Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அப்படி பார்த்தா என்ன நடக்கும் தெரியுமா?
Solar Eclipse 2023 In Tamil: ஆண்டுதோறும் அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என வானத்தில் அதிசயங்கள் அவ்வவ்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், 2023 நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி இன்று நிகழ்கிறது. இந்தியாவில் காலை 07:05 மணி முதல் மதியம் 12:29 மணி வரை இந்த கிரகணம் தெரியும்.
சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் சந்திரன் வருவதால், சூரியனின் ஒளி பூமிக்கு தெரியாமல் மறைக்கப்படும் நிகழ்வு தான் சூரிய கிரகணமாகும். இந்த ஆண்டில், இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழ இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

வானில் நிகழும் அதிசயங்களை காண மக்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. அவற்றை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் கண்களைப் பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டியது அவசியம். கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கிரகண கிளாஸ், சன்கிளாஸ் போன்ற சிறப்பு கண் பாதுகாப்பு கிளாஸ்கள் அணிய வேண்டும்.
மேலும், தொலைநோக்கியை கொண்டும் நீங்கள் கிரகணத்தை பார்க்கலாம். சூரிய கிரகணத்தை ஏன் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்றும் நேரடியாகப் பார்க்கும்போது உங்கள் கண்களில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
விழித்திரை பாதிப்பு
சூரிய கிரகணங்கள் நம்பமுடியாத அளவிற்கு பிரகாசமானவை. அவற்றை நேரடியாக வெறும் கண்ணால் உற்றுப் பார்ப்பது கண்ணின் விழித்திரையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். இது மங்கலான பார்வை மற்றும் தெளிவற்ற பார்வை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் மொத்தமாக கண் பார்வையை இழக்க நேரிடலாம். அதனால், உரிய பாதுகாப்பு கிளாஸ் இல்லாமல், சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்காதீர்கள்.
பார்வை குறைப்பாடு
சூரிய கிரகணத்தைப் பார்ப்பது சோலார் ரெட்டினோபதி எனப்படும் ஒரு நிலையை ஏற்படுத்தும். இது பார்வை குறைபாட்டின் ஒரு நிலையாகும். வெறும் கண்ணால் கிரகணத்தை நீங்கள் பார்க்கும்போது, தீவிர ஒளி விழித்திரையில் உள்ள ஒளிச்சேர்க்கை செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இது கண்களின் பார்வைக் கூர்மை குறைவதற்கு வழிவகுக்கிறது.
புற ஊதா கதிர்வீச்சு
சூரிய கிரகணங்கள் அதிகளவு புற ஊதா கதிர்வீச்சை வெளியிடுகின்றன. பொதுவாக புறஊதா கதிர்கள் நம் சருமத்திற்கும், கண்களுக்குள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். சூரிய கிரகணத்தின்போது, வெளிப்படும் புறஊதா கதிர்களை நீங்கள் வெறும் கண்ணால், பார்ப்பது கண் ஆரோக்கியத்தை மொத்தமாக பாதிக்கும்.
ஆதலால், சூரிய கிரகணத்தைப் பார்க்கும்போது சன்கிளாஸ்கள், சிறப்பு கிளாஸ் மற்றும் கண் பாதுகாப்புக்கான பிற வடிவங்களைப் பயன்படுத்தி பார்க்க நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒளியியல் மாயைகளை ஏற்படுத்தலாம்
சூரிய கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பது சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் அல்லது வானத்தில் வண்ணங்களின் வானவில் போன்ற ஒளியியல் மாயைகளை ஏற்படுத்தும். இந்த மாயைகள் உங்களை திசைதிருப்பலாம் மற்றும் சிலருக்கு தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் குமட்டலை ஏற்படுத்தலாம். ஆதலால், சூரிய கிரகணத்தின்போது, வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளே இருப்பது நல்லது.
கண் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்
சூரிய கிரகணத்தைப் பார்ப்பது கண்களில் உள்ள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது தலைவலி மற்றும் கண் சோர்வுக்கு வழிவகுக்கும். கிளௌகோமா மற்றும் மாகுலர் டிஜெனரேஷன் போன்ற கண் பிரச்சனைகள் உள்ளவர்கள் வெறும் கண்ணால் சூரிய கிரகணத்தை பார்ப்பது மிகவும் ஆபத்தானது.
இறுதிக் குறிப்பு
சூரிய கிரகணத்தைக் காண உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இந்த அற்புதமான காட்சியைப் பார்க்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். அதே சமயம் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு முன், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டிருப்பது முக்கியம். பாதுகாப்பு கிளாஸ்களை அணிந்துகொண்டு அதை காணுங்கள். சூரியனைப் பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கிரகண கண்ணாடிகள் கடைகளில் உங்களுக்கு கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

