Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்கள் தினமும் ஊற வைத்த 6 உலர் திராட்சையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Soaked Raisin Benefits For Men: திராட்சையில் இருந்து பெறப்படும் உலர் திராட்சை நிறைய பேரின் விருப்பமான ஒரு உணவுப் பொருள். இந்த உலர் திராட்சை ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. அதுவும் இதில் சிறிது இயற்கை சர்க்கரை இருந்தாலும், இவற்றில் இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்றவையும் அதிகமாக உள்ளன.
இந்த உலர் திராட்சையை என்ன தான் பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல் போன்றவற்றில் சேர்த்து வந்தாலும், அதை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற்று, இரட்டிப்பு நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக ஆண்கள் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை தினமும் சிறிது சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

முக்கியமாக திருமணமான ஆண்கள் ஊற வைத்த உலர்திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் பாலியல் தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து, சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இப்போது ஆண்கள் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
பாலியல் ஆற்றல் அதிகரிக்கும்
உலர் திராட்சையானது டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கும் உணவுகளின் வகையைச் சேர்ந்தது. எனவே திருமணமான ஆண்கள் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடும் போது, பாலியல் ஆற்றல் அதிகரிக்கிறது. இதன் மூலம் வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். எனவே பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம்
ஆண்கள் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்ளும் போது, அதில் உள்ள அர்ஜினைன் என்னும் புரோட்டீன் உடலுக்கு கிடைத்து, விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆகவே விந்து தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விந்தணுக்களின் தரத்தையும் இயக்கத்தையும் மேம்படுத்தலாம்.
விறைப்புத்தன்மை கோளாறு
பாலியல் பிரச்சனையான விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள், அதிலிருந்து விடுபட நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வது நல்லது. இப்படி தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
உலர் திராட்சையை எப்படி சாப்பிட வேண்டும்?
உலர் திராட்சையை வெறுமனே சாப்பிடுவதை விட, அதை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது தான் அதன் முழு சத்தையும் பெற முடியும். அதுவும் அதை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்கும் போது, அதன் மேற்புறத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை கரைத்துவிடுகிறது. இதன் மூலம் அந்த சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. மேலும் ஊற வைக்கும் போது உலர் திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இன்னும் அதிகரிக்கிறது.
அதற்கு முதலில் இரவு தூங்கும் முன் 1 டம்ளர் நீரில் 6 உலர் திராட்சையை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் அந்த உலர் திராட்சையை சாப்பிட்டு, நீரை குடிக்க வேண்டும். இப்படி உட்கொள்வதன் மூலம், உலர் திராட்சையின் முழு பலனைப் பெறலாம்.
ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகள்:
* மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் சீராக நடக்கும்
* இரத்த சோகை தடுக்கப்படும்
* அசிடிட்டி தடுக்கப்படும்
* எடை இழப்புக்கு உதவும்
* இதய நோயின் அபாயம் குறையும்
* புற்றுநோய் செல்களை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்
* கண் ஆரோக்கியம் மேம்படும்
* சரும ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
* இரத்த சர்க்கரை குறையும்
* நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
* எலும்புகள் வலுபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications