Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
Shikhar Dhawan: தனது ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்... 38 வயதில் இவர் இவ்வளவு ஃபிட்டாக இருக்க இதாங்க காரணம்...
Shikhar Dhawan: இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இன்று தனது எக்ஸ் தளத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். 38 வயதுடைய ஷிகர் தவான் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக செயல்பட்டவர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு இந்திய அணியில் எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கவில்லை. வெறும் ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்று வந்த ஷிகர் தவான் இன்று கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு எடுப்பதாக அறிவுத்துள்ளார். ஷிகர் தவானின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இடதுகை பேட்ஸ்மேன்னான ஷிகர் தவான் கடைசியாக இந்திய கிரிக்கெட் அணிக்காக 2022 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன் பின் அவர் இந்திய அணிக்காக வேறு எந்த ஒரு போட்டிலும் கலந்து கொள்ளவில்லை.
ஷிகர் தவான் என்ன தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், 38 வயதிலும் அவர் ஃபிட்டான உடலை பராமரிக்க ஒருசில டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவரானால், ஷிகர் போன்று நீங்களும் ஃபிட்டாக இருக்க விரும்பினால், ஷிகரின் ஃபிட்னஸ் மற்றும் டயட் ரகசியங்களைத் தெரிந்து, முடிந்தவரை நீங்களும் அவற்றை சரியான பயிற்சியாளரின் உதவியுடன் மேற்கொள்ளுங்கள்.
ஷிகர் தவானின் உடற்பயிற்சி முறை
ஷிகர் தவான் வாரந்தோறும் 1-2 கார்டியோ பயிற்சிகளுடன் 2-3 தீவிர ஜிம் பயிற்சிகளிலும் ஈடுபடுவார். வாரத்திற்கு 5 நாட்கள் தவறாமல் ஜிம்மிற்கு செய்யும் ஷிகர், வாரத்திற்கு 3 நாட்கள் எடை பயிற்சியையும், மீதமுள்ள 2 நாட்கள் கார்டியோ பயிற்சிகளிலும் கவனத்தை செலுத்துவாராம்.
இன்டர்வியூ ஒன்றில், ஷிகர் தவான் தினமும் தனது உடற்பயிற்சியை தொடங்கும் முன் குறைந்தது 30 நிமிடங்கள் வார்ம் அப் செய்வதோடு, குளுட் பயிற்சிகள், மொபிலிட்டி பயிற்சிகள், ஸ்ட்ரெட்ச் மற்றும் பலவிதமான பயிற்சிகளை செய்வதாக தெரிவித்துள்ளார்.
தவானுக்கு க்ளுட் பயிற்சிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதற்கு பதிலாக தசையை வளர்க்கும் எடை தூக்கும் பயிற்சிகளை செய்ய அதிகம் விரும்புவதாகவும் ஷிகர் தெரிவித்துள்ளார். ஷிகர் தவானுக்கு ஓட்ட பயிற்சிகள் மிகவும் பிடிக்குமாம். ஓடுவதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே உடற்பயிற்சி செய்வதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்களாவது ஓடுவாராம்.
ஷிகர் தவானின் மேற்கொள்ளும் யோகாக்கள்
ஷிகர் தவான் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வெறும் ஜிம்மில் மட்டும் உடற்பயிற்சி செய்யமாட்டாராம். இவர் ஒரு யோகா பிரியராம். தினமும் யோகா செய்வது மிகவும் அவசியம் என்று நம்புபவர். தவான் தினமும் மூச்சு பயிற்சிகளை மேற்கொள்வாராம். இது அவரது உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறதாம். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து அவர் சூரிய நமஸ்காரத்தை செய்வாராம். இது உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், உடற்பயிற்சிக்கு உடலை தயார் செய்யவும் உதவுகிறதாம்.
ஷிகர் தவானின் டயட்
ஷிகர் தவான் ஒரு சமச்சீரான டயட்டைப் பின்பற்றுகிறார். இந்த டயட்டில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள் ஆகியவை அடங்கும். இவரது உணவில் காய்கறிகள், சீசன் பழங்கள் போன்றவை அதிகம் இருக்கும். ஏனெனில் இவற்றில் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. மேலும் ஷிகர் தவான் க்ரில் சிக்கன், உருளைக்கிழங்கு, மீன், ப்ராக்கோலி மற்றும் பிற காய்கறிகளையும் உட்கொள்வார். கூடுதலாக, இவர் ஆலு பராத்தா, தோசை, சிக்கன் குழம்பு ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவாராம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications