Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
எச்சரிக்கை! உங்க தலைவலி இப்படி இருந்தால் அது சாதாரண தலைவி இல்லையாம்... உயிருக்கே ஆபத்தாகலாமாம்...!
தலைவலி தான் அனைத்து உடல் வலிகளிலும் கொடுமையானது. தலைவலி வந்தால் வேறு எந்த வேலையிலும் நம்மால் கவனம் செலுத்த முடியாது. அப்படி வரும் தலைவலிகளை பெறும்பாலானோர் தாங்களே ஒரு மாத்திரையை வாங்கிப் போட்டோ அல்லது தலைவலி தைலம் தேய்த்துக் கொண்டோ சிறிது நேரம் தூங்கி விடுவார்கள். இவ்வாறு செய்வதால் அந்த நேரத்திற்கு அது சரியானது போல தோன்றும்.
தலைவலி என்பது பொதுவாக காய்ச்சல், சளி, சைனஸ், உடற்சொர்வு, மன அழுத்தம், அதிக நேரம் கம்பூட்டர் மற்றும் செல்போன் பார்ப்பது மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்றப் பிரச்சனைகளால் வரக்கூடும்.

இப்படிப்பட்ட தலைவலிகள் வரும் அதற்கென மாத்திரைகளை அடிக்கடி போடுவதால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், சில சமயங்களில் தலைவலி என்பது பெரிய பிரச்சனைகளின் முன் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
தலைவலி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு விதமான தலைவலியும் ஒவ்வொரு பிரச்சனையின் அறிகுறி இருக்கலாம். இங்கே குறிபிட்டுள்ள விதமான தலைவலிகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்குத் தகுந்த மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.
இடி இடிப்பது போன்ற தலைவலி
தலைக்குள் இடி இடிப்பது போன்ற தலைவலி ஒரு நிமிடத்திற்கு மேல் ஏற்பட்டால் அது மூளையில் சிறியதாக இரத்த கசிவு ஏற்பட்டதை உணர்த்துவதாகும். இவ்வாறு அடிக்கடி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மாறுபட்ட தலைவலி
தலைவலி ஒரே மாதிரியாக இல்லாமல், வலி ஏற்ற இறக்கத்தோடு இருந்தால், அவ்வபோது ஏற்பட்டால் குருதி நாள நெளிவு அல்லது ஒற்றை தலைவலி உங்களுக்கு இருக்கலாம் என்று அர்த்தம்.
கண்களுக்குப் பின்புறமாக வலி
வலி தலையில் இல்லாமல் கண்களுக்குப் பின்புறமாகவோ அல்லது கண்களை சுற்றியோ இருந்தால் உங்களுக்கு க்ளாக்கோமா அல்லது சைனஸ் உள்ளதை குறிப்பதாக இருக்கலாம்.
நெற்றி வலி
உங்களுக்கு நெற்றியின் இரண்டுப் பக்கங்களிலும் வலி அதிகமாக இருந்தால் அது ஏதாவது ஒரு இதய நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களுக்கு இது மிகப் பொருந்தும்.
காலையில் வரும் தலைவலி
இரவில் தூங்கும் போது மூக்கு எரிச்சல் இருந்தால் அது காலையில் எழுந்திருக்கும் போது தலைவலியை உண்டு செய்யும். இந்த தலைவலி சைனஸ் இருப்பதை குறிப்பதாக இருக்கலாம்.
பக்கவாதம்
தலைவலி, மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றால் நீங்கள் ஒரு மாதத்திற்கு மேலாக அவதிப்பட்டு வருகின்றீர்களா? எனில் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாக அருக்கலாம். உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து விடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
