Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பழங்கள் சாப்பிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்... இல்லனா நல்லத விட கெட்டதுதான் அதிகமாகும்...!
பழங்கள் உங்கள் உணவின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இது உங்களுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை வழங்குகிறது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க வழக்கமாக பழங்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
பழங்கள் ஆரோக்கியமானவை என்பது உண்மைதான், ஆனால் மற்ற உணவுகளைப் போலவே, பழங்களை சாப்பிடுவதற்கும் சில விதிகள் உள்ளன. பழங்களில் இருந்து முழுமையான நன்மைகளைப் பெறுவதற்கு அவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதும் ப்ரெஷான பழங்களை சாப்பிட வேண்டும்
பழங்கள் எப்போதும் ப்ரெஷாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழைய அல்லது கெட்டுப்போன பழங்களை உண்பதால் நீங்கள் நோய்வைடப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், பழங்கள் புதியதாக இருக்கும்போது மட்டுமே மிகவும் சத்தானவையாக இருக்கிறது.
ஆரோக்கியமான கொழுப்புகள்
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, நீங்கள் பழங்களை சாப்பிட்டால் ஆரோக்கியமான பொருட்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். பாதாம் போன்ற ஊறவைத்த சில நட்ஸ்களை சாப்பிடுவது உங்களுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்க முடியும்.
பருவகால பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்
பருவகால பழங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்றும், நீண்ட காலமாகப் பாதுகாக்கப்படும் பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் நீண்ட காலத்திற்கு சேமிக்கப்படும் போது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கின்றன, எனவே புதிய மற்றும் பருவகாலங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
தோலை தூக்கி எரியாதீர்கள்
ஒரு பழத்தில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் பெற விரும்பினால், தோலையும் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆப்பிள் மற்றும் ஆப்ரிகாட் போன்ற பழங்களில் மெல்லிய தோல்கள் உள்ளன, அவை நார்ச்சத்து நிறைந்தவை. இந்த பழங்களை உரிப்பது என்பது அவற்றின் நன்மைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கிறது.
பழத்தை சாறாக குடிக்கக்கூடாது
ப்ரெஷான தர்பூசணி அல்லது மாம்பழச்சாறைக் குடிப்பது உங்கள் காலை உணவை மேம்படுத்தலாம் ஆனால் முழு பழத்தையும் சாப்பிடுவது அதைவிட சிறந்த வழியாகும். பழச்சாறு மட்டுமல்ல, பழத்தின் கூழிலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே பழத்தை சாறாக பிழியாமல் மென்று சாப்பிடுங்கள்.
பழம் சாப்பிடும் நேரம் முக்கியமானது
பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட்டாலும், அவை எப்போதும் ஒரே சுவையாக இருக்கும். ஆனால் முக்கிய உணவுகளுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகிறார். அதற்கு பதிலாக, உடற்பயிற்சிகளுக்கு முன் பழங்களை உண்ணவும் அல்லது காலை சிற்றுண்டியாகவும் பழங்களை சாப்பிடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
