'சலார்' படத்தில் சிக்ஸ் பேக் வைத்து அசர வைத்த நடிகர் பிரபாஸின் ஃபிட்னஸ் ரகசியம் இதாங்க...

பாகுபலி என்னும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்த பின் நடிகர் பிரபாஸ் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்துள்ளார். என்ன தான் இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பாகுபலிக்கு பின் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துவிட்டது. நடிகர் பிரபாஸிற்கு 44 வயது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஏனெனில் அந்த அளவில் அவர் இன்னும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் பிரபாஸ் தனது படங்களுக்கு ஏற்றவாறு முழு அர்ப்பணிப்புடன் தனது உடலை மாற்றிக் கொள்ளக்கூடியவர். இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்தால், ஒவ்வொன்றிலும் இவர் ஒவ்வொரு மாதிரியான தோற்றத்தில் காணப்படுவார். அந்த அளவில் இவர் முழு அர்ப்பணிப்புடன் வேலையை செய்யக்கூடியவர்.

Salaar Actor Prabhas Fitness Diet Workout And Eating Habits In Tamil

இன்று நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் பிருத்விராஜ் நடித்த சலார் திரைப்படம் வெளியானது. இந்த படத்திலும் இவர் சிக்ஸ் பேக் வைத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். இவ்வளவு அற்புதமாக உடலைப் பராமரிக்க இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று பலரும் யோசிக்கலாம். இப்போது நடிகர் பிரபாஸ் தனது திரைப்படங்களுக்காக தனது உடலை மாற்ற எப்படியெல்லாம் உழைத்துள்ளார் என்பதைக் காண்போம்.

தசைகளை அதிகரிக்க...

எப்போதும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளும் நடிகர் பிரபாஸ், தனது திரைப்படங்களுக்காக உடல் எடையை அதிகரிக்கவும் செய்துள்ளார். அதுவும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் வேடத்தில் நடிக்க பிரபாஸ் தனது தசைகளை அதிகரிக்க, ஒரு நாளைக்கு 15 முட்டைகளை சாப்பிட்டுள்ளார். மேலும் தனது உடலமைப்பை அழகாக பராமரிக்க இவர் 30 சதவீதம் உடற்பயிற்சியையும், 70 சதவீதம் டயட்டையும் நம்பியுள்ளார். அதோடு உடல் எடையை அதிகரிக்க பிரபாஸ் ஒரு நாளைக்கு 6 வேளையும் ஹெவி உணவுகளை சாப்பிட்டுள்ளார்.

சிரமமின்றி உடல் எடையைக் குறைக்க இந்த ட்ரிக்ஸை தான் பின்பற்றுவாராம்...

ஆதிபுருஷ் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்க 15 முட்டைகளை ஒரு நாளைக்கு சாப்பிட்ட பிரபாஸ், சாஹோ என்னும் திரைப்படத்தில் சிக்கென்று இருக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடாமல், விளையாட்டின் மூலம் உடல் எடையைக் குறைத்துள்ளார். அதுவும் நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கைப்பந்து விளையாடி 10 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ளார் என்றால் பாருங்கள்.

கட்டுக்கோப்பான உடலுக்காக பின்பற்றுபவை...

நடிகர் பிரபாஸ் தனது உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்காக தினமும் 6 மணிநேரம் செலவிடுவாராம். இவர் அதிகம் வியர்ப்பதைப் பற்றி சற்றும் கவலைப்படமாட்டாராம். அதுவும், இப்படியான 6 மணிநேர ஒர்க்அவுட்டை பாகுபலி படத்திற்காக இவர் மேற்கொண்டுள்ளார்.

பிரபாஸைப் பொறுத்தவரை, உடற்பயிற்சியானது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் ஒரு சிறந்த வழி. மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள நினைத்தால், உடற்பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது என்று கூறுகிறார்.

இது தவிர பிரபாஸ் ஃபிட்டாக இருப்பதற்கு மற்றொரு காரணம், இவர் தினமும் போதுமான அளவு தூக்கத்தை தவறாமல் மேற்கொள்வாராம். தூக்கம் ஒருவரது ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை இவர் நம்புகிறார். எனவே எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் போதுமான அளவு தூக்கத்தை தவறாமல் பெறுவாராம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, December 22, 2023, 20:30 [IST]
Desktop Bottom Promotion