உங்க ஃபோன் அடிக்கடி ரொம்ப ஹீட்டாகுதா? வெடிக்கிற மாதிரி பயமா இருக்கா? அப்ப இத பாலோ பண்ணுங்க!

Phone Overheating In Tamil: இன்றைய தலைமுறையினருக்கு செல்போன் என்பது முன்றாவது கைபோல. செல்போன் இல்லாமல் நம்மால் ஒருநாளை கடத்துவது என்பது முடியாத காரியம். தினமும் காலையில் கண் விழிப்பதில் இருந்து தூங்குவதற்கு கண் மூடுவது வரை செல்போனை பயன்படுத்தி வருகிறோம்.

அந்தளவிற்கு செல்போன் அன்றாட செயல்பாடுகளோடு இணைந்துள்ளது. இப்படி நாள் முழுவதும் செல்போனை உபயோகித்து கொண்டிருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நமக்கும் நல்லதல்ல. ஏனெனில், இது நமக்கு பல்வேறு சிக்கல்களை உருவாக்கலாம். இருந்தபோதிலும், நாம் நினைத்தாலும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக செல்போன் உள்ளது.

Tips To Stop Your Phone From Overheating In Tamil

தொடர்ந்து செல்போனை பயன்படுத்தும்போது, அது சூடாகிறது. இதன் விபரீதத்தை அறியாமல் நாமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். சார்ஜர் போட்டு கொண்டு செல்போன் பேசும்போதோ அல்லது செல்போன் அதிக வெப்பமடையும்போதோ, வெடிக்கக்கூடும் அல்லது தீப்பிடிக்கக்கூடும் அபாயம் உள்ளது. இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

ஆதலால், உங்கள் செல்போனை அதிக வெப்பமடைய விடாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சமீபத்திய நாட்களில், ஃபோன்கள் ஹீட்டாகி வெடிப்பது மற்றும் தீபிடிப்பது போன்று வெளிவரும் பல செய்திகள், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களுக்கான காரணம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறான பேட்டரி அல்லது தரமில்லாத பேட்டரி இருக்கலாம்.

இதுபோன்ற சம்பவங்களின் அபாயத்தைக் குறைக்க, உற்பத்தியாளர்கள் நல்லத் தரமான பேட்டரி கொண்ட மொபைலை வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும், உங்கள் செல்போன் அதிக வெப்பமடைவதைத் தவிர்க்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன.

செல்போன் அதிக வெப்பமடைவதை எவ்வாறு நிறுத்துவது?
பெரும்பாலும் எல்லா ஸ்மார்ட்போன்களும் அதிக வெப்பத்தை உருவாக்குகின்றன. உங்கள் செல்போன் அதிக வெப்பமடைவதைத் தடுக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம். இல்லையென்றால், சில நேரங்களில் அது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். உங்கள் ஃபோன் அதிக வெப்பமடையாமல் தடுக்க உதவும் சில குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.

திரையின் பிரகாசத்தைக் குறைக்கவும்
பெரும்பாலான மக்கள் போனில் பிரைட்னஸை அதிகம் வைத்து பயன்படுத்துகிறார்கள். இது போனின் பேட்டரியை சீக்கிரம் காலி செய்வதோடு, கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால், உங்க போனில் திரையின் வெளிச்சத்தை எப்போதும் குறைவாக வைத்திருக்க வேண்டும். உங்கள் திரையை குறைந்த வெளிச்சத்தில் வைத்திருப்பது, உங்கள் போன் உற்பத்தி செய்ய வேண்டிய ஆற்றலின் அளவைக் குறைக்கவும் அதிக வெப்பமடைவதைத் தடுக்கவும் உதவும்.

நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்கவும்
நீங்கள் வெளியே செல்லும்போது, உங்கள் மொபைலை நேரடியாக சூரிய ஒளியில் வெளிபடுவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் நீண்ட நேரம் சூரிய வெப்பம் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் செல்போனில் வெப்பநிலை அதிகரித்து, வெடிக்கலாம். கோடைகாலத்தில் சூரிய வெப்பத்திலிருந்து செல்போனை தள்ளி வையுங்கள்.

கூடுதல் அம்சங்களை முடக்கவும்
புளூடூத் அல்லது வைஃபை போன்ற குறிப்பிட்ட அம்சங்களை நீங்கள் பயன்படுத்தவில்லை எனில், அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டும். இது உங்கள் ஃபோனை அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதிலிருந்தும், அதிக வெப்பமடையாமல் இருக்கவும் உதவும்.

ஆப்-களின் எண்ணிக்கையைக் குறைக்கவும்
நம் செல்போனில் பல ஆப்-கள் இயங்கி கொண்டிருக்கும். சில ஆப்ஸ்கள் தொடர்ந்து பின்னணியில் இயங்குவது உங்கள் போனை கடினமாகவும் சூடாகவும் மாற்றும். நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸை ஆஃப் செய்வது, உங்கள் செல்போனின் அழுத்தத்தைக் குறைத்து, அது அதிக வெப்பமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவும்.

காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்
உங்கள் மொபைல் போனை திறந்த மற்றும் நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். மேலும், உங்கள் போனை ஒரு தட்டையான மேற்பரப்பில் வைத்திருப்பது மற்றும் வெப்பத்தைத் தடுக்கக்கூடிய பிற பொருட்களிலிருந்து விலகி இருப்பது, அது மிகவும் சூடாகாமல் இருக்க உதவும்.

எவ்வாறாயினும், நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம் உங்கள் செல்போன் அதிக வெப்பமடைந்தால், உங்கள் மொபைலை மாற்ற வேண்டிய நேரம் இது. ஏனெனில், அது எந்த நேரம் வேண்டுமானாலும் அதிகமாக வெப்பமடைந்து வெடிக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, May 2, 2023, 17:35 [IST]
Desktop Bottom Promotion