Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்..
பெண்களே! உங்க கணவனுக்கு இந்த பழக்கங்கள் இருந்தால்... அவருக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுமாம்...ஜாக்கிரதை!
Sexual Problems In Tamil: பெண்களே! உங்கள் கணவன் அல்லது காதலன் பின்பற்றி வரும் சில பழக்கங்கள் பாலியல் பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். ஆதலால், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பராமரித்து, பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்க உங்கள் துணைக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை.
முன்பை விட தம்பதிகளிடையே பாலியல் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. புள்ளிவிவரங்களின்படி, கருவுறாமை தோராயமாக 10 சதவீதம் முதல் 15 சதவீத தம்பதிகளை பாதிக்கிறது. பாலியல் பிரச்சனைகளை அதிகரிப்பதில் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய காரணிகள் வகிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு உதவும்.

இதை மனதில் வைத்து, பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதோடு, தங்கள் துணையின் பாலியல் ஆரோக்கியத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்கள் துணைக்கு பாலியல் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மது அருந்துதல்
மது அருந்துவது பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என அனைவரும் அறிவோம். ஆனால், இது உங்கள் கணவனின் பாலியல் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அறிவாற்றல் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர, குடிப்பழக்கம் ஒரு நபரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் சேதப்படுத்தும்.
நீங்கள் அல்லது உங்கள் பங்குதாரர் அதிகப்படியான குடிப்பழக்கத்தில் ஈடுபட்டால், அது நேரடியாகவும் மறைமுகமாகவும் உங்கள் கருவுறுதல் நிலைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் போலவே, பாலியல் வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை. இந்த மோசமான வாழ்க்கை முறைப் பழக்கம் உங்கள் துணையின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
இதன் விளைவாக விறைப்புத்தன்மை, குறைந்த ஆண்மை மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பெண்கள் புகைபிடிப்பது, குறைக்கப்பட்ட கருப்பை இருப்பு, கருத்தரித்தல் திறன், இயக்கம் மற்றும் பலமில்லாத கருவுறுதல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதிக காஃபின் உட்கொள்ளல்
உங்கள் கணவனின் காஃபின் நுகர்வு குறித்து எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, கருத்தரிக்க முயற்சிக்கும் போது, காஃபின் உட்கொள்ளல் குறைக்கப்பட வேண்டும் மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்களால் தவிர்க்கப்பட வேண்டும்.
சில ஆய்வுகளின்படி, காஃபின் அதிகம் உட்கொள்ளும் பெண்கள் கர்ப்பம் தரிக்க அதிக காலம் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது மற்றும் தன்னிச்சையான கருக்கலைப்பு மற்றும் கருவின் வளர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு கணிசமாக அதிக ஆபத்து உள்ளது. ஆதலால், உங்கள் தினசரி கட்டுப்பாட்டு அளவை மீறி, காஃபின் உட்கொள்ள வேண்டாம்.
பொருத்தமற்ற பாலியல் நடைமுறைகள்
ஆரோக்கியமான செக்ஸ் நடைமுறைகள் ஒரு மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான பாலியல் அனுபவத்தை உங்கள் இருவருக்கும் வழங்கும். மறுபுறம், பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளத் தவறினால், உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும் லேசான முதல் கடுமையான உடல்நலச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகள் தம்பதியரை பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு (STDs) வெளிப்படுத்தலாம். இது இருவருக்கும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஆதலால், தம்பதிகள் பாதுகாப்பான பாலியல் உறவில் ஈடுபட வேண்டும்.
போதிய தூக்கமின்மை
தினசரி வேலைகளைச் செய்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உங்கள் துணைக்கு சரியான ஓய்வு தேவைப்படுகிறது. தூக்கமின்மை ஹார்மோன் பிரச்சினைகள், மன உளைச்சல் மற்றும் விறைப்புத்தன்மை மற்றும் குறைந்த ஆண்மை அல்லது ஆண் மலட்டுத்தன்மை போன்ற பாலியல் உடல்நலப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மோசமான தூக்க சுழற்சி பெண் மலட்டுத்தன்மையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால், தினமும் இரவு 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதை தம்பதிகள் இருவரும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். போதுமான தூக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகுக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

