Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..!
இந்த உணவுகளை ஆண்கள் சாப்பிடக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?
ஆரோக்கியமாக வாழ ஆண்களுக்கும் பெண்களுக்கும், தினசரி அடிப்படையில் உணவுத் தேர்வுகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதில் ஆண்கள் கட்டாயமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன உணவுகள்? ஏன் அவற்றை சாப்பிடக்கூடாது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆய்வில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் உணவுகளை உண்பவர்களுக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களை விட விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. சரி ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? இதோ லிஸ்ட்...
1. சோயா உணவுகள்
சோயா தயாரிப்புகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens) அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில ஊட்டசத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
2. அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்:
பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பால் பொருட்கள் சில அத்தியாவசிய சத்துக்ளான கால்சியம், விட்டமின் டி உள்ளிடவை அடங்கியதாக இருந்தாலும், விந்து அணுக்களை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைகளால், விந்து அணு எண்ணிக்கை குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவித்துள்ளது. அதனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதே ஆய்வுகளில், சிக்கன் சாப்பிடுவதற்கும் விந்தணு ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை.
4. கார்பனேட்டட் பானங்கள் (காற்று அடைக்கப்பட்ட பானம்)
கார்பனேட்டட் பானங்கள் பானங்களை அதிக அளவு குடிப்பதினால், விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.காற்று அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பான வகைகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும். இந்த பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்கள் காற்று அடைக்கப்பட்டு அல்லது கார்பன் சேர்க்கப்பட்டு தயாரித்த குளிர்பானங்கள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிகம் கேடு விளைவிக்க கூடியவை. குறிப்பாக இந்த குளிர்பானங்கள் ஆண்களின் விந்து அணுக்களை அழிக்க காரணமாகலாம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
5. டிரான்ஸ் கொழுப்பு
உள்ள உணவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும், ஆண்களுக்கு இது விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும் என 2011 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
6. ஜங்க் உணவுகள்
அளவுக்கு அதிகமாக ஜங்க் உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆண்கள் அதிக அளவு பர்கர், பீட்சா போன்ற உணவுகளை, அதிகமாக சாப்பிடுகின்றனர். அவற்றை ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் சேர்க்கப்படும் ஆரோக்கிய சீர்கேடு விளைவிக்கும் பொருட்கள் ஆண்களின் ஆண்மை தன்மையை குறையச் செய்கிறது. பொதுவாக ஜங்க் உணவுகள் அதிகமான எண்ணெய் மற்றும் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவாக இருக்கிறது. அதனால் ஆண்கள் இவற்றை உண்டு உடல் எடை அதிகரித்து விடுகின்றனர்.இது ஆண்மையின் சிதைவுக்கு காரணமாக அமைகிறது..
7. பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிஸ்பெனால்-ஏ
பூச்சிக்கொல்லிகளை நாம் நேரிடையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், நல்ல விளைச்சல் கொடுக்கும் பயிர்களில் பயன்படுத்தப்படும், பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள், நாம் உட்கொள்ளும் காய்கறிகள் மற்றும் பழங்களின் மூலம் உணவில் சேருகின்றன. இந்த இரசாயனம் சோயாவில் உள்ள பைட்டோ எஸ்ட்ரோஜன்களைப் போலவே, ஜீனோ ஈஸ்ட்ரோஜன்களும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனால், காயகறி, பழங்களை நன்றாக உப்பு மற்றும் மஞ்சள் கலந்து நீரில் சுத்தம் செய்து சாப்பிடுவது எல்லோருக்குமே நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications