Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
காலையில் இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு வயிற்று புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்...
Stomach Cancer Symtpoms In Tamil: உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புற்றுநோய் என்பது உயிரைப் பறிக்கும் அளவிலான ஒரு கொடிய நோய். இந்த புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் வயிற்று புற்றுநோய் என்று அழைக்கப்படும் இரைப்பை புற்றுநோய்.
இந்த வகை புற்றுநோய் ஐந்தாவது மிகவும் பொதுவான புற்றுநோயாகவும், உலகளவில் புற்றுநோய் தொடர்பான மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாகவும் உள்ளது. இந்த புற்றுநோய் வயிற்று சுவற்றில் உருவாகும் ஒரு வீரியமிக்க கட்டியாகும். பெரும்பாலான வயிற்று புற்றுநோய்கள் அடினோகார்சினோமாக்கள் ஆகும். இவை வயிற்றின் உட்புறச் சுவற்றின் செல்களில் வளரத் தொடங்குகின்றன.

இந்த வகை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளிக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இந்த வகை புற்றுநோயை கண்டுபிடிப்பது என்பது கடினம். ஏனெனில் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் நாம் தினசரி சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் போன்று இருப்பதால், பலரும் இதை கவனிக்காமல் புறக்கணிப்பதுண்டு.
ஆயினும் வயிற்று புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், அந்நபர் காலையில் குறிப்பிட்ட அறிகுறிகளை சந்திக்கக்கூடும். அந்த அறிகுறிகளை கவனித்தால், இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். இப்போது காலையில் தெரியக்கூடிய வயிற்று புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
1. வயிற்று வலி அல்லது அசௌகரியம்
வயிற்று புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளுள் ஒன்று வயிற்று வலி அல்லது வயிற்று அசௌகரியம். முக்கியமாக இப்படியான வலியையும், அசௌகரியத்தையும் ஒருவர் காலையில் வந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவும் இந்த வலி லேசாக ஆனால் தொடர்ந்து இருக்கும் அல்லது வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சலை சந்திக்க நேரிடும். அஜீரண பிரச்சனை இருந்தாலும் இப்படியான அறிகுறிகள் தெரியும். ஆனால் சாதாரண அஜீரண கோளாறு என்றால் வழக்கமான சிகிச்சையில் சரியாகிவிடும். தீவிர பிரச்சனையாக இருந்தால் நீங்காமல் நீடித்திருக்கும். எனவே இந்த அறிகுறிகளை ஒருவர் வாரக்கணக்கில் தினமும் அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. குமட்டல்
பொதுவாக வயிறு தொடர்பான பிரச்சனைகளின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று குமட்டல். ஆனால் தொடர்ந்து உடல்நலம் சரியில்லாமல் இருந்து, காலையில் தினமும் வாந்தி அல்லது குமட்டலை சந்தித்தால், அது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் புற்றுநோய் கட்டியானது உணவுப் பாதையில் தடையை ஏற்படுத்தி, இதன் மூலம் வயிறு நிரம்பிய உணர்வை அல்லது குமட்டலை உண்டாக்கலாம். அதுவும் இரத்தம் கலந்த வாந்தியை எடுத்தால் அல்லது வாந்தி கருமை நிறத்தில் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
3. பசியின்மை
காலையில் சிறிது உட்கொண்டதுமே வயிறு நிரம்பினால் அல்லது பசி எடுக்காமல் இருந்தால், அதுவும் வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே ஒவ்வொருவரும் தங்களின் பசியில் ஏற்படும் ஏதேனும் மாற்றங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். திடீரென்று உங்களுக்கு பசி எடுக்காமல் இருப்பதை உணர்ந்தால், விரைவில் ஒரு மருத்துவரை அணுகுங்கள்.
4. எடை இழப்பு
எவ்வித டயட்டும் மேற்கொள்ளாமல் உடல் எடை குறைவதை உணர்கிறீர்களா? அதோடு காலையில் மிகுந்த பலவீனத்தையும் சந்திக்கிறீர்களா? வயிற்று புற்றுநோய் உள்ளவர்களுக்கு பசி அதிகம் எடுக்காது. அதன் விளைவாக உடல் எடையும் குறையத் தொடங்கும். மேலும் மிகுந்த உடல் சோர்வு அல்லது பலவீனத்தை சந்தித்தால், உங்கள் உடலில் ஒரு பெரிய பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எனவே எடை குறைந்தால் சந்தோஷப்படாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.
5. இரத்தம் கலந்த அல்லது கருமையான மலம்
யாரு ஒருவருக்கு வயிற்று புற்றுநோய் உள்ளதோ, அந்நபர் இரத்தம் கலந்த அல்லது கருமையான நிறத்தில் மலத்தை வெளியேற்றுவார். இதற்கு வயிற்றில் வளரும் கட்டிகள் சில நேரங்களில் இரத்தக்கசிவை ஏற்படுத்தி, அதன் விளைவாக கருமையான நிறத்தில் மலம் வெளியேறலாம். எனவே காலையில் எழுந்ததும் கழிவறையை பயன்படுத்தும் போது, இதை கவனிக்க மறக்காதீர்கள். மேலும் இந்த அறிகுறியை சந்தித்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகு பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
