Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
சிறுநீரை அடக்க முடியாமல் உங்க உள்ளாடையிலே போயிடுறீங்களா? அதுக்கு 'இந்த' பிரச்சனைதான் காரணமாம்!
Urinary Incontinence In Tamil: சிறுநீர் அடங்காமை என்பது பலரை, குறிப்பாக பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. இது ஒரு பலவீனமான இடுப்புத் தளத்தின் காரணமாக உங்கள் கட்டுப்பாட்டை மீறி சிறுநீர் கழிப்பதை குறிக்கக்கூடிய ஓர் நிலை.
சிறுநீர் அடங்காமை என்பது ஒரு நபரின் கட்டுப்பாட்டை மீறி தற்செயலாக சிறுநீர் கசிவதைக் குறிக்கிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டு சிக்கல்கள் சங்கடமாகவும் உங்களை அசெளகாரியமாகவும் உணர வைக்கும். இதனால், மக்கள் தங்கள் இயல்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். இது பலவீனமான இடுப்பு தளத்தின் காரணமாக நிகழ்கிறது.

இடுப்புத் தளம் என்பது சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் தசைகளின் குழுவாகும். இந்த தசைகள் பலவீனமடையும் போது, அவை இந்த உறுப்புகளை சரியாக ஆதரிக்க முடியாது. இது சிறுநீர் அடங்காமைக்கு வழிவகுக்கிறது. உங்களுக்கு பலவீனமான இடுப்புத் தளம் இருப்பதை குறிக்கும் அறிகுறிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
சிறுநீர் கசிவது
உடற்பயிற்சி செய்யும்போது, தும்மல், இருமல் அல்லது அதிகமாக சிரிக்கும்போது சிறுநீர் கசிவு ஏற்படுவது என்பது பலவீனமான இடுப்புத் தளத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இடுப்புத் தளத் தசைகள் பலவீனமாக இருக்கும்போது, அவை சிறுநீர்ப்பையைச் சரியாகத் தாங்காது, சிறுநீர்ப்பையில் அழுத்தம் கொடுக்கப்படும்போது சிறுநீர் கசிவுக்கு வழிவகுக்கும். உங்கள் சிறுநீர்ப்பையில் அழுத்தம் கொடுக்கும் வேலையை செய்யும்போது, சிறுநீர் கசிதல் ஏற்படலாம்.
வாய்வாய் வெளியிடுவது
இடுப்பு தசைகள் மலக்குடலின் செயல்பாடுகளையும் ஆதரிக்கின்றன. அவை பலவீனமாக இருந்தால் வாயு வெளியிடுவது மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் மலம் வெளியேறும் நிலையை ஏற்படுத்தும். மேலும், புணர்புழையிலிருந்து டம்போன் அகற்றப்படும்போது, இடுப்புத் தளத்தின் வலிமை போதுமானதாக இல்லை என்பதையும் இது குறிக்கிறது.
சரியான நேரத்தில் கழிப்பறையை அடைய முடியவில்லை
நீங்கள் கழிப்பறைக்கு விரைந்து சென்றாலும், அதற்குள் உங்கள் ஆடையிலே சிறுநீர் கழித்தால், அது பலவீனமான இடுப்புத் தளத்தின் அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு தசைகள் சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்துவதற்கும் சிறுநீரை உள்ளே வைத்திருப்பதற்கும் பொறுப்பாகும்.
ஆனால் அவை பலவீனமாக இருக்கும்போது, நீங்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருக்க முடியாது. உங்கள் கட்டுப்பாட்டை மீறி, கழிப்பறையை அடைவதற்கு முன்பே சிறுநீர் கழிக்க நேரிடலாம்.
யோனியில் உணர்வு இழப்பு
இடுப்புத் தளத் தசைகள் பலவீனமாக இருக்கும்போது, அவை பிறப்புறுப்பில் உள்ள உணர்வையும் பாதிக்கலாம். இது உடலுறவின்போது, உச்சக்கட்டத்தை அடைவதில் சிரமத்தை ஏற்படுத்தும். அத்தோடு பாலியல் இன்பம் குறைவதற்கு வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
யோனி பகுதியில் வீக்கம்
இடுப்பின் அடுக்கு தசைகள் கருப்பை மற்றும் யோனியை சரியாக ஆதரிக்கவில்லை என்பதற்கான அறிகுறியாக வீக்கம் ஏற்படுகிறது. மேலும் யோனியின் திறப்பு பகுதியில் வீக்கம் ஏற்பட தொடங்குகின்றன.
இறுதிக்குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தால், அது பலவீனமான இடுப்புத் தளத்தை நீங்கள் கொண்டிருப்பதைக் குறிக்கலாம். ஆலோசனை மற்றும் சிகிச்சை விருப்பங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
உங்கள் இடுப்பு தசை மற்றும் எலும்புகளை வலுவானதாக மாற்ற இடுப்பு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அத்துடன் வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நிலைமை மோசமானால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிறுநீர் அடங்காமை உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்காமல் இருக்க, உடனே மருத்துவ உதவியை நாட வேண்டியது முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

