Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
48 வயதில் கார்டியாக் அரெஸ்ட்டால் காலமான நடிகர் மனோஜ் பாரதிராஜா.. இது எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
Tamil Actor and Director Manoj Bharathiraja Dies of Cardiac Arrest: தமிழ் நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா தனது தந்தை இயக்கிய தாஜ்மஹால் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 48 வயதான நடிகர் மனோஜ் நேற்று கார்டியாக் அரெஸ்ட்டால் காலமானார். 48 வயதில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு நடிகர் மனோஜ் காலமானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் மனோஜ் சமீபத்தில் தான் சிம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, கடந்த வாரம் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், நேற்று திடீரென்று கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றன.

நடிகர் மனோஜ் கடைசியாக விருமன் திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பின் பிரைம் வீடியோவின் ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸில் கடைசியாக நடிகர் மனோஜ் நடித்தார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த சில நாட்களிலேயே கார்டியாக் அரெஸ்ட் எப்படி ஏற்படும், எந்த காரணத்தினால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது என்பது குறித்து இப்போது காண்போம்.
கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?
கார்டியாக் அரெஸ்ட் என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலை. இது இதயம் துடிப்பதை நிறுத்தும் போது அல்லது இரத்தம் பம்ப் செய்வது முழுமையாக நிறுத்தப்படும் போது ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால் அந்நபர் சட்டென்று சரிந்து விழுவதோடு, செயலிழந்தும் இருப்பார். பெரும்பாலும் கார்டியாக் அரெஸ்ட் எவ்வித எச்சரிக்கை அறிகுறிகளும் வெளிக்காட்டாமல் எப்போது வேண்டுமானால் சட்டென்று ஏற்படலாம்.
இந்த கார்டியாக் அரெஸ்ட் மிகவும் ஆபத்தான நிலை. இதற்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிரை இழக்க நேரிடும். கார்டியாக் அரெஸ்ட்டை, கார்டியோபல்மனரி அரெஸ்ட் என்றும் அழைப்பர். இந்நிலையில் இதயம் இரத்தத்தை அழுத்துவதை நிறுத்திவிடும் மற்றும் உடலின் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சட்டென்று தடைபட்டு, அதன் விளைவாக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
ஏனெனில் உடலுறுப்புகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் கிடைக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில், உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கிவிடும், எனவே கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால், சிபிஆர் கொடுக்க வேண்டியது அவசியம். இது உடலுறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவி புரிந்து, உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுகிகறது.
பைபாஸ் அறுவை சிகிச்சைகு பின் கார்டியாக் அரெஸ்ட் உடனே ஏற்படுமா?
மருத்துவர்களின் கூற்றுப்படி, கார்டியாக் அரெஸ்ட் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த சில நாட்களிலேயே ஏற்படலாம். இது அரிதானது என்றாலும், சுமார் 0.7-2.9 சதவீதம் மட்டுமே இம்மாதிரியான நிகழ்வு ஏற்படுகிறது. எனவே உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமான, உடனடி நோயறிதல் மற்றும் சிகிச்சையை மேற்கொள்வது முக்கியம்.
எந்த காரணங்களுக்காக சர்ஜரிக்கு பின் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது?
ஒருவருக்கு சர்ஜரி முடிந்த பின் கார்டியாக் அரேஸ்ட் ஏற்படுவதற்கு பல்வேறு சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். அவை பின்வருமாறு:
* மாரடைப்பு
* இரத்தப்போக்கு
* கிராப்ட் செயலிழப்பு
* கடுமையான கிராப்ட் அடைப்பு
* கார்டியாக டம்போனேட்
* கடுமையான இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு
* அரித்மியாக்கள்
* பெருநாடி துண்டிப்பு
* கடுமையான வால்வுலர் செயலிழப்பு
யாருக்கெல்லாம் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம்?
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பின் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் பல காரணிகள் உள்ளன. அவை பின்வருமாறு:
வயது
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிக்கல்கள் ஏற்படும் அபாயம் வயதாகும் போது அதிகரிக்கிறது. ஏனெனில் இந்த சாத்தியத்தை அதிகரிக்கும் பல கடுமையான நீண்டகால ஆரோக்கிய நிலைமைகள் உள்ளன.
பெண்கள்
ஆண்களை விட பெண்களுக்கு தான் கரோனரி இதய நோய் ஏற்படுகிறது. எனவே பெண்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் சிக்கல்களை சந்திக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.
அவசர அறுவை சிகிச்சை
எப்போதுமே அவசர அறுவை சிகிச்சை ஆபத்தானது தான். ஏனெனில் இந்நிலையில் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சைய திட்டமிட போதுமான நேரம் கிடைக்காது. மேலும் இதயம் ஏற்கனவே மாரடைப்பால் கடுமையாக சேதமடைந்திருக்கும்.
2-க்கும் மேற்பட்ட கிராப்ட்டுகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருந்தால், சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன.
உடல் பருமன்
ஒருவர் மிகுந்த உடல் பருமனாக இருந்தாலோ அல்லது உடல் எடையுடன் இருந்தாலோ, அந்நபருக்கு அறுவை சிகிச்சையின் போது மிகவும் ஆழமாக வெட்டி, இதயத்தை அணுக வேண்டியிருக்கும். எனவே இத்தகையவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.
கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் திடீரென துடிக்காமல் போகும் ஒரு மருத்துவ அவசரநிலை ஆகும். இதனால் மூளைக்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் இல்லாமல் போகும்.
இதய நோய், இதயத் துடிப்பு கோளாறுகள், இதய பிரச்சனைகள் மற்றும் கடுமையான காயம் அல்லது மூழ்கிவிடுதல் போன்ற பிற மருத்துவ நிலைகள் ஆகியவை கார்டியாக் அரெஸ்டிற்கு பொதுவான காரணங்கள் ஆகும்.
திடீர் மயக்கம், தலைச்சுற்றல், சுவாசம் இல்லாமை மற்றும் துடிப்பு இல்லாமை ஆகியவை கார்டியாக் அரெஸ்டிற்கான அறிகுறிகள் ஆகும்.
யாருக்காவது கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால், உடனடியாக அவசர சேவைகளை அழைக்க வேண்டும், சி.பி.ஆர் தொடங்க வேண்டும், மற்றும் ஏ.இ.டி கிடைத்தால் அதைப் பயன்படுத்த வேண்டும்.



Click it and Unblock the Notifications