Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
1 மாசத்துல உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப 'இந்த' 3 பொருள் கலந்த டீ யை குடிங்க...சர்ர்னு எடை குறைஞ்சிடுமாம்!
உலகில் பெரும்பலான மக்கள் எதிர்கொள்ளும் ஓர் பிரச்சனை உடல்பருமன். மாறி வரும் வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், உங்கள் உடல் எடையை அதிகரிப்பதோடு, நாள்பட்ட சுகாதார ஆபத்துக்களையும் ஏற்படுத்தலாம்.
சரியான உடல் எடையை பராமரிப்பது மற்றும் ஃபிட்டாக இருப்பது என்பது அழகிற்கானது அல்ல, அது உங்கள் ஆரோக்கியத்திற்கானது. சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு சுகாதார பிரச்சனைகள் உடல் பருமனால் ஏற்படுகிறது. ஆதலால் தொப்பை கொழுப்பு இல்லாத சரியான உடல் எடையை பராமரிப்பது மிக அவசியம்.

பிடிவாதாமான உங்கள் உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க ஓர் எளிய தீர்வு ஆயுர்வேதத்தில் உள்ளது. அவை விதைகள் கலந்த பானம். அந்த ஆயுர்வேத பானம் உங்களுக்கு வழங்கும் நன்மைகள் பற்றியும், அவற்றை எப்படி தயாரிக்கலாம் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
எடை குறைக்கும் பானத்திற்கான தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
- 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகள்
- 4 கப் தண்ணீர்
செய்முறை
இந்த ஆரோக்கியமான எளிய பானத்தை தயாரிக்க, ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் சீரகம், கொத்தமல்லி விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை சேர்க்க வேண்டும். 5-10 நிமிடங்கள் பானத்தை நன்றாக கொதிக்கவிட்டு, அடுப்பை அணைக்க வேண்டும். பின்னர், விதைகளை வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் விரும்பினால் தேன் சேர்த்து அருந்தலாம்.
ஏன் இந்த பானம் அருந்த வேண்டும்?
சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய மூன்று விதைகளும் தனித்தனியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அதனால், மக்கள் இந்த விதைகளை பண்டைய காலம் முதல் இன்று வரை சமையலில் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், இவை மூன்று விதைகளும் உடல் எடையை குறைக்க உதவுவதில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.
சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஊறவைத்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான ஆயுர்வேத பானத்தை பருகுவது, உடல் எடையை குறைக்கவும், வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துவதன் மூலம் தொப்பையை குறைக்கவும் உதவும். மேலும், இது உங்கள் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
எப்படி குடிக்க வேண்டும்?
இந்த தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், விரைவில் எடை குறையும் மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவும். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது அதிகபட்ச நன்மைகளை உங்களுக்கு வழங்கும். இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்பவும், பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தின் டையூரிடிக் பண்புகள் உடலில் வீக்கம் மற்றும் நீர் தேக்கத்தை திறம்பட குறைக்கும்.
சீரகம்
சீரக விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிரம்பியுள்ளது. இது உங்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிஜன் ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. இதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் சீரகம், உடல் எடையை திறம்பட குறைக்க உதவும்.
ஜீரா நீரில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, தாமிரம் மற்றும் மாங்கனீசு ஆகியவை உங்கள் உடலில் கொழுப்புச் சிதைவைத் தூண்டி, குடலுக்கு ஏற்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன.
கொத்தமல்லி
கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து, முழுமையான உணர்வை அதிக நேரம் வழங்குகிறது. இது அதிகமாக சாப்பிடுவதையும், உணவுக்கு இடையில் சிற்றுண்டி சாப்பிடுவதையும் தடுக்கவும் மற்றும் எடையைக் குறைக்கவும் உதவும். உடற்பயிற்சியின் போது மற்றும் நாள் முழுவதும் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிப்பதன் மூலம், கொத்தமல்லி விதைகள் எடையைக் குறைக்க உதவுகின்றன.
பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் விதைகள் நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் எடை இழப்புக்கு உதவுவதோடு, பசியின்மையைத் தடுக்கும். அவை டையூரிடிக்களாக செயல்படுகின்றன மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன. சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் தினமும் பெருஞ்சீரகம் விதைகளை உட்கொள்வது கூடுதல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.
இறுதிக்குறிப்பு
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையுடன் இந்த பானத்தை இணைப்பது எடை மற்றும் தொப்பை கொழுப்பை திறம்பட குறைக்க உதவும். மேலும், இந்த பானத்தை தினசரி உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
