த மாதிரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 50 வயதிற்கு மேல் கொலஸ்ட்ரால் குறைய சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்களில் இருந்து இதயத்திற்கு பாதுகாப்பளிக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி இதயத்தை சீராக செயல்பட வைக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் குறையவும், இதயம் ஆரோக்கியமாக செயல்படவும் வேண்டுமானால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள். இது இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
கேல்
கேல் என்னும் கீரையை பலரும் சூப்பர் மார்கெட்டுகளில் பார்த்திருப்பீர்கள். இந்த கேல் கீரை சமீப காலமாக மக்களிடையே பரவலாக அதிகம் உட்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் இந்த கேல் கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இந்த கீரையை உட்கொண்டு வந்தால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்தக்குழாய்களில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.
பசலைக்கீரை
கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் குறைக்க உதவும் மற்றொரு கீரை தான் பசலைக்கீரை. இந்த கீரையில் லுடீன் என்னும் கரோட்டினாய்டு உள்ளது. இந்த லுடீன் இரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிந்து தடிமனாவதைத் தடுக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. ஆகவே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள், அதை எளிதில் குறைக்க அடிக்கடி பசலைக்கீரையை உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.
அவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோ பழத்தில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இவை உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். மேலும் அவகேடோ பழத்தில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம் போன்றவை இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள் அவ்வப்போது அவகேடோ ஸ்மூத்தியை உட்கொள்ளுங்கள்.
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரி பழங்களில் அந்தோசையனின்கள் என்று அழைக்கப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. ஆய்வுகளில் ப்ளூபெர்ரியில் இருக்கும் அந்தோசையனின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், பெர்ரி பழங்களுள் ப்ளூபெர்ரியை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications