Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்
உடல் எடை குறையணுமா? இதை தினமும் குடியுங்கள்...!
உடல் எடைதான் பெரும்பாலோனோருக்கு முதல் எதிரியாக இருக்கும். உடல் எடை ஒருபக்கம். அதனால் வரும் அச்சுறுத்தல்கள் ஒருபக்கம் என்று பலரையும் மன உளைச்சலில்தான் கொண்டு போய் விடுகிறது.நேரம் கிடைக்கவில்லை. உடற்பயிற்சி செய்வது குறித்து நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று வேலை, வீடு சோர்வு என வாழ்க்கை சுழன்று கொண்டேயிருக்கிறதா? நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் இந்த இஞ்சியை கொஞ்சம் சேர்த்துக் கொண்டாலே போதும். உங்களின் உடல் எடையை குறைக்கலாம்.
இஞ்சி ஒரு பூக்கும் தாவரமாகும். இஞ்சி நமது உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. பசியைக் குறைக்கிறது. அதனால்தான் இஞ்சியை பயன்படுத்தினால் எடை குறைவது உறுதி. இஞ்சியைப் பயன்படுத்துவதன் மூலம் எடை இழப்பு உறுதி செய்யப்படுகிறது... எனவே இஞ்சியை எவ்வாறு பயன்படுத்துவது? எவ்வளவு பயன்படுத்த வேண்டும்? இந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து இந்த பதிவில் கொள்வோம்.
இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகல்ஸ் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இவை நம் உடலில் நுழைந்தவுடன்... பல நல்ல விஷயங்களைச் செய்கின்றன. உங்களுக்கு தெரியும்... அதிக எடை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடல் சூட்டை அதிகரிக்கும். இது எல்லா வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதய பாதிப்பு. அதனால்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக வயிற்றைச் சுற்றி தேங்கியிருக்கும் கொழுப்பைக் கரைக்க இஞ்சியைப் பயன்படுத்த வேண்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் இஞ்சியைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இஞ்சி... நமது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சரியாக வைக்கிறது. சரி இந்த இஞ்சியை எப்படி செய்து உட்கொள்வது என்று செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை: 20 கிராம் இஞ்சியை நறுக்கி... மிக்ஸியில் போட்டு... அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதனால் இஞ்சியில் உள்ள அனைத்து சாறும் தண்ணீரில் கலக்கப்படுகிறது. அந்த தண்ணீரை வடிகட்டி அதில் பாதி எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். இதை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும். எலுமிச்சம் பழச்சாறும் நம் பசியைக் கொல்லும். இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டும் வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும். எனவே எந்த உணவும் சாப்பிட மாட்டோம்.. இதன் விளைவாக எடை இழப்பு ஏற்படும்.
ஆப்பிள் சைடர் வினிகர் (ACV) எடை இழப்புக்கு உதவும். மேலே குறிப்பிட்டுள்ள அரை கப் இஞ்சி சாற்றில் இந்த வினிகரை நான்கு துளிகள் கலந்து குடிக்கலாம். நீங்கள் இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை ஒன்றாகக் குடிக்கலாம். எப்படி குடித்தாலும் எடை குறைவது உறுதி.
சிலர் இஞ்சி டீ குடிப்பார்கள். அதை எப்படி செய்வது என்றால், இஞ்சித் துண்டுகள் அல்லது இஞ்சி விழுதை தண்ணீரில் போட்டு... கொதிக்க விடவும்.. பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் க்ரீன் டீ பேக் போட்டு குடித்தால், உடல் எடையும் குறையும். மேலும் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்தும் சாப்பிடலாம். இந்த டீயை தினமும் காலையில் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
இஞ்சி மன அழுத்தத்தை குறைக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உடலின் ஆற்றல் அளவுகள் அதிகரிக்கும். இதயத்திற்கு நல்லது. மூளை நன்றாக வேலை செய்யும் நினைவாற்றல் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இஞ்சியின் பயன்பாட்டைப் பற்றி நன்கு தெரிந்துக் கொள்ளுங்கள்... ஏனெனில் இது உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்கிறது.
இந்த இஞ்சி உடலிலுள்ள நச்சுக்களை அழிப்பதால் 4 கிலோ வரை உடல் எடை குறையும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அதோடு, கொழுப்பை கரைக்கும். இரவு உணவு எடுத்துக் கொள்ளும் முன் இந்த இஞ்சி டீயை அருந்தினால் நல்லது. ஏனென்றால் இரவுகளில்தான் நச்சுக்களை வெளியேற்றும் வேலையை உடல் உறுப்புகள் செய்கின்றது. அதனால் தினமும் இரவில் ஒருமுறை இந்த இஞ்சி டீயை குடித்து வாருங்கள்...
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications