Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பேஷியல் யோகா – முக அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்!

பொலிவு குன்றும் முகம்
நம் உடலுக்குள் ஏற்படும் நோய்களை முகம் காட்டிக் கொடுத்து விடும். ஈரலில் ஏதாவது பிரச்சினை என்றால் முகத்தில் கருமையான திட்டுக்கள் ஏற்படும். மண்ணீரலில் பிரச்சினை என்றால் உதடுகள் வெடித்து காய்ந்த புண்ணாகிப் போகும். வாயைச்சுற்றியும் புண்கள் ஏற்படும். இப்படி பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகளை முகத்தைக் கொண்டு தான் நாம் அறிந்து கொள்கிறோம் நோய்கள் வந்தவுடன் முகம் வாடி பொலிவிழந்துபோய் விடும். அதனால்தான் மருத்துவரிடம் சென்றவுடன் அவர் வாயை நன்றாக திறந்து நாக்கை நீட்ட கூறுகிறார். எனவே பொலிவிழந்த முகத்தை பளிச்சென்று மாற்ற பேஷியல் யோகா கைகொடுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அழகுக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நிருபித்துள்ளனர் யோகா நிபுணர்கள்.
கண்களுக்கான பயிற்சி
வலது கையை நீட்டி கட்டை விரலை உயர்த்தி இரண்டு கண்களுக்கும் இடையில் பிடித்துக் கொள்ளவும்.வலது பக்கமாக கட்டை விரலை முடிந்த அளவுக்கு திருப்பவும். தலை திரும்பக் கூடாது. கண்கள் மட்டுமே கட்டை விரல் செல்லும் திசை நோக்க வேண்டும். அதே மாதிரி இடது கை பெரு விரலை வைத்துக் கொண்டு இடது பக்கமாக பார்வையை முடிந்த அளவுக்கு கொண்டு செல்லவும். முடிந்ததும் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பிறகு கண்களுக்கு நெருக்கமாக வும் , தள்ளி வைத்துக் கொண்டும் அதோ மாதிரி பார்வையை சுழற்றவும். இது கண்களுக்கான அற்புதப் பயிற்சி. கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள் சுருக்கங்கள் மறையும்,கண் பார்வை தெளிவாகும்.
கழுத்துக்கு விரல் சிகிச்சை
தைராய்டு பிரச்சினை உள்ளவர்களின் முகம் எப்போதும் சோகமாக காணப்படும் பொலிவற்ற அவர்களின் முகத்தை பளபளப்பாக மாற்ற விரல் யோகா சிகிச்சை மிகவும் பயன்தரும். பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்த வைத்துக் கொண்டு சம்மணமிட்டபடி அமரவும். பின் கண்களை மூடிக் கொண்டு மேலும் கீழும் ஆட்டவும். கண்களை மூடிக் கொண்டு செய்வது தான் நல்லது.
கோபத்தை கட்டுப்படுத்தும் யோகா
அடிக்கடி கோபப்படுகிறவர்களின் முகத்தில் பொலிவு இருக்காது. அழகும் இருக்காது. கோபம் தலைக்கேறும் போது கண்களை மூடிக்கொண்டு மூச்சை மூன்று முறை உள்ளிழுக்கவும். 20 வரை எண்ணவும் பின் பொறுமையாக மூச்சை வாய் வழியாக வெளியே விடவும். இதனால் கோபத்தை தூண்டுகிற அட்ரீனலின் சுரப்பி அமைதி அடைந்து கோபம் தணிந்து முகம் பொலிவு பெறும்.
பளிச் தோற்றத்திற்கு
பற்களைக் கடித்துக்கொண்டு அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி மூலம் மூச்சை உள் இழுக்கவும். பின் பொறுமையாக மூச்சை மூக்கின் வழியே வெளியேற்றவும். காலையும் மாலையும் தவறாது இந்தப் பயிற்சியை ஐந்து முறை செய்தால் முகம் பொலிவடையும்.
நாக்கை நீட்டி குழல் மாதிரி மடிக்கவும்.மடிப்பிற்கிடையே உள்ள இடைவெளி மூலம் மூச்சை உள் இழுத்து வாயை மூடவும். பொறுமையாக மூக்கின் வழியே மூச்சை வெளியே விடவும். நாக்கை நீட்டி உள்பக்கமாக மடக்கவும். அந்த இடைவெளி வழியாக மூச்சை உள்ளிழுத்து வாயை மூடவும். இந்த இரண்டு பயிற்சிகளும் முகத்தை பளிச்சென்று வைத்திருக்கும். இதயத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications