Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
இந்த இடங்களில் கட்டாயம் பெர்ஃப்யூம் பயன்படுத்த கூடாது..! மீறினால் விளைவு என்ன...?
எப்பா...எப்படி மணக்குது பாரு..! அப்படினு வாய் பிளக்கும் அளவிற்கெல்லாம் சிலர் இந்த பெர்ப்யூம்களை அள்ளி அடித்து கொள்வார்கள். 1 வாரத்திற்கு தாங்க கூடிய அளவிற்கு இந்த பெர்ப்யூமை சிலர் அடிப்பதும் உண்டு. ஆனால், இதில் கூட பலவித அபாயங்கள் உங்களுக்கு உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றது.

சாதரண இந்த பெர்ப்யூமை ஒரு சில இடங்களில் மட்டுமே அடிக்க வேண்டும். நாம் இத்தனை நாள் பெர்ப்யூம் அடித்து கொண்டிருக்கின்ற முறையும் தவறு என்பதையும் இனி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அதை பற்றி தெளிவாக விளக்கவே இந்த பதிவு. வாங்க, இந்த பதிவில் எந்தெந்த இடங்களில் பெர்ப்யூம் அடிக்க கூடாது என்பதை அறிந்து கொள்வோம்.

வித விதமான பெர்ப்யூம்கள்..!
வண்ண வண்ண நிறங்களிலும், பல வகையான வாசனைகளிலும் இந்த பெர்ப்யூம் கடைகளில் விற்கப்படுகிறது. இதில் ஆண்கள், பெண்கள் என்கிற பிரிவுகள் கூட இருக்கிறது. நம்மில் பலர் குளிக்காமல் கூட பெர்ப்யூம்களை அடித்து கொள்வோம். ஆனால், இவற்றை கண்ட இடங்களில் நாம் அடிப்பது தான் தவறும்.

கழுத்து பகுதியில்
பலருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. பெர்ப்யூம் அடிக்கும் போது உடல் முழுக்க அடித்து கொண்டே போவார்கள். அந்த வகையில் கழுத்திலும் அடிப்பார்கள். இவ்வாறு அடிக்கும் போது தோலில் எரிச்சல் ஏற்பட்டு உங்கள் கழுத்து அரிக்க தொடங்கி விடும்.

அந்தரங்க பகுதிகளில்
உடல் முழுக்க வாசனையாக இருக்க வேண்டும் என்பதால் முட்டிக்கு கீழ் பகுதியிலும், சிலர் அந்தரங்க பகுதிகளிலும் அடிப்பதுண்டு. இது மிக தவறான முறையாம். இவை அந்த இடங்களில் வாசனை தந்தாலும் பலவித பாதிப்புகளை உங்களுக்கு ஏற்படுத்தும். எனவே, இது போன்று இனி பயன்படுத்தாதீர்கள்.

காதுகளில்
பொதுவாக முகத்தில் உள்ள உறுப்புகளில் இது போன்ற பெர்ப்யூம்கள் அடிப்பது மோசமான பழக்கமாகும். காதுகளின் மேல் புறத்தில் பெர்ப்யூம் அடித்தால் காதில் ஈரப்பதம் குறைந்து வறட்சி அதிகரிக்கும். மேலும், சருமமும் பாதிக்கப்படும்.

முட்டிக்கு பின்பகுதியில்
முட்டிக்கு பின் பகுதியில் நாடியை குறிக்கும் புள்ளி உள்ளது. இவ்வாறு இருக்கும் போது, நீங்கள் இந்த இடத்தில் பெர்ப்யூம் அடித்தால் முட்டி பகுதி மற்றும் காலில் உஷ்ணம் அதிகரிக்க கூடும். மேலும், தோல் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்த கூடும்.

மார்பகங்களில்
சில பெண்கள் இது போன்று செய்வதுண்டு. இவ்வாறு பயன்படுத்தும் போது அவர்களின் மார்பக பகுதியில் அரிப்பு உண்டாகி காயமாக மாறிவிடும். இது பல நாட்கள் நீடித்தால் அந்த இடத்தில் பிரச்சினைகள் அதிகமாக கூட வாய்ப்புகள் உள்ளது.

முடிகளில்
பெர்ப்யூம் மீது உள்ள காதலால் தலையிலும் அடித்து கொள்ளாதீர்கள். இது உங்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகளை தருமாம். இவை முடி உதிர்வு, முடி உடைதல் போன்றவற்றை தரும். மேலும், மண்டையில் வறட்சியை ஏற்படுத்தவும் கூடும்.

இது சூப்பர்ங்க..!
பல படங்களில் கையின் நாடி துடிப்பு இருக்கும் இடத்தில பெர்ப்யூம் அடிப்பதை பார்த்திருப்போம். இது சில அற்புதங்களை நம் உடலில் ஏற்படுத்த கூடியவை. தூக்க பிரச்சினை, தலை வலி, மயக்கம், கோபம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்குமாம். மேலும், நாள் முழுக்க சோர்வில்லாமலும் இருக்கலாம்.

எது சிறந்தது..?
பொதுவாக நாம் நேரடியாக உடம்பில் பெர்ப்யூம் அடித்து கொள்வது சருமம் சார்ந்த தோல் நோய்களை உண்டாக்க கூடும். இதற்கு மாறாக துணிகளில் பெர்ப்யூம் அடிப்பது நல்லது. இவை அதிக வாசனையையும் உங்களுக்கு தரும். மேலும், அதிக நேரமும் நீடித்து இருக்கும்.



Click it and Unblock the Notifications