Latest Updates
-
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும்
ஆண்கள் விந்தணுவை அதிகரிக்க எந்த மாதிரியான பழங்களை சாப்பிடணும் தெரியுமா?
Sperm Increasing Foods In Tamil: கறுவுறுதல் என்று வரும் போது, பெரும்பாலும் பெண்களின் கருவுறும் திறன் குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் திருமணமான தம்பதிகள் பெற்றோராக முயற்சிக்கும் போது, அதில் ஆண்களின் கருவுறும் திறனும் முக்கிய பங்கை வகிக்கிறது. கருத்தரிப்பதற்கு பெண்கள் மட்டும் நல்ல ஆரோக்கியமான கருப்பையைக் கொண்டிருந்தால் போதாது, ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மற்றும் அவற்றின் இயக்கம் ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளின் காரணமாக கருவுறும் திறனானது பாதிக்கப்படுகிறது. குறிப்பாக ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் இயக்கம் மோசமாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக தனது துணையை கருத்தரிக்க வைக்க முடியாமல் போகிறது.

அதிர்ஷ்டவசமாக, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும் பல உணவுகளை இயற்கை நமக்கு அளித்துள்ளது. முக்கியமாக சில பழங்கள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. நீங்கள் பழப் பிரியர் என்றால், உங்களின் விந்தணு ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், பின்வரும் பழங்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
1. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, கிரேப் ஃபுரூட், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமின்றி, கருவுறுதலுக்கு நன்மை விளைவிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. இந்த வகை பழங்களில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்களால் விந்தணு செல்களில் எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. இதன் விளைவாக விந்தணுக்களின் தரமும், இயக்கமும் மேம்படும். எனவே விந்தணு பிரச்சனைகள் வரக்கூடாதெனில் ஆண்கள் சிட்ரஸ் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
2. பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் கண்களைப் பறிக்கும் நிறத்தில் இருப்பதோடு, புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையைக் கொண்டிருப்பதால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த வகை பழங்கள் கருவுறும் திறனை மேம்படுத்துகிறது. இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் விந்தணு ஆரோக்கியத்திற்கு ஆதரவை அளிக்கின்றன. ஆகவே விந்தது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் இந்த வகை பழங்களை அதிகம் உட்கொண்டு வருவது நல்லது.
3. வாழைப்பழம் மற்றும் அவகேடோ
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இவை விந்தணு உற்பத்திக்கு உதவுகின்றன. கூடுதலாக இதில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் ஆரோக்கியமான விந்தணு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. அதே சமயம், அவகேடோ பழத்தில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை, விந்தணுக்களை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
4. மாதுளை
மாதுளைக்கு கருவுறுதலை மேம்படுத்தும் ஆற்றல் உண்டு. அதனால் தான் நீண்ட காலமாக கருவுறுதலை மேம்படுத்த இப்பழம் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இப்பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் விந்தணுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலும் அவற்றின் ஆரோக்கியம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகின்றன. எனவே விந்தணு பிரச்சனைகள் வரக்கூடாதெனில் மாதுளையை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
5. தர்பூசணி
தர்பூசணி உடலை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுவது மட்டுமின்றி, விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதுவும் இவற்றில் உள்ள லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக இந்த லைகோபைன் ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து விந்தணுக்களை பாதுகாக்க உதவி புரிந்து, விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்துகிறது. எனவே தர்பூசணி பழம் கிடைத்தால், அதை தவறாமல் வாங்கி அடிக்கடி சாப்பிடுங்கள்.
6. கிவி
கிவி பழத்தின் மேற்புறம் சற்று வித்தியாசமாக இருந்தாலும், அதன் புளிப்புச் சுவை உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அதுவும் இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
7. கொய்யாப்பழம்
ஆம், கொய்யாப்பழம் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் விந்தணு செல்களில் எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. கூடுதலாக கொய்யாவில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகின்றன. ஆகவே தான் ஆண்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
8. மாம்பழம்
பழங்களின் ராஜாவான மாம்பழம் ஒரு கோடைக்கால பழமாகும். இது மிகவும் சுவையானது மட்டுமின்றி, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. எப்படியெனில், மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரி ராடிக்கல்களால் விந்தணுக்களில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. எனவே கருவளத்தை மேம்படுத்த நினைக்கும் ஆண்கள் மாம்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
9. அன்னாசிப்பழம்
அன்னாசிப் பழம் சுவையான பழம் மட்டுமல்லாமல், ஆண் கருவளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இப்பழத்தில் உள்ள புரோமிலைன் என்னும் நொதி, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இனப்பெருக்க அமைப்பில் ஏற்படும் அழற்சியானது விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தை பாதிக்கும். அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், வீக்கம் குறைகிறது. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு அதிகமாக உள்ளது, இது கூடுதல் ஆக்ஸிஜனேற்ற ஆதரவை வழங்குகிறது. எனவே விந்தணு எண்ணிக்கை குறைபாட்டை சந்திக்கும் ஆண்கள் இப்பழத்தை உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
10. ஆப்பிள்
ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன். க்யூயர்சிடின் என்னும் கலவையானது விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் சேதத்தில் இருந்து விந்தணு செல்களை பாதுகாக்கிறது, விந்தணு இயக்கத்தை ஆதரிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே ஆரோக்கியமான விந்தணுக்களை பெற விரும்பும் ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications