Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
பெண்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களின் இடுப்பு தசைகள் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
தற்போதைய துரிதமான காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு இடுப்புப் பகுதியின் தசைகள் பலவீனமாக உள்ளன, இது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட இது வெகுவாக பாதிக்கலாம். இடுப்புப்பகுதி தசைகள் சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் மலக்குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் அமைப்பை உருவாக்குகின்றன.
இந்த தசைகள் உங்கள் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், உங்கள் சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்துவதற்கும், பாலியல் செயல்பாடுகளுக்கும் முக்கியம். பலவீனமான இடுப்பு தசைகள் சிறுநீர் மற்றும் மலத்தை கட்டப்படுத்த இயலாமை, இடுப்பு உறுப்பு வீழ்ச்சி மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் கவனிக்க வேண்டிய பலவீனமான இடுப்பு தசைகளின் சில பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுநீரை கட்டுப்படுத்த இயலாமை
பெண்களில் பலவீனமான இடுப்பு தசைகளின் பொதுவான அறிகுறி சிறுநீர் கட்டுப்படுத்த இயலாமையாகும், அதாவது தன்னிச்சையாக சிறுநீர் கசிவது. தும்மல், இருமல் அல்லது உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளின் போது இதை நீங்கள் அனுபவிக்கலாம். உங்களுக்கு திடீரென, அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தால் உங்கள் இடுப்பு பகுதி தசைகள் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.
உடலுறவின் போது வலி
பலவீனமான இடுப்பு தசைகள் கொண்ட பெண்கள் வலிமிகுந்த உடலுறவை அனுபவிக்கலாம். இந்த தசைகள் பாலியல் செயல்பாட்டிற்கு முக்கியமானவை மற்றும் அவை பலவீனமாக இருக்கும்போது, உடலுறவின் போது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் நீங்கள் குறைவான பாலியல் திருப்தியையும் அனுபவிக்கலாம்.
இடுப்பு உறுப்பு வீழ்ச்சி
சிறுநீர்ப்பை, கருப்பை அல்லது மலக்குடல் உள்ளிட்ட இடுப்பு உறுப்புகள் வழக்கமான நிலையில் இருந்து கீழே நழுவி யோனி சுவர்களுக்கு அருகில் வரும்போது இடுப்பு உறுப்பு வீழ்ச்சி ஏற்படுகிறது. இது சிறுநீர்ப்பை அல்லது குடலை சுத்தம் செய்வதை கடினமாக்குகிறது மற்றும் இடுப்பு வலி அல்லது கனமான உணர்வை ஏற்படுத்தும்.
சிறுநீர்ப்பை அல்லது குடலை காலி செய்வதில் சிரமம்
பெண்களில் பலவீனமான இடுப்பு தசைகளின் மற்றொரு அறிகுறி சிறுநீர்ப்பை அல்லது குடலை காலி செய்வதில் சிரமம் ஏற்படுவது. இது சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
முதுகு வலி
பலவீனமான இடுப்பு தசைகள் முதுகுவலியை ஏற்படுத்தும். முதுகெலும்பை ஆதரிக்க, இந்த தசைகள் பின்பக்க தசைகள் மற்றும் வயிற்று தசைகளுடன் ஒத்துழைக்கின்றன. தவறான தோரணையில் அமர்வது மற்றும் முதுகுவலி அவர்களின் பலவீனமான தசைகளால் ஏற்படலாம்.
பிறப்புறுப்பிலிருந்து காற்று வெளியேறுவது
புணர்புழையில் இருந்து வெளிப்படும் காற்று க்யூஃபிங் அல்லது யோனி வாய்வு என குறிப்பிடப்படுகிறது. மேலும், இது பலவீனமான இடுப்பு தசைகளின் அறிகுறியாகும், இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த தசைகள் யோனி வழியாக காற்று போன்ற பொருட்களின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
நீண்டகால இடுப்பு வலி
பெண்களில் பலவீனமான இடுப்பு தசைகளின் மற்றொரு அறிகுறி நீண்டகால இடுப்பு வலி. இந்த அசௌகரியம் வழக்கமானதாக இருக்கலாம் அல்லது சீரான இடைவெளியில் நிகழலாம், மந்தமான, கடுமையான அல்லது தசைப்பிடிப்பு போன்றவற்றால் இது ஏற்படலாம். உங்களுக்கு தொடர்ந்து இடுப்பு வலி இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது, ஏனெனில் இது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


